ஆசிரியர் தாத்தாவின் புத்தாண்டு - பொங்கல் வாழ்த்துகள்
செல்லும் 2007ஆம் ஆண்டு பற்பல வகையிலும் தமிழ் மக்களுக்கு ஒல்லும் வகையால் வெல்லும் புத்தாண்டாகவே அமைந்தது; இயற்கையின் இடரும் அதிகமில்லை.
வரும் 2008ஆம் ஆண்டு, விடியலை ஏற்படுத்தும் வெள்ளி முளைக்கும், வெங்கதிரோன் ஒளிபாயும் ஒளிமிகுந்த புத்தாண்டாக மலரட்டும்!
ஈழத்தில் அமைதி திரும்பி, என்னருந்தமிழர்கள் - சுயமரியாதை வாழ்வு - சுகவாழ்வு வாழ வாய்ப்பேற்படுத்தும் புத்தாண்டாக அமையட்டும்!
சமூகநீதியின் வெற்றிக் கனிகள் குலுங்கட்டும்!
அனைவருக்கும் தமிழர் தம் புத்தாண்டில் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்
கி. வீரமணி |