> ஆசிரியர் தாத்தாவின்
> பெரியார் தாத்தா 40
> உடல் அறிவோம்
> தமிழறிஞர்

> படக்கதை

> புரட்சிக்கவிஞர்
> குட்டிக்கதைகள்
> அ[ய்]வன்
> உடல் அறிவோம்
> மனித இன வரலாறு
> உலகநாடுகள்
> உலக நடப்பு

உலக அதிசயம்

`கிளாடியேட்டர் திரைப்படத் தின் தமிழ்ப்பதிப்பை நாம் தொலைக்காட்சிகளில் பார்த் திருக்கிறோமல்லவா? புலிக்கும் மனிதனுக்கும் சண்டை நடக்கும் கொடூரமான காட்சியினை ஆயிரக் கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்டு ஆரவாரிப்பார்களே அந்த அரங்கம்தான் கொலோசியம். கணினியின் உதவியால் பழைய பொலிவுடன் கி.பி. 2000-இல் உருவாக்கப்பட்ட கொலேசியம் தான் அப்படத்தில் வந்தது.
உண்மையில் கொலோசியம் கி.பி. 70-ஆம் ஆண்டு வாக்கில் பேரரசர் வெஸ்பாகியன் காலத்தில் கட்டத் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டு அரங்கம் கி.பி. 80 ஆம் ஆண்டு டைட்டஸின் ஆட்சிக் காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.
ரோம் நகர் எரிந்தபோது நீரோ மன்னர் பிடில் வாசித்துக் கொண்டிருந்தான் என்று படித்திருக்கிறோம் அல்லவா? அது நிகழ்ந்தது கி.பி. 64-இல். அதன் பின் ரோமின் பெரும் பகுதிகளை வளைத்து தனது விருப்பத்துக் கேற்ப மாற்றிக் கொண்டான் நீரோ. தன் உருவத்தில் பெரிய சிலையையும் அதனை யொட்டிய பெரும் பகுதியில் ஏரி ஒன்றையும், பூங்காக்களையும் அமைத்துக்கொண்டான்.
அவனுக்குப் பின் அரசாள வந்த வெஸ்பானி யனும் அவனது பிளாவியா பரம்பரையும் அந்தப் பகுதிகளை மாற்றினர். ஏரி இருந்த இடம் நிரப்பப்பட்டு, அவ்விடம் புதிய மாபெரும் விளையாட்டு அரங்கக் கூடம் கட்டத் தேர்ந் தெடுக்கப்பட்டது. அதனையொட்டி வீரர்களுக் கான வீர விளையாட்டுப் பயிற்சிக் கூடங்கள், ஓய்விடங்கள் என விளையாட்டரங்கம் தொடர் பானவை கட்டப்பட்டன.
முதலில் ஆம்ஃபிதியேட்டர் பிஃளாவியம் (ஹஅயீ கூநயவசந குடயஎரைஅ) என்றே அழைக்கப் பட்டது. பிளாவியம் என்பது வெஸ்பஸியன், அவர் மகன் டைட்டஸ் ஆகியோரின் அரசு மரபைக் குறிப்பதாகும். நீரோவின் மிகப் பெரிய சிலை (ஊடிடடிளளரள ளுவயவரந) அங்கிருந்த காரணத்தால் காலப்போக்கில் கொலோசஸ் என்ற பெயர் நிலைத்து `கொலோசியம் என்றே உலகம் முழுக்கப் புகழ் பெற்றுவிட்டது.
ரோம் கட்டடக் கலையினை எடுத்துக் காட்டும் சின்னங்களுள் ஒன்றாக விளங்கும் இந்த கொலோசியத்தை கட்டத் தொடங்கிய வெஸ்டானியன் கி.பி.79-இல் இறக்கும்போது, இதன் மூன்றாம் அடுக்கு வரை நிறை வடைந்திருந்தது. அதன் பிறகு இதனை முழுமையாக முடித்து அவர் மகன் டைட்டஸ் கி.பி.80-ல் திறந்துவைத்தார்.


கொலேசியத்தின் தொடக்க விழாப் போட்டிகளில் மட்டும் 9000 வனவிலங்குகள் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன. வெஸ்பாஸியனின் இளையமகன் டொமிடியன் காலத்தில் கொலோசியத்தின் கீழ் சுரங்க அறைகள் கட்டப்பட்டன. அடிமைகளையும் விலங்குகளையும் அவற்றில் பாதுகாத்தனர். கொலோசியத்தின் மேல் தளமும் உயர்த்திக் கட்டப்பட்டு அதன் இருக்கை வசதி அதிகரிக் கப்பட்டது.
பின் வந்த நூற்றாண்டுகளில் தீ விபத்துக் கும், நில நடுக்கத்துக்கும் உள்ளாகி பின்னர் பல முறை புதுப்பிக்கப்பட்டது.
ஆரம்பக் காலந்தொட்டு நீண்டகாலம் இதில் வீரவிளையாட்டுகள் எனும் பெயரில் மனித னோடு மனிதனையும் கொடிய காட்டு விலங்கு களையும் சண்டையிடச்செய்தனர். அதில் யாரோ ஒருவரின் கோரமான மரணத்தை மக்கள் கண்டு ரசித்து ஆர்ப்பரித்து வரவேற்கும் படியான காட்டுமிராண்டி விளையாட்டுகளே நடைபெற்றன. அவைபோக விலங்குகளை ஓடவிட்டு வேட்டையாடும் விளையாட்டு களும் நடைபெற்றன. கி.பி. 435 -இல் தான் வீரவிளையாட்டுகள் எனும் பெயரில் நடை பெற்றுவந்த விளையாட்டுகள் முடிவுக்கு வந்தன. பின்னர் விலங்குகளை வேட்டை யாடும் விளையாட்டுகளும் நின்று போயின.
இவை தவிர பழம் பெருமை வாய்ந்த நாடகங்களை நடிக்கவும், கலை நிகழ்ச்சி களுக்கும் பயன்பட்டது சில காலம். பன்னிரண்டாம் நூற்றாண்டில் இதனை பல பகுதிகளாக கூறுபோடப்பட்டு வாடகைக்கு விடப்பட்டன. பின்னர் 1349 -ஆம் ஆண்டில் நிகழ்ந்த மிப்பெரிய நில நடுக்கத்தில் இதன் தென் புறச் சுற்றுச்சுவர் பாதிக்கப்பட்டது. இதன் கற்கள் பல்வேறு கட்டடங்களுக்காக பின்னர் பறித்துக் கொண்டு போகப்பட்டன.
இதன் வட்டவடிவமான அமைப்பில் 189 மீட்டர் (615 அடி) நீளமும். 156 மீட்டர் அகலமும் கொண்ட 6 ஏக்கர் பரப்பளவில் அமைந்த கட்டமாக கொலோசியம் கட்டப் பட்டது. சுமார் 545 மீட்டர் சுற்றளவுடைய இந்த கொலோசியத்தின் வெளிப்புறச் சுவரை 48 மீட்டர் (157 அடி) உயரமுடையது. இதன் உட்புற அரங்கம் 287 அடி நீளமும் 180 அடி அகலமும் கொண்ட நீள்வட்ட வடிவமானது. இதைச் சுற்றி 15 அடி உயரச்சுவர் செய்யப்பட்டிருந்தது.
1 லட்சம் கனமீட்டர் கல் அதற்காகப் பயன்படுத்தப்பட்டது. இவற்றுடன் 300 டன் இரும்பும் பயன்படத்தப்பட்டிருக்கிறது.
என்னதான் கட்டடத்திற்கென பெருமை இருந்தாலும் இதில் விளையாடிய காட்டு மிராண்டித் தனமான விளையாட்டுகள் அதிசய மானதா எனும் கேள்வி நம்முள் எழுகிற தல்லவா? வரலாற்றில் அழியாமல் நிற்கும் இக் கொலோசியம் மிகப் பெரிய சுற்றுலாத்தலமாக இன்று வளர்ந்துள்ளது. இதில் உள்ள சிறப்பு என்னவெனில் இன்று நவீன வசதிகளால் கட்டப்படும் விளையாட்டு அரங்கத்தின் மாதிரி வடிவம் கூட இதன் அடிப்படை வடிவமைப்பில் அமைந்திருப்பதுதான்.

Home l Unmai l Periyar pinju l The Morden Rationalist l Viduthalai l Dravidar Kazhagam l Vibgra