> ஆசிரியர் தாத்தாவின்
> பெரியார் தாத்தா 40
> உடல் அறிவோம்
> தமிழறிஞர்

> படக்கதை

> புரட்சிக்கவிஞர்
> குட்டிக்கதைகள்
> அ[ய்]வன்
> உடல் அறிவோம்
> மனித இன வரலாறு
> உலகநாடுகள்
> உலக நடப்பு

கடும் உழைப்புக்கு ஈடு இணை இல்லை. கடுமையாக உழைத்திடத் தயங்காத எவரும், சோம்பேறிகளைக்(விட) காட்டிலும் மகிழ்ச்சி மிக்க வாழ்க்கையே வாழ்வர். (சோம்பல் என்பவர் தேம்பித் திரிவர்)
இக்கதையில் வரும் அந்தோணி என்பவர், எறும்பின் சுறுசுறுப்புக்குப் பெயர் பெற்றவர். உழைக்கத் தயங்கிடாமல், கோடைக் காலம் (மேற்கத்திய நாட்டுச் சூழ்நிலைதான் கதைக்-களம் என்பது கவனிக்கத்தக்கது) நெடுகிலும், அலுப்பு-சலிப்பின்றிப் பாடுபட்டதன் பயன், அருகே வசித்த சோம்பேறி ஒருவனால், பெரிதும் உணரப்பட்டது. இனி, மேலும் படியுங்கள்...
முன்னொரு காலத்தில், இங்கிலாந்து நாட்டிலுள்ள கிராமம் ஒன்றில், உழைப்பின் மறுஉருவமாக விளங்கும் அந்தோணி என்பவர் வாழ்ந்து வந்தார். மனைவி-மகனுடன் சிறு குடிசையொன்றில் வசித்த அந்தோணி ஏழை-யாக இருந்தாலும் கடும் உழைப்புக்கு அஞ்சாதவர்.
அடுத்த வீட்டில், அய்வன் என்ற பெயர் கொண்ட சோம்பேறி ஒருவனும் வாழ்ந்து வந்தான். செல்வச் செழிப்புமிக்க அய்வன், தந்தை வழிச் சொத்தை ஏராளமாகக் கொண்டி ருந்தான். அதனாலேயே நாள் முச்சூடும் சோம்பிக் காலம் கழித்தான்.
வயற்காடுகளில் திரிந்தும், மரங்களின் நிழல்களில் அமர்ந்தும் உல்லாசமாக, அய்வன் நாட்களைக் கடத்தி, பணத்தைச் செலவிட்டு மகிழ்ந்து திரிந்தலைந்த கோடையில், அந்தோணி, உழைப்பு-உழைப்பு என்றே நாட்களை செலவிட்டான்(ர்). அந்தோணி கடும் உழைப்பாளி மட்டுமல்ல; நற்பண்பு களின் கொள்கலனாகவும், திகழ்ந்ததில் வியப்பில்லை. உழைத்து ஈட்டிய பொருள் அனைத்தையும் செலவழித்துவிடாமல், சிறிது சேமித்தும் வைத்தார் அந்தோணி.
அந்தோணியின் வாழ்க்கை மறை, அய்வனு-க்கு கேலிக் கூத்தாகி நகைப்புக்கு இடமாகி இருந்தது. அழகிய கோடை நாட்களை உழைத்து உழைத்தே வீணடிக்க வேண்டா-மென, அந்தோணிக்கு, அய்வன், எகத்தாளமாக எடுத்துரைத்துக் கொண்டிருந்தான். ஆற-அமர கோடையை அனுபவிப்பாயாக! என அறிவுரை வேறு. தனக்குள்ளேயே சிரித்துக் கொள்வதைத் தவிர, அந்தோணி வேறொன்றும் செய்யவில்லை.
கோடைக் காலத்தைத் தொடர்ந்து, பனிக் காலம் வந்தது. மரங்கள் தங்களது இலைகளை உதிர்க்கும் இலையுதிர் காலமாகவும், கூதலாகவும் வானிலை மாறிப் போனது. பறவைகள் மரங்களை விட்டு நீங்கின. மெல்ல மெல்ல குளிர் வாட்டத் தொடங்கியது. எந்த வேலையையும் செய்யவிடாமல், பனி கிட்டிப் போட்டது.
கோடை நெடுகிலும், கடுமையாக உழைத்து திரண்ட செல்வம் ஈட்டியிருந்த அந்தோணி, அண்டை நகருக்குச் சென்று, உணவுப் பொருட்களையும், உறைபனிக்கேற்ற கதக தப்பு தரும் உடுப்புகளையும் வாங்கி வந்தார். பனிக் காலம் முழுவதும் நீடிப்பதாக குடும்பத்தினர் அனைவருக்கும் போதுமானதாக, அந்தோணி-யின் கொள் உணவு அமைந்தது.
வெடவெடவென்று குளிரும்போது
கதகதப்பாக இருப்பதற்கும்;
வயிறார உண்பதற்கும் ஏற்ற
மகிழ்ச்சிச் சூழ்நிலை
அந்தோணியின் குடும்பத்தில் நீக்கமற நிலவியது.
அடுத்த வீட்டிலோ, முட்டாளும்-முழுச் சோம்பேறியுமான அய்வன், முன்னோர் விட்டுச் சென்ற செல்வங்களனைத்தையும் இலக்கின்றி செலவிட்டுவிட்ட காரணத்தால் எஞ்சியிருந்த குறைந்த தொகையைக் கொண்டு எதுவும் செய்ய இயலாதவனானான். மிச்சமிருந்த உணவுப் பொருட்களைக் கொண்டு ஒரு வாரக் காலத்தை ஓட்டுவதே பெரும்பாடாகப் போயிற்று.
மேலும், ஒன்றிரண்டு நாட்கள் கடந்துவிட்ட நிலையில், பசியால் வாழத் தவித்த அய்வனால், சரியாக அமரக் கூட முடியவில்லை. வயிற்றுப் பசியும் விடேன் என்றது. அடுத்து, விலைமதிப் பற்ற வீட்டுப் பொருட்களையும் அய்வன், தன் பசிப்பிணி தீர்த்துக் கொள்ளவிற்கத் துணிந் தான். ஆயினும், இதுவும் நீண்ட நாட்களுக்கு நீடித்திருக்கவில்லை.
இப்போது, சாப்பிடவும் எதுவுமில்லை. விற்றுத் தொலைக்கவும் மிச்சமில்லை. வெளியே காலடி எடுத்து வைக்கமுடியாமல், உறைபனி கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்தது. குளிரும்பசியும் கடுமையாக வாட்டித் தீர்த்தன.
அந்தோணியைக் கெக்கலி கொட்டிய தெல்லாம் இப்போது நினைவுக்கு வந்து துளைத்தெடுத்தது. கோடைக் காலத்தில், அலுத்துக் கொள்ளாமல் அந்தோணி உழைத் ததை அய்வன் இப்போது தான் எண்ணிப் பார்க்கத் துவங்கினான். அப்போது குந்தித் தின்றதால், குந்தாணியும் காலியாகிப் போனதை எண்ணி யெண்ணி வருந்தினான் அய்வன்.
என்றாலும், அவனால் ஒரு கிழமைக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. பசிக்கொடுமை அ(ய்)வனை, அந்தோணி வீட்டுக் கதவை அறைந்து தட்ட வைத்தது; அதுவும் முடியாமல், கைகள் தொய்ந்து தொங்கலாடின; அந்தோணி வீட்டுக் கதவுகள் விரியத் திறந்தன.
நிற்க முடியாமல் தடுமாறும், மெலிந்து நலிந்திருந்த அ(ய்)வனை, அந்தோணி, கைத் தாங்கலாக வீட்டுக்குள் அழைத்துச் சென்றார். சிறிது உணவும், உற்சாக(பான)மும் அளித்தார் அட்டியின்றி.
இரு கிழமைகளுக்கு அ(ய்)வனின் அந்தோணி இல்ல வசிப்பு நீடித்தது; மெல்ல மெல்ல புதுத் தெம்பு மீண்டது. பனிக்காலம் முழுவதும் அ(ய்)வன் தனித்திருக்காமல், அந்தோணி குடும்பத்தாருடன் பிணை(ந்)த்தே கிடந்தான் அந்தோணி, அ(ய்)வனை கவன முடன் கவனித்துக் கொண்டார்.
பனிக்காலம் நீங்கி, வசந்தம் துவங்கியது; உறைபனி விலகியதில், அரும்புகள் மொட்ட விழ்த்தன.
அந்தோணியின் இல்லத்தை விட்டு ஒரு வழியாக (அப்பாடா!) நீங்கி, தன் வீடு சேர்ந்தான் அ(ய்)வன்.
நன்றி கூடச் சொல்லாமல் நீங்கிவிட்டானே அ(ய்)வன் என ஏங்கினார் அந்தோணி. தன்னைத் தானே தேற்றிக் கொண்டு வெளியே கிளம்பியபோது, அ(ய்)வன் தனக்காகக் காத்து நிற்பதை அந்தோணி கண்டார். நான் தக்க பாடம் கற்றுக் கொண்டேன்; இன்று தொடக்கம், கடுமையாக உழைப்பேன் என அ(ய்)வன் சொல்லக் கேட்டார்; கழிபேருவகை எய்தினார்.
அந்தோணியும், அ(ய்)வனும், இனி மகிழ்ச்சிமிக்க வாழ்வு வாழ்ந்தனர். கோடையில் உழைத்து, குளிரில் காய்ந்தனர். அகலாது அணுகாது தீக்காய்வார் போல அந்தோணி அ(ய்)வன் வாழ்க்கை நீடித்தது.
இலைமறைவாகக் காயிருக்கும்-அந்தக்
காய் பழுத்தால் அது கனி கொடுக்கும்!
கனி கொடுத்தாலது தித்தித்திருக்கும்-அந்த
தித்திப்பினிலே ஒரு சுவையிருக்கும்!

Home l Unmai l Periyar pinju l The Morden Rationalist l Viduthalai l Dravidar Kazhagam l Vibgra