> ஆசிரியர் தாத்தாவின்
> பெரியார் தாத்தா 40
> உடல் அறிவோம்
> தமிழறிஞர்

> படக்கதை

> புரட்சிக்கவிஞர்
> குட்டிக்கதைகள்
> அ[ய்]வன்
> உடல் அறிவோம்
> மனித இன வரலாறு
> உலகநாடுகள்
> உலக நடப்பு

மனித இன வரலாறு-35

கடல் கொள்ளையர் - கப்பல்
கடல் கொள்ளையர் படகுகள் செய்வதிலும், அவற்றைச் செலுத்துவதிலும் வல்லவர்கள். அவர்களின் கப்பல்கள் நீளமாக, டிராகன் வடிவத்தை ஒரு முனையிலும் தாங்கியிருக்கும். அவை மென்மையாகவும், அதே நேரத்தில் வேகமாக இயங்கும் தன்மை வாய்ந்தவை. கப்பலின் அடிக்கட்டை கப்பல் நீளத்திற்கு இருக்கும். சதுர வடிவில் பாய்மரத் துணி அமைந்திருக்கும. காற்று இல்லாதபோது துடுப்புகளால் கப்பல் இயக்கப்படும். கப்பலின் பெரும்பகுதி மரத்தால் ஆனது. (சென்ற இதழில் உள்ள படத்தைப் பார்க்கவும்).
கடல் கொள்ளையர் வாழ்க்கை
பெம்பாலான கடல் கொள்ளையர் விவசாயிகளே. காடுகள் நிறைந்த ஸ்காண்டிநேவியாவில் அவர்கள் வீடுகள் இயல்பாகமரத்தாலனவையே. மரங்கள் கிடைக்காத இடங்களில் அவர்கள் வீடுகள் கற்களால் கட்டப்பட்டவை. அவர்கள் பார்லி, ஓட்ஸ் மற்றும் கம்பு பயிரிட்டனர். ஆடு, மாடு, மற்றும் பன்றிகளை வளர்த்தனர். சிலர் மீன் பிடித் தொழிலும் செய்தனர். பயணம் செய்யும் வாணிபர்களிடம் உப்பு வாங்கினர். மீன்களை நீண்ட குளிர்காலத்தில் பதப்படுத்தி வைக்க அது தேவைப்பட்டது.
அவர்கள் ஆடைகள் கம்பளி மற்றும் நாராலும் செய்யப்பட்டவை. ஆண்கள் காற்சட்யும், நீண்ட முழுக்கை சட்டை களையும் அணிந்தனர். பெண்கள் தளர்த்தி யான ஆடைகளை அணிந்தனர் ஆண்களும், பெண்களும் தோலால் ஆன காலனி (ஷூ) அணிந்தனர்.
அவர்கள் எழுத அறிந்து இருந்தனர். ஆனால் அவர்களின் வரலாறு கர்ண பரம்பரையாகவும், கதைகள், பாட்டுகள் வழியே வந்தவைகள்தாம். அவர்கள் மரத்தாலும் உலோகத்தாலும் ஆன சிற்பங் களால் தங்கள் வீடுகளையும், கப்பல்களையும் அழகுபடுத்தினர். வெள்ளியால் ஆன அழகான நகைகள் அணிந்தனர்.
படங்கள்:

1: கடல் கொள்ளை வீரன் ஈட்டி மற்றும் வாள் அவருடைய ஆயுதங்கள், மரத்தாலான கேடயம், தலைக்கவசம் இரும்பாலானது. இரும்பு வளையங்களான உடல் கவச உடை.
2: கடல் கொள்ளையர் கோட்டை. நான்கு வாயில் கொண்ட வட்ட வடிவம். மண்ணாலும், மரத்தாலும் ஆன அகழி.
3: கடல் கொள்ளையர்கள் கோடரி, ஈட்டி, வாள் மற்றும் வில் அம்பு ஆகியவை. அவர்களின் போர் ஆயுதங்கள். வாளின் அழகான கைப்பிடி - அவர்களின் உடையில் அணியும் வேலைப் பாடுகள் அமைந்த ஊசி.

Home l Unmai l Periyar pinju l The Morden Rationalist l Viduthalai l Dravidar Kazhagam l Vibgra