பிரதி எடுக்க

மனித இன வரலாறு

மங்கோலியர் ஆட்சியும் வீழ்ச்சியும்

- மு.நீ.சிவராசன்

கூப்ளைகான் சகிப்புத் தன்மை மிக்க அரசர். சீனாவில் பவுத்தம்,
இஸ்லாம் மற்றும் கிருத்தவ மதங்கள் இருக்க அனுமதித்தார்.
பஞ்சம் மிக்க காலங்களில் மக்களுக்கு வழங்க உணவுக்கடைகளைத் திறந்தார். பாதைகளைச் சீரமைத்து வாணிபத்தைப் பெருக்கினார்.
தம் அரசை ஜப்பானுக்கு விரிவுபடுத்த முயன்றார். ஆயினும்
அவர்தம் கப்பற்படை 1274இலும் 1281இலும் தோற்கடிக்கப்பட்டது.
கி.பி. 1294இல் கூப்ளைகான் இறந்தார். அவர்தம் அரசு வீழ்ச்சியுறத்
தொடங்கியது. 1368இல் சீனர்கள் மங்கோலியர்களை வென்றனர்.
எனினும் மத்திய ஆசியாவிலுள்ள சாமர்கண்டு நகரை செங்கிஸ்தான்
வழித்தோன்றலான தைமூர் 1369இல் கைப்பற்றி அரசரானார்.
இவர் தன் அதிகாரத்தைத் தெற்கிலும் மேற்கிலும் விரிவுபடுத்தினார்.
கி.பி. 1398இல் டில்லியைத் தாக்கி சூறையாடி அந்நகரத்துப்
பெரும்பாலான மக்களைக் கொன்றான். இவன் 1405இல் இறந்துபட்டான்.
இவன் வழி வந்த பாபர் என்பவரே 1526இல் இந்தியாவில் மொகலாயப்
பேரரசின் முதல் மன்னரானார்.

 

 



மங்கோலியப் படையில் ஒரு குதிரை வீரன். குதிரைக்குக்
கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. குதிரைப் படை வீரனின்
உடைகளும், தலைக் கவசமும் தோலால் செய்யப்பட்டவை.