உலக நாடுகள்
 |
அமைவிடம்: பாரசீக வளைகுடாவிற்கு வட மேற்கு உள்ளது (ஈரான் மற்றும் குவைத் நாடுகளுக்கு இடையே)
பரப்பளவு: 1,67,975 சதுர மைல்
மக்கள் தொகை: 26,783,383 (2006 ஜூலை கணக்கெடுப்பு) (பெரும்பான்மையினர் அராபியர், சிறுபான்மையினர் குர்துகள்)
ஆட்சி மொழி: அராபி (மற்ற மொழிகள்: குர்து, அர்மீனியன்)
சமயம்: இஸ்லாம் (97 சதவிகிதம்), கிருத்தவர்கள் (3 சதவிகிதம்)
நாணயம்: தினார்
தலைநகர்: பாக்தாத்
நாட்டின் இயற்கை வளங்கள்: பெட்ரோலி யம், இயற்கை வாயு, பாஸ்பேட், கந்தகம்
படிப்பறிவு: 40.4 சதவிகிதம் (பொது), ஆண்கள் - 55.9 சதவிகிதம், பெண்கள் 24.4 சதவிகிதம்.
சராசரி ஆயுள்: 69.01 ஆண்டுகள்
புவியியல் தகவல்கள்: நாட்டை நான்கு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. யூப்ரடிஸ் - டைகரிஸ் ஆறுகளுக்கு இடையே உள்ள ஆற்றுப் படுகைகள்
2. அல்ஜஸிரா மேட்டு நிலப்பகுதி
3. மேற்கு மற்றும் தெற்கு பாலைவனங்கள்
4. வட கிழக்கு உயர் நிலங்கள்
அரசு
- 2004ஆம் ஆம் ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவால் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.
- சுதந்திர தினம் அக்டோபர் 3 (1932இல் பிரிட்டிஷ் நாட்டில் இருந்து விடுதலை பெற்றது).
- அரசின் தலைவராக அதிபர் இருக்கிறார். 2005 முதல் அதிபராக ஜலால் தொலாபணி இருக்கிறார்.
- அரசாங்கத்தின் தலைவராக (Head of Government) பிரதமர் இருக்கிறார். தப்போதைய பிரதமர் நூரி-அல்-மாலகி.
சேவை மற்றும் தகவல் தொடர்பு
- இருப்புப் பாதை 2,200 கி.மீ. நீளமுடையது
- சாலைகள் 45,550 கி.மீ. நீளமுடையது.
- 2004 ஆண்டு கணக்கெடுப்பப்படி 10,34,200 தொலைபேசிகள் பயன்படுத்தப் படுகின்றன.
- 2004 ஆண்டு கணக்கெடுப்புப் படி 5,700 பேர் செல் போன்கள் பயன்படுத்துகின்றனர்.
- 2006ஆம் ஆண்டு கணக்கெடுப்புபடி சராசரியாக 45,000 பேர் இணைய தளங்களை பயன்படுத்துகின்றனர்.
- இணைய தள குறியீடு .iq / bala என்பதாகும்.
சிறப்புத் தகவல்கள்:
- உலகின் நிரூபிக்கப்பட்டுள்ள எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் இருப்பில் இரண்டாவது இடத்தைப் பெறுகிறது.
- கணிசமான அளவு இயற்கை வாயுக்கள் கிடைக்கின்றன.
- நாட்டின் மொத்த தொழிலாளர்களின் எட்டில் ஒரு பங்கினர் விவசாயப் பணிகளில் ஈடுபடுகின்றனர்.
வரலாற்று சுவடுகள்: - பண்டை காலங்களில் மெசபடோமியா என்று அழைக்கப்பட்டது. இப்பகுதியே சுமோ, அக்காட், பாபிலோன் உள்ளிட்ட உலகின் மிகப் பழமையான நாகரீகங்களின் பிறப்பிடமாகும்.
- கி.மு. 330இல் மாவீரன் அலெக்ஸாண்டரால் கைப்பற்றப்பட்ட இப்பகுதி பின்னர் ரோமானியர் களுக்கும், பாராத்தியர்களுக்கும் போர்க்களமாக மாறியது.
- 7ஆம் நூற்றாண்டில் அராபியர்கள் கைப்பற்றினர். - 1258இல் மங்கோலியர்கள் கைப்பற்றினர்.
- 16ஆம் நூற்றாண்டில் ஓடோமான் பேரரசின் கட்டுப்பாட்டிலும் முதல் உலகப் போருக்குப் பின் பிரிட்டிஷார் கட்டுப்பாட்டிலும் இருந்து வந்தது.
- 1958இல் ஏற்பட்ட புரட்சி காரணமாக மன் னராட்சி வீழ்த்தப்பட்டது. பல்வேறு கலகங் களுக்குப்பின் சதாம் உசேன் தலைமையிலான சோசலிஷ பாத் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
- 1990ஆம் ஆண்டு அய்.நா. சபையால் விதிக்கப்பட்ட பொருளாதார தடையால், நாட்டின் பொருளாதாரம் சீரழிந்தது.
- 2003ஆம் ஆண்டு ரசாயன அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக நாட்டின் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதை தொடர்ந்து அமெரிக்கா - பிரிட்டிஷ் படைகளால் தாக்கப் பட்டு நாடு சீரழிக்கப்பட்டது.
- 2004இல் சதாம் உசேன் கைது செய்யப்பட்டு பின்னர் 2007இல் தூக்கிலிடப்பட்டார்.

|