நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க

மனித உடலுக்குள் ஒரு மகிழ்ச்சிப் பயணம்

- சமா. இளவரசன்

 

“Honey, I shrunk the Kids” என்ற படம் பார்த்திருக்கிறீர்களா? அதன் தொடர்ச்சியாக வந்த பல தொலைக்காட்சிப் படங்கள் அறிவியல் புனைகதைகள் என்று சொல்லப் படும் படங்களாக வெளிவந்தன. அதில் ஒன்றில் லேசர் கற்றையின் காரணமாக கதாநாயகனும் இன்னும் சிலரும் காரோடு சேர்ந்து சுருங்கிப் போய் விடுவார்கள். குட்டியாக என்றால் ஒரு ஸ்பூன் பாலில் கிடக்கும் குட்டி எறும்பு அளவுக்கு சிறிதாகிவிடுவார்கள். அப்புறம் அவர்கள் ஒரு தாத்தாவின் வயிற்றுக்குள் சென்று உடல் முழுக்க காரோடு சுற்றி மூக்குக்கு வந்து சேரும்போது நச் என்று அவர் விடும் தும்மலில் வெளியில் வந்து விழுவார்கள். அந்தப் படத்தில் பெரிது பெரிதாய் இருக்கும் மனித உறுப்பு களுக்குள் புகுந்து வருவது போன்ற காட்சியமைப்பு பெரும் பிரமிப் பையும் மகிழ்ச்சியையும் உண்டாக்கும். இதை உண்மையில் உணர்ந்தால் எப்படி இருக்கும் என்று தோன்றியதோ என்னவோ.... புதிதாய் ஒரு கண்காட்சிக் கட்டிடம் அமைத் திருக்கிறார்கள் நெதர்லாந்தில். அதைத்தான் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கிரீர்கள்
தென்மேற்கு ஆம்ஸ்டர்டாமில் இருந்து நெதர்லாந்து செல்லும் வழியில் அமைந் திருக்கிறது இந்த 115 அடி கட்டிடம். பாதி மனிதன் உட்கார்ந்திருப்பது போன்ற தோற்றத்துடன் கட்டப்பட்டிருக்கிறது. இதனுள்: சென்று பார்த்தால் மனித உறுப்பு களின் உட்புறங்களை பிரம்மாண்டமாக அமைத்து, நாமே அதனுள் சென்ரு பார்த்த அனுபவத்தை ஏற்படுத்துகிறார்கள் அது தான் உங்களியும் அழைத்துக் கொண்டு ஒரு சுற்று சுற்றுவோமே என்று அழைத்து வந்தோம்.. வாருங்கள் பிஞ்சுகளே... நம் உடலுக்குள் ஒரு முறை போய் வருவோம்.