நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



உலக நாடுகள்

உகாண்டா

வை.கலை

அமைவிடமும் நில அமைப்பும்:
- உகாண்டா கிழக்கு ஆப்ரிக்காவின் கிழக்குப் பகுதியில் கென்யாவிற்கு கிழக்கே அமைந்துள்ளது.
- இதன் மொத்த பரப்பளவு 2,36,040 சதுர கிலோ மீட்டர்.
- நிலநடுக்கோட்டுப் பகுதியில் நிலத்தால் சூழப்பட்டுள்ளது.
- இதன் பெரும்பகுதி பீடபூமியில் அமைந்துள்ளது. எரிமலைத் தொடர்கள் கிழக்கிலும் மேற்கிலும் எல்லைகளாக அமைந்துள்ளன.
- எல்கான் மலை இதன் உயர்ந்த மலையாகும்.
- விக்டோரியா ஏரியின் ஒரு பகுதி உகாண்டாவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது.
மக்கள் தொகை:
- 2006 ஜூலை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை: 2,81,95,75 பேர்
- மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 3.37 சதவிகிதம் ஆகும்
- இங்குள்ள மக்களில் 33 சதவிகிதம் ரோமன் கத்தோலிக்க சமயத்தையும் 33 விழுக்காட்டினர் பிராட்டஸ்டண்ட் சமயத்தையும் 16 விழுக் காட்டினர் முஸ்லிம் சமயத்தையும் பின்பற்றி வருகின்றனர்.
- ஆங்கிலம் அலுவலக மொழியாக உள்ளது.
- 69.9 சதவிகிதம் கல்வியறிவுப் பெற்றுள்ளனர்.
பொருளாதாரம்:
- இந்நாட்டு நாணயம் உகாண்டா ஷில்லிங் என அழைக்கப்படுகிறது.
- காப்பி, மீன் மற்றும் மீன் தயாரிப்புகள், தங்கம், பருத்தி, பூக்கள் மற்றும் தோட்டப் பயிர்கள் இங்கிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
- வாகனங்களும், மருத்துவப் பொருட்களும் பெருமளவு இறக்குமதி செய்யப்படுகின்றன.
அரசு முறை:

- உகாண்டாவின் தலைநகர் கம்பாலா
- உகாண்டா இங்கிலாந்திடமிருந்து 1962 அக்டோபர் 9 அன்று சுதந்திரம் பெற்றது.
- இது ஒரு ஒற்றை பாராளுமன்ற குடியரசு ஆகும்.
- குடியரசுத் தலைவரே நாட்டின் தலைவராவார். அவரே அரசாங்கத்தின் தலைவராகவும் இருக்கிறார்.
போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்புகள்:
- இந்நாட்டில் மொத்த இரயில் பாதைகளின் நீளம் 1,241 கி.மீ. ஆகும் மற்றும் சாலைகளின் மொத்த நீளம் 70,746 கி.மீ.
- தொலைபேசி பயன்படுத்துபவர்கள் 90,400 பேர் (2006 கணக்கெடுப்பு)
- பயன்படுத்தப்படும் செல்போன்கள் 2 மில்லியனுக்கு மேல்
சில வரலாற்றுக் குறிப்புகள்:
- 1800 களில் பன்ட்டு மற்றும் நிலோட்டிக் மொழிகளை பேசும் மக்கள் விக்டோரியா ஏரியை எல்லையாக கொண்டு சிறு சிறு மண்டலங்களாக ஆண்டனர்.
- 1840 வாக்கில் அரேபிய வணிகர்கள் இப்பகுதிக்கு வந்தனர்.
- 1862இல் அய்ரோப்பியர்கள் வந்தனர்.
- 1870இல் கிருத்துவ மதப்போதகர்கள் தங்கள் மதங்களைப் பரப்பி வந்தனர். இதனால் குழப்பங்களும் சச்சரவுகளும் ஏற்பட்டன.
- 1894 முதல் உகாண்டா பிரிட்டிஷ் பேரரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றது.
- 1962இல் விடுதலைப் பெற்று சுதந்திர நாடானது.
- 1963இல் குடியரசானது. சர் எட்வர்டு முதிசா முதல் குடியரசு தலைவரானார்.
- 1966 மில்டன் குடியரசுத் தலைவரானார்.
- 1971இல் இடிஅமின் தலைமையில் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
- 1978இல் தான்சானியா படையெடுப்புக் காரணமாக இராணுவ ஆட்சி நீக்கப்பட்டு, மீண்டும் 1985இல் இராணுவம் ஆட்சியைப் பிடித்தது.
- 1986இல் இராணுவ ஆட்சி தூக்கி எரியப்பட்டது.
- 1995இல் புதிய அரசமைப்புச் சட்டம் எழுதப்பட்டது.