நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



மனித இன வரலாறு-39 - ஜப்பான் சாமுராய்

- மு.நீ. சிவராசன்

கி.பி. 858இல் ஜப்பானின் ஒன்பது வயது அரசிளங்குமரன் சார்பாய் ஃப்யூஜிவாரா யோஷிஃப்யூசா (Fugiwara Yoshifusa) அந்நாட்டை ஆட்சி புரிந்தார். அரசிளங்குமரன் இளைஞனான பின்னரும் அவரே ஆட்சித் தலைவராய் நீடித்தார். பல நூற்றாண்டுகளாக வலிமை மிக்கப் படைத் தலைவர்களால் ஜப்பான் ஆட்சி புரியப்பட்டது. கி.பி. 1192இல் மினா மோடோ யோரிடோமோ (Minamoto Yritomo) ஆட்சித் தலைவரானார்.இக்காலத்தில்தான் ஜப்பானில் சமுராய் என்ற மெய்க்காவலர் படை தோன்றியது. படைத்தலைவர் அழைக்கும்போது உள்ளூர் தலைவர் சார்பார் இவர்கள் போரில் பங்கு கொள்வர். இவர்கள் ஜப்பான்மீது படையெடுத்த மங்கோலியர்களை கி.பி. 1274இல் ஒருமுறையும் கி.பி.1281 மற்றொரு மறையும் தோற்கடித்தனர்.
நாளா வட்டத்தில் இவர்களைப் படைத் தலைவர்களால் கட்டுப்படுத்த இயலவில்லை. எனவே அவர்களுக்கு இடையே உள்நாட்டுப் போர் மூண்டு கி.பி. 1467 முதல் கி.பி. 1477 வரை நடந்தது. கி.பி. 1603இல் டொகுகாவா (Tokugawa) குடும்பம் ஆட்சியைக் கைப்பற்றி ஜப்பானை ஆண்டது. சுமார் இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிநாடுகளோடு இருந்த வாணிபம் மற்றும் தொடர்புகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
முன்பக்கப்படம்: சமுராய் வீரர் உலோகத் தால் செய்யப்பட்ட கவசம். இவர்களின் ஆயுதங்கள் வாள், ஈட்டி, வில்-அம்பு மனிதனைவிட உயரமான வில்லைப் பயன்படுத்தினர். இவர்களின் அம்பு உலோகக் கவசத்தையும் துளைக்க வல்லது.
டைமோ (Daimyo) என்ற உள்ளூர் தலைவர்களின் கோட்டை. மலை உச்சியில் கட்டப்பட்ட டென்ஷீ (Tenshu) என்று அழைக்கப்படும் கட்டடம்.