அதிசயச் செய்திகள்
இணையத்திலிருந்து தொகுப்பு: இ.பெ.தமிழீழம், 7ஆம் வகுப்பு, சென்னை-24
 |
நீல நிறக் கண்கள் உள்ள மனிதர்களால் இரவில் நன்றாகப் பார்க்க முடியும். |
 |
சூரியன், பூமியைவிட 3,30,330 மடங்குகள் பெரியது |
 |
பசு தனது வாழ்நாளில் 2,00,000 டம்ளர் பால் தருகிறது. |
 |
ஆண் பப்பூன் குரங்கால், ஒரு சிறுத்தையையே கொல்ல முடியும். |
 |
ஒரு மனிதர் இறந்தால் முதலில் காது தன் செயலை இழக்கும். |
 |
பெரும்பாலான உணவுத் தானியங்கள் புல் வகைப் பயிர்களிலிருந்தே கிடைக்கிறது. |
 |
குதிக்க முடியாத விலங்கு, யானை மட்டுமே. |
 |
வலப் பக்க நுரையீரல் இடப் பக்க நுரையீரலை விட அதிகக் காற்றை எடுத்துக் கொள்கிறது. |
|
பட்டம் (Kite) விடுவது தாய்லாந்தின் தொழில் முறை விளையாட்டு. |
 |
நத்தைக்கு 14,175 பற்கள் 135 வரிசைகளாக அதனுடைய நாக்கில் அமைந்து உள்ளன. |
 |
வண்ணத்துப் பூச்சிக்கு 12,000 கண்கள் உள்ளன. |
 |
டால்பின் தூங்கும்போது ஒரு கண்ணைத் திறந்து கொண்டே தூங்கும். |
 |
அன்னத்தின் உடலில் 25,000 இறகுகளுக்கு மேல் இருக்கும். |
 |
திமிங்கலம் ஒரு நாளைக்கு 3 டன் எடையுள்ள உணவை சாப்பிடும். அதே சமயத்தில் அதனால் 6 மாதங்களுக்கு உணவு இல்லாமல் வாழ முடியும். |
| |
ஒவ்வொரு ஆண்டும் 30,000 பேர் உடற்பயிற்சிக் கருவிகளால் கடும் காயத்திற்கு ஆளாகிறார்கள். |
 |
அமெரிக்காவில் ஆண் கோடீஸ்வரர்களை விட, பெண் கோடீஸ்வரிகளே அதிகம். |
|
உலகின் மிகப்பெரிய காளான் ஓரிசான் என்னும் ஊரில் உள்ளது. 2400 ஆண்டு வயதுடைய இந்தக் காளான் 3-4 சதுர மைல் பரப்பளவில் இன்னும் வளர்ந்து கொண்டே உள்ளது. |
 |
270 டிகிரி கோணத்தில் தலையைச் சுழற்றும் ஒரே பறவை ஆந்தை. |
 |
மோப்ப சக்தியை வைத்து வேட்டையாடும் ஒரே பறவை கிவி (Kiwi). |
 |
மருத்துவமனையில் பிறந்த முதல் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டர். |
 |
யானையின் ஒரு பல்லின் எடை 9 பவுண்டுகளுக்குக் குறையாமல் இருக்கும். |