நண்பருக்கு அனுப்ப பிரதி எடுக்க



மனித இன வரலாறு-40

கெமர் அரசு

- மு.நீ.சிவராசன்

தென் கிழக்கு ஆசியாவை சீன ஆட்சியாளர்களும், உள்ளூர்த் தலைவர்களும் ஆண்டனர். கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்து இந்தியாவிலிருந்து சென்ற வணிகர்களும், மதப் பிரசாரகர்களும் அப்பகுதியில் வாழ்ந்த மக்களிடையே இந்து மதத்தையும், புத்த நெறியையும் பரப்பினர்.
கம்போடியாவில் 9ஆம் நூற்றாண்டில் சீன ஆட்சி அகற்றப்பட்டு கெமர் (Khmer) ஆட்சி தொடங்கப்பட்டது.
ஆங்கோர் (Anghor) கம்போடியாவின் தலைநகரம். அங்கு பத்து லட்சம் மக்கள் வாழ வீடுகளும், கோயில்களும் கட்டப்பட்டன. கி.பி. 12ஆம் நூற்றாண்டில் சூரியவர்மன் கட்டிய கோயில் கெமர் கலையின் ஒரு மணி போன்றதாகும். இதன் அணியிட்ட சுற்றுச் சுவர்களில் இராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களின் கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மேலும் அக்காலத்து அரசிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளும் சித்தரிக்கப்பட்டுள்ளன. இவை உயிருடனுள்ளவை போலவே காணப்படுகின்றன.
இந்தக் கோயில்களைச் சுற்றி அணைகளும், நீர்ப்பாசனக் கால்வாய் களும் அமைக்கப்பட்டுள்ளன.
15ஆம் நூற்றாண்டின் இடையில் தாய்லாந்துப் படை கெமர் அரசை வீழ்த்தியது.
ஆங்கோர் நகரத்தைச் சுற்றி அடர்ந்த காடுகள் வளர்ந்தன. சிதைந்து போன இந்நகரத்தை ஃபிராண்டு இயற்கை அறிவியலாளர் ஆல்பர்ட் ஹென்றி மோஹாட் (Albert Henry Mouhot) என்பவர் கண்டறிந்தார்.
தற்போது இது சிதைந்து கிடக்கிறது. இதைச் சூழ்ந்து உயரமான சுவர்கள் உள்ளன. இதன் பரப்பு ஏறக்குறைய இரண்டு சதுர மைல்கள். இதற்கு அய்ந்து வாயில்கள் உள்ளன. ஆறாம் நூற் றாண்டில் கட்டப்பட்டவை. இந்து சிற்ப முறையைத் தழுவிக் கட்டப் பட்டவை.