படமும் விளக்கமும்
 |
*விமானத்தை மேல்நோக்கி இழுக்கும் விசை, விமானத்துக்கும் காற்றுக்குமான ரிலேடிவ் வேகத்தையும், இறக்கையின் பரப்பளவையும் பொருத்தே அமையும்* *அதனால்தான் எடை அதிகமான விமானத்தின் இறக்கை பெரியதாக அதிக பரப்பளவுள்ளதாக இருக்கும்.
இப்போது காற்றுக்கும் விமானத்திற்குமான ரிலேடிவ் வேகத்தை எது தீர்மானிக்கிறது? சந்தேகமில்லாமல் விமானத்தின் வேகம், அதை தீர்மானிப்பது எது? விமானத்தின் இஞ்சின். எனவே விமானத்தின் மேலெழும்பு சக்தியையும் கொடுப்பது, அதே இஞ்சின் தான் என்பது தெளிவாகிறது அல்லவா? அதனால்தான் விமானம் மெதுவாக ஓடும்போது அதற்கு பறக்கும் சக்தி இருக்காது.*(ஹெலிகாப்டரின் மேலெழும்பு விசைக்கும் வேகத்திற்கும் சம்மந்தம் இல்லை என்பதால் அது ஓடாமலே மேலே எழும்புகிறது, ஆனால் விமானத்தின் முன் செல்லும் வேகம் ஹெலிகாப்டருக்கு சுட்டுப்போட்டாலும் வராது) இது எல்லாம் சேர்ந்துதான் விமானம் டேக் ஆப் ஆகிறது. விமானம் ஓடினால் மட்டும் அல்ல, அதே வேகத்தில் காற்று புயல்போல அடித்தாலும் (அந்த வேகத்திற்கு காற்று அடிப்பது கடினம்தான்) விமானம் நின்றுகொண்டிருந்தால் கூட விமானம் தூக்கப்பட்டுவிடும். கடும் புயல் அடிக்கும்போது, சில ஓட்டு வீட்டு கூரைகள் பிய்த்துக்கொண்டு மேலெழும்பி காற்றில் பறப்பதற்கான காரணம் இப்போது புரிகிறதா? அதனால்தான் குறைந்தபட்சம் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் விமானம் சென்றே ஆகவேண்டிய கட்டாயத்தில் எப்போதும் உள்ளது, அப்போதுதான் அதன் இறக்கையில் மேலிழுக்கும் சக்தி தொடர்ச்சியாக அதன் எடையை சமன் செய்யும். அந்த வேகத்திலிருந்து குறைந்தால் விமானம் கீழே இறங்க துவங்கிவிடும். மெதுவாக போவது, சாவகாசமாக போவது எல்லாம் விமானத்திற்கு வேலைக்கே ஆகாது.
ஒரு டெயில் பீஸ், இந்த இறக்கை மேட்டர் எல்லாம் காற்று உள்ள இடங்களில் மட்டும்தான். பூமியை தாண்டி விண்வெளிக்கு சென்றுவிட்டால் பறப்பதற்கு இறக்கை தேவைப்படாது. (சந்திரனில் கூட பறப்பதற்கு இறக்கை உபயோகப்படாது). அடுத்த முறை விமானத்தில் பயணம் செய்யும்போதோ, விமானத்தை அன்னாந்து பார்க்கும் போதோ மேற்கூறிய அத்தனையும் உங்கள் நினைவிற்கு வரும்தானே. சும்மா பார்ப்பதை விட்டுவிட்டு இந்த அறிவியல் பின்னணியை நினைத்து களியுங்கள்.
இறக்கையின் மேற்புறம் ஒரு குறைந்த காற்றுழத்த மண்டலம் உருவாகுகிறது, கீழ்புறம் காற்றழுத்தத்தில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு புறம் அதிக காற்றழுத்தம் ஒரு புறம் குறைந்த காற்றழுத்தம் இருக்கும்போது, குறைந்த காற்றுழுத்த பகுதியை நோக்கி பொருள் ஈர்க்கப்படுவது அறிவியல் நியதி (Vacuum Cleaner பொருளை உள்ளே இழுப்பது குறைந்த காற்றழுத்தத்தை உள்ளே உருவாக்குவதினால்தான்) சரி எப்படி குறைந்த காற்றழுத்தம் இறக்கையின் மேலே உருவாகுது எனப் புரியாதவர்களுக்கு, இந்த படத்தை பார்த்தால் எல்லாம் புரியும்* வாயைபர1973.
blogspot.com இணையதளத்திலிருந்து...