ஜூலை 2008 மலர் 5 இதழ் 8
அதிசய நாய்
நம்பிக்கை
‘Faith’ - நம்பிக்கை
![]() |
- இது ஒரு நாயின் பெயர். ஆச்சர்யமாக இருக்கிறதா? அந்த நாயைப் பற்றி தெரிந்து கொண்டால், அந்த ஆச்சர்யம் இனிய அதிர்ச்சியாக மாறிவிடும்.
ஆம், ஃபெயித்துக்கு முன்னங்கால்கள் இரண்டும் கிடையாது. அடடே! முன்னங் கைகள் இரண்டும் இல்லாமல் ஒரு நாயால் எப்படி? இனி அது அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள். சகல வசதிகளோடு நான்கு கால்கள் இருந்தால் எப்படி இருக்குமோ? அதைவிட அருமையாக வாழ்ந்து கொண்டிருக் கிறது.! ஃபெய்த் டிசம்பர் 2002இல் பிறந்தார். அதனுடன் பிறந்த மற்ற குட்டிகள் நல்ல ஆரோக்கியமாக இருக்க, ஃபெய்த் மட்டும் மிகவும் பலகீனமாக இருந்தது. அதற்கு அதனுடைய தாயின் அன்பும் முழுமையாக கிடைக்கவில்லை. அதே சமயம் அதனுடன் பிறந்த மற்ற குட்டிகளோடு அதனுடன் விளையாட முடியவில்லை. சரியாகச் சொன்னால் போராட முடியவில்லை. ஆனால், தனக்குள் தாமும் வாழத்தான் வேண்டும் என்ற இடைவிடாத தூண்டுதலுக்கு ரூயோஃபின் என்ற சிறுவன் மூலம் ஒரு நல்ல வாய்ப்பு கிடைத்தது. குற்றுயிரும் குலையுயிரு மாயிருந்த ஃபெயித் ஜனவரி 21, 2003இல் ரூயோஃபினால் காப்பாற்றப்பட்டு இன்று பனாமாவில் உள்ள ரூயோஃபினின் குடும்பத்தோடு ஒன்றிணைந்து ஃபெயித்தும் ஒரு உறுப்பினராகி, தன்னை காப்பாற்றியவர்களுடன் எல்லா இடங்களுக்கும் நான்கு கால்கள் இருந்தால் எப்படி போய் வருமோ, அதே போல சகஜமாக சென்று வருவதை ஊரே ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருக்கிறது.
அதன் பெயர் ஃபெயித் (நம்பிக்கை)தாக இருந்தாலும் அது தன்னம்பிக்கையின் சின்னம், சிகரமாக இருந்து மனித குலமே கற்றுக் கொள்ளக் கூடிய பாடத்தை கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
