ஜூலை 2008 மலர் 5 இதழ் 8

மனித இன வரலாறு-41

 

இடைக்கால அய்ரோப்பா

 

- மு.நீ. சிவராசன்

இடைக்கால அய்ரோப்பாவில் ஒரு நகரத்தில் நடக்கும் சந்தை. விவசாயிகள் தங்கள் அங்கு தங்கள் தானியங்களைக் கொண்டு வந்து விற்றனர். நடமாடும் வியாபாரிகள் விலையுயர்ந்த உடைகளை செல்வந்தர்களுக்கு விற்றனர். ஒரு பக்கம் கோமாளிகளும் தங்கள் ஆட்டத்தால் மக்களை மகிழ்விக்கின்றனர்.

கி.பி. 500 முதல் கி.பி. 1500 வனாயுள்ள காலம் வரலாற்றில் இடைக்காலம் என்று அழைக்கப்படும். ரோமப் பேரரசின் வீழ்ச்சி இடைக்காலத் தொடக்கம் ஆகும். இடைக்காலத்தின் முடிவு மறுமலர்ச்சியின் தொடக்கம் எனலாம். அக்காலத்தில் அய்ரோப்பா முழுவதும் படையெடுப்புகளும், திடீர்த் தாக்குதல்களும் நடந்தன.
இடைக்காலத்தின் பிற்பகுதியில்தான் இங்கிலாந்திற்கும், ஃபிரான்சிற்கும் இடையே ஏற்பட்ட நூறாண்டு போர் (கி.பி. 1337-1453) நடந்தது.

பிரபுத்துவ முறை:
பிரபுத்துவ முறை முதலில் ஜெர்மனியைச் சார்ந்த ஃபிராங்கிஷ் வீரர்களிடையே ஏற்பட்டது. அவர்கள் தங்களின் தலைவருக்கோ அல்லது ஆட்சியாளருக்கு உண்மையாய் இருந்த மைக்குப் பரிசாக நிலம் அளிக்கப்பட்டனர். இம்முறை கி.பி. 800 முதல் கி.பி. 1200 வரை அய்ரோப்பாவில் பரவியது. கி.பி. 1200ஆம் ஆண்டு வாக்கில் இம்முறை ஆட்டங்கண்டது. அடிமையாக பண்ணையில் வேலை செய்வ தைக் காட்டிலும் நிலத்திற்கு வாடகை தருவதையே விரும்பினர். பிரபுக்களும் தங்கள் படை வீரர்களுக்கு நிலத்திற்குப் பதில் ஊதியம் தரவே விரும்பினர்.
நில அளவைப் பதிவேடு
கி.பி. 1086இல் டியூக் வில்லியம் நார்மண்டி (Duke William of Normandy) இங்கிலாந்தை வெற்றி பெற்றவுடன் அவர் ஆணையின் படி நில அளவைப் பதிவேறு ஒன்று உருவாக்கப்பட்டது. நிலப்பரப்பு, இங்கிலாந்து முழுவதுமுள்ள நில உடைமையாளர் பற்றிய குறிப்புகள், மக்கள் தொகை போன்ற விவாங்கள் கொண்டதே டூமஸ்டே நூல் என்று அழைக்கப்பட்டது.
பன்னிரெண்டாம் நூற்றாண்டில் அய்ரோப்பா முழுவதும் இவ்வாறான நில அளவீடு செய்யப்பட்டது.
கொள்ளை நோய்
இந்த கொள்ளை நோயால் அய்ரோப் பாவில் கி.பி.1340களில் லட்சக்கணக் கான மக்கள் இறந்தனர். இந்த நோய் 1347இல் ஆசியாவிலிருந்து வந்து அய்ரோப்பாவில் பரவியது, தெள்ளுப் பூச்சி, எலிகள் மூலம் அந்நோய் பரவியதை அக்கால மக்கள் அறியா திருந்தனர் என்பது வியப்புக்குரியதே!