ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

கவிதை

 

நட்பு

மழை என்னும் துளியால் இலைகளின் நிறம் மாறிவிடும்
அன்பு என்னும் துளியால் மனிதனின் குணம் மாறிவிடும்
பணம் என்னும் துளியால் வறுமையின் நிலை மாறிவிடும்
மகிழ்ச்சி என்னும் துளியால் துயரம் மாறிவிடும்
உறவு என்னும் துளியால் தனிமையின் நிலை மாறிவிடும்
வெளிச்சம் என்னும் துளியால் இருள் அகன்று விடும்
கனவு என்னும் துளியால் லட்சியத்தை நிறைவேற்ற முடியும்.
மொழி என்னும் துளியால் வார்த்தையை வெளிபடுத்த முடியும்
நட்பு எனும் துளி நம்மை சாதிக்க வைக்கும் நம்பிக்கை ஒளி
நம் மேல் நட்பு கொண்டு வடியும் கண்ணீர் துளி உயிர்துடிப்பை விட மேலானது

- எம்.சந்தியா, சென்னை

பெருமை அளவில் இல்லை

சின்னச் சின்ன
பனித்துளி தான் - மாறும்
மேகங்களாய்...

சின்னச் சின்னச்
மழைத்துளி தான் - சேரும்
வெள்ளங்களாய்...

சின்னச் சின்ன
விதைகள்தான்-உயர்
மரங்களாய்...

சின்னச் சின்ன
துகள்கள்தான்-நெடும்
மலைகளாய்...

சின்னச் சின்ன
தீப்பொறிகள்தான்-சாம்பல்
காடுகளாய்...

பெருமை
அளவில் இல்லை
உருவே
வலிமை இல்லை...

-புதுவை.ம.ஞானசேகரன்