ஆகஸ்ட் 2008 மலர் 5 இதழ் 9

சூடாகும் பூமி - வடக்கே செல்லும் பறவைகள்

 

புவியில் உள்ள தாவரங்கள், விலங்கினங் களின் அளவு அதிக அளவு மாறுபடுவதால், ஏற்படும் தட்பவெப்ப நிலை குறைவதால் ஏற்படும் மாற்றம் காரணமாக கடந்த 25 ஆண்டுகளாக அய்ரோப்பாவில் இருந்து பறவை கள் வடக்கே நோக்கி பறந்து செல் கின்றன என்று விஞ்ஞானி கள் தெரிவிக் கின்றனர்.

தெற்கு அய்ரோப்பாவில் மட்டுமே வாழும் சில பறவை இனங்கள் 1980-2004 கால கட்டத்தில் இங்கிலாந்தில் சர்வசாதாரணமாகக் காணப்பட்டன என்று இங்கிலாந்து நாட்டி லுள்ள 42 வகை அரிய பறவை இனங் களைப் பற்றி மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

வடஅய்ரோப்பாவில் வழக்கமாகக் காணப் படும் சில பறவையினங்கள் இங்கிலாந்தில் தற்போது அரிதாகவே காணப்படுகின்றன.

மாறிவரும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப இப் பறவை இனங்கள் செயல்படுகின்றன என்று டர்ஹாம் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பிரியன் ஹன்ட்லி கூறுகிறார். விவசாய முறைகளில் மாற்றம், சுற்றுச் சூழல் மாசுபடுதல், நகரங்களின் வளர்ச்சி, காடுகள் அழிப்பு ஆகியவை போன்ற விலங்கின வாழ்க்கையைப் பாதிக்கும் காரணிகளில், இவ்வாறு அரிய பறவை இனங்களின் இருப் பைப் பாதிக்கும் காரணிகளைப் பிரித்தறிய இந்த ஆய்வு முயன்றுள்ளது.

பறவைகளும் பட்டாம்பூச்சிகளும் தட்ப வெப்ப நிலை மாற்றங்களுக்கு ஏற்ப முதலில் செயல்படும் உயிரினங்களாக விளங்கு கின்றன; குளுமையான வாழ்விடங்களைத் தேடி நீண்ட தூரம் பறந்து செல்ல அவைகளால் முடியும் என்பதே இதன் காரணம். வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க மற்ற உயிரினங்களும் தாவரங்களும் நீண்ட காலத்திற்குப் பிறகே மாற்றம் பெறவோ செயல்படவோ தொடங்கு கின்றன. அதுவும் வேற்றிடங்களுக்கு நகர்ந்து செல்ல இயன்ற உயிரினங்களின் ஆற்றலைப் பொருத்தது. நிலங்கள் வறண்டு பாலைவனமாதல், வெள்ளப் பெருக்குகள் ஏற்படுதல், துருவப் பனிப்படலங்கள் உருகுதல், கடல் நீர் மட்டம் உயர்தல், உயிரினங்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்படுதல், சில உயிரினங்கள் அழிந்து போதல் போன்ற தீங்குகள் புவி வெப்பமயமாவதன் காரணமாக ஏற்படும் என்று கடந்த ஆண்டுஅய்க்கிய நாடு களின் தட்பவெப்ப ஆய்வுக் குழு எச்சரித்துள்ளது.