செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

உலக நாடுகள் - எகிப்து குடியரசு - வை.கலை

 

அமைவிடம்

ஆப்பிரிக்கா, ஆசியா, அய்ரோப்பா ஆகிய கண்டங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது.

செங்கடல் மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளை எல்லைகளாகக் கொண்டது.

சூடான், லிபியா, இஸ்ரேல் போன்ற நாடுகள் இதன் அண்டை நாடுகள்.

சூயஸ் கால்வாய்ப் பகுதியை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

தலைநகர் - கெய்ரோ.

 

பரப்பளவும் மக்கள் தொகையும்

இதன் பரப்பளவு 10,01, 450 சதுர கிலோ மீட்டர்

இந்நாட்டின் மக்கள் தொகை 7,88,87,007 பேர்(2006 ஜூலை கணக்கெடுப்பு)

இவர்களில் 94ரூ பேர் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுகின்றனர்.

மக்கள் தொகை வளர்ச்சி 1.75ரூ ஆகும்.

மொத்த மக்கள் தொகையில் 57.7ரூ பேர்

அரேபிய மொழி அலுவலக மொழியாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகள் பரவலாகப் பேசப்படுகின்றன.

 

பொருளாதாரம்

இந்நாட்டின் நாணயம் எகிப்து பவுண்ட்

20ரூ பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ளனர்.

அரசு முறை

இந்நாட்டின் சட்டமன்றம் ஒற்றை அடுக்கு முறையைக் கொண்டது.

நாட்டின் தலைவராக அதிபர் உள்ளார்.

அரசாங்கத்தின் தலைவராக பிரதமர் செயல்படுகிறார்.

இந்நாடு 1922 பிப்ரவரி 28-இல் சுதந்திரம் பெற்றது.

ஆங்கிலேயர்களின் பொது சட்டமும் இஸ்லாமிய சட்டமும் நடைமுறையில் உள்ளன.

போக்குவரத்தும் தகவல்தொடர்பும்

இருப்புப் பாதைகள் 5,063 கிலோமீட்டர் நீளமும் சாலைகள் 64,000 கி.மீ நீளமும் அமைந்துள்ளன.

 

வரலாற்றுப் பார்வை

கி.மு. 3000 வாக்கில் எகிப்திய நாகரீகம் சிறந்து விளங்கியதாக அறியப்படுகிறது.

நைல் நதிக்கரையில் உருவமான இந்நாகரீகமே உலகின் முதல் நாகரீகமாக கருதப்படுகிறது.

கி.பி. 1914 வரை பல்வேறு சமூகங்களால் ஆளப்பட்ட எகிப்து, 1914-இல் பிரிட்டன் ஆட்சிக்குள் வந்தது.

1922-இல் அரசமைப்பு உருவாக்கப்பட்டது.

1952-இல் மன்னராட்சி தூக்கியெறியப்பட்டு சிரியாவுடன் இணைந்து அய்க்கிய அரபுக் குடியரசு அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு தோல்வியடைந்தது.