செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09

சுதந்திர தேவி சிலை வடிவில் மனிதக் கோபுரம்

 

முதலாம் உலகப்போரின் இறுதிக் கட்டத்தில் போர் நிதி திரட்டுவதற்காக மோல், தாமஸ் என்ற இரண்டு புகைப்படக் கலைஞர்களின் முயற்சியில் உருவாக்கப்பட்டு படம் பிடிக்கப்பட்ட காட்சி இது! 1918-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அமெரிக்காவின் டாட்ஜ் இராணுவ முகாமில் அமைந்திருந்த மைதானத்தில் எடுக்கப்பட்ட இந்தப் படம் போன்றே, விடுதலை மணி, கடற்படை சின்னம், அன்றைய அமெரிக்க அதிபர் உட்ரோ வில்சன் போன்ற வடிவங்களிலும் வீரர்கள் நிறுத்தப்பட்டு புகைப்படம் எடுக்கப்பட்டது. விற்பனைக்கு வராத இப்படங்களை, இதில் இடம்பெற்ற 18,000 வீரர்களில் ஒருவரது பேரன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். சுடரில் தீ எரியும் பகுதி - 600 அடி - 12000 வீரர்கள்
சுடர் பகுதி (தீ தவிர்த்து)- 380 அடி - 2,800 வீரர்கள்
சுதந்திர தேவி சிலையின் வலது கையில் - 1,200 வீரர்கள்
தலை, உடல் பாகங்களில் - 2,000 வீரர்கள்
மொத்தம் 1,235 அடி - 18000 வீரர்கள்
மற்ற படங்கள் அருகில் அடுக்கப்பட்டுள்ளன.
தகவல்: ஆ.ச.பவானி என்னாரெசு மணியம்மை, காரைக்குடி