செப்டம்பர் 2008 மலர் 5 இதழ் 09
துணுக்குப் பேழை
ஒரு மைல் உயரத்திலுள்ள விமானத்திலிருந்து குண்டு வீசினால் அது நிலத்தினில் விழ 19 நொடிகளாகும்.
பாம்புகள் இல்லாத நாடுகள் அயர்லாந்து, நியூசிலாந்து, ஹவாய், அய்ஸ்லாந்து முதலியன.
எதிரொலி ஒரு விநாடிக்கு ஒரு ஆயிரத்து 125 அடிகள் வரை பயணிக்கும்.
உலகிலேயே மிகச் சிறிய சுதந்திர நாடு மொனாகோ (MONACO) என்பதுதான். இது 8 ச.மைல்கள் பரப்புடையது.
உலகிலேயே மிக உயரமான தொடர் வண்டி (TRAIN) பாலம் ஃபிரான்சிலுள்ள ஃபேடெஸ்வியாடக்ட் (Fades Viaduct) என்பதுதான். இதன் உயரம் 434 அடிகள்.
ராக்கெட்டின் வேகம் விநாடிக்கு 11 கிலோ மீட்டர்களாகும்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மொத்தம் 395 ஷரத்துகள் உள்ளன.
அத்திப் பூவையும் ஆந்தைக் குஞ்சையும் இது வரை யாரும் பார்த்ததில்லை.
இம்மி என்பது ஒன்றில் 10,75,200 பாகமாகும்.