தெரியுமா?

தமிழகத்தில் விழுந்த முதல் எரிகற்கள்

அண்மையில் கிருஷ்ணகிரி அருகே பூமியை தாக்கியத் எரிகற்கள் 465 கோடி ஆண்டு தொன்மை வாய்ந்தவை என கருதப் படுகின்றன. 3.5 கி.மீ. நீளம் கொண்ட கல் ஒன்று பூமியை வந்தடைந்த போது 20 கிலோ எடை கொண்டதாக மாறியதால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறினர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே அட்டக்குறுக்கி மற்றும் காமன்தொட்டி, காங்காபுரம், கோட்டூர் உள்ளிட்ட இடங்களில் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி காலை 8 மணி முதல் 9 மணிக்குள் பயங்கர சத்தத்துடன், வானத்தில் இருந்து சில எரிகற்கள் விழுந்தன.

இதனால், 3 அடி ஆழத்திற்கு பெரிய பள்ளம் ஏற்பட்டது. இந்த எரிகற்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. சென்னையில் உள்ள மத்திய அரசின் புவியியல் ஆராய்ச்சித் துறை இயக்குநர் கிருஷ்ணன், புவியியல் வல்லுநர் நாகராஜன் ஆகியோர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் இது குறித்து கூறும்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் விழுந்துள்ளவை எரிகற்கள்தான். அண்ட வெளியில் வியாழன் கோளுக்கும் செவ்வாய்க் கோளுக்கும் இடைப்பட்ட பகுதியில் ஆஸ்ட் ராய்ட் பெல்ட் என்ற பகுதியில் இருந்து இரும்பு, நிக்கல், மெக்னீசியம் ஆகிய கனிமங்கள் கொண்ட எரிகற்கள். இவை, சுற்றுப்பாதையில் இருந்து விலகி பூமியை நோக்கி வந்துள்ளன. இந்த எரிகற்கள் 465 கோடி ஆண்டுகளுக்கு முந்தையன.

கோட்டூர் பகுதியில் விழுந்த எரிகல் 3.5 கி.மீ. நீளம், 1 கி.மீ. அகலம் கொண்டதாகும். வானில் எரிந்து கொண்டே வந்து, பூமியில் விழுந்தபோது 20 கிலோ எடை கொண்டதாக மாறிவிட்டது. கடந்த 1960ஆம் ஆண்டு மகாராஷ்டிராவின் புனேயில் இதே போன்ற எரிகற்கள் பூமியில் விழுந்தது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கண்டறியப்பட்டுள்ள முதல் எரிகற்கள் இவையாகும். இவற்றை சென்னைக்கு எடுத்துச் சென்று பெயரிட உள்ளோம். பின்னர், கொல்கத்தாவில் உள்ள ஆராய்ச்சி நிறுவனத் திற்கு அனுப்பி வைக்கப்படும், என்றார்கள்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008