உலக நாடுகள்

எத்தியோப்பியா

அமைவிடம் மற்றும் புவியியல்:

- ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் சோமாலியா நாட்டிற்கு மேற்கே அமைந்துள்ளது.

- சூடான், கென்யா, எரித்ரியா, சோமாலியா போன்றவை அண்டை நாடுகள்

- இதன் தலைநகர் அடிஸ் அபாபா.

- மொத்த பரப்பளவு 11,33,882 சதுர கிலோ மீட்டர்.

- சுற்றிலும் நிலப் பகுதியால் சூழப்பட்டுள்ளது. வடக்கில் மலைப் பகுதிகளையும், மேற்கு மற்றும் கிழக்கில் தாழ்நிலங்களையும் கொண்டது.

- மிதமான தட்ப வெப்ப நிலையைப் பெற்றுள்ளது.

- காட்டு மரங்கள் அதிக அளவில் வீழ்த்தப்படுவதால் கடுமையான நிலஅரிப்பு ஏற்படுகிறது.

மக்கள் தொகை:

- 2006 ஜுலை கணக்கெடுப்பின்படி இந்நாட்டின் மக்கள் தொகை: 7,47,77,981 பேர்.

- வளர்ச்சி வீதம்: 2.31ரூ.

- மூன்றில் ஒரு பகுதி மக்கள் ஒரோமோ மக்கள். மற்றொரு பகுதியினர் அம்ஹாரியர்கள்.

- எஞ்சியவர்கள், டிக்ரே, சோமாலி, அபார் இனத்தவர்கள்.

- மொழிகள்: அம்ஹாரிக் மற்றும் ஒரோமோ.

- எத்தியோப்பியரின் மரபு வழி மதங்கள்: இஸ்லாம் மற்றும் அனிமிஸம் ஆகிய மதங்கள் பின்பற்றப்படுகின்றன.

- மொத்த மக்கள் தொகையில் 42.7ரூ கல்வியறிவு பெற்றவர்கள்.

- சராசரி வாழ்நாள் 49.03 ஆண்டுகள்.

பொருளாதாரமும், சேவைகளும்:

- இந்நாட்டின் நாணயம் பிர்.

- விவசாயம் - இந்நாட்டின் முக்கியத் தொழில்

- காபி - முக்கிய ஏற்றுமதிப் பொருளாகும். மற்ற ஏற்றுமதிப் பொருட்கள்: தங்கம், தோல் பொருள்கள், உயிருடன் விலங்குகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள்.

- முக்கிய இறக்குமதிப் பொருள்கள்: உணவு, பெட்ரோலியப் பொருள்கள், எந்திரங்கள், மோட்டார் வாகனங்கள், துணிகள்.

- முக்கிய இயற்கை வளங்கள்: தங்கம், பிளாட்டினம், தாமிரம், பொட்டாஷ், இயற்கை வாயு ஆகியவை.

- சோமாலியா நாட்டிற்கு அடுத்து உலகின் வறுமையான நாடாகும். (50ரூ மக்களுக்கு மேல் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கின்றனர்).

- இந்நாட்டின் மொத்த இரயில்வழி தூரம் 681 கிலோ மீட்டர் மட்டுமே. சாலைகள் 33,856 கிலோ மீட்டர் நீளம் கொண்டவை.

அரசு முறையும், வரலாற்று நிகழ்வுகளும்:

- இரண்டு சட்டப் பேரவைகளைக் கொண்ட இந்நாட்டின் தலைவர் குடியரசுத் தலைவர்.

- அரசாங்கத்தின் தலைவர் பிரதமர்.

- 1995-இல் புதிய குடியரசு அமைக்கப் பட்டது.

- பைபிளில் குஷ் என்று வர்ணிக்கப்படும் நாடு.

- 4ஆம் நூற்றாண்டில் கிறித்துவ மதம் அறிமுகப்படுத்தப்பட்டது.

- 8ஆம் நூற்றாண்டில் அரேபியர்களால் கைப்பற்றப்பட்டது.

- 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் போர்ச்சுகீசியர் மூலமாக அய்ரோப்பியர் தொடர்பு ஏற்பட்டது.

- 1890இல் இத்தாலியின் குடியேற்ற மானது.

- 1896 - இத்தாலியர் விரட்டப்பட்டனர்.

- 1936 - இத்தாலி மீண்டும் கைப்பற்றியது.

- 1941-இல் பிரிட்டன் படைகள் மூலம் இத்தாலி விரட்டப்பட்டது.

- 1974-இல் இராணுவ ஆட்சி ஏற்பட்டது.

- 1991-இல் மக்கள் புரட்சி ஏற்பட்டது.

- 1995-இல் குடியரசு நாடானது.

- 1993-இல் இந்நாட்டின் ஒரு பகுதியான எரித்ரியா தனி நாடானது.

- 2001-இல் எரித்ரியா நாட்டுடன் மோதல் ஏற்பட்டது.

Archives

?பெரியார் பிஞ்சு

2008