கண்டுபிடிப்பு

12 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய எறும்பு இனம்

உலகில் 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து இன்று வரை வாழ்ந்து வரும் மிகப் பழையான உயிரினம் என்ற நம்பப்படும் ஒரு வகையான எறும்பினத்தை ஜெர்மன் நாட்டு உயிரியல் ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். கர்ஸ்ஷ்ரூஷ் இயற்கை வரலாற்று அருங்காட்சியத்தின் ஆய்வாளர்கள் ஆப்ரிக்காவில் உள்ள அமேசான் மழைக் காடுகளில் 2007 ஆம் ஆண்டில் மூன்று மில்லி மீட்டர் நீளம் கொண்ட இந்த எறும்பினத்தைக் கண்டனர். எறும்பு உயிரினம் முதன் முதலாக எவ்வாறு தோன்றியது என்பதைக் கண்டறிய இது உதவும் என அவர்கள் நம்புகின்றனர். இக்காடுகளில் கடந்த ஆண்டில் ஆய்வாளர்கள் காளான்களைப் பற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தபோது, தற்செயலாக இந்த சிறிய எறும்பினத்தைக் கண்டனர்; மார்டியாலிஸ் ஹூரேகா என அதற்கு அவர்கள் பெயரிட்டனர். குளவி போன்ற சிறிய தோற்றத்தைக் கொண்ட இந்த உயிரினம் வேறு எந்த எறும்பைப் போன்றும் இருக்கவில்லை. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்து உயிர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகக் கருதப்படும் இது, உலகில் மிகப் பழைமையான காலந் தொட்டு இன்று வரை உயிர் வாழ்ந்து வரும் உயிரினம் என்ற பெருமைப் பெறுகிறது. அவற்றின் தோற்றக் காலத்தைக் கணக்கிட அவற்றின் முன்னங்கால்களில் இருந்து மரபணு மாதிரிகளை எடுத்து அறிவியலாளர்கள் பயன்படுத்தினர்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008