ராக்கெட் மனிதன்

மண்ணெண்ணையினால் இயங்கும் உந்து ஆற்றல் கொண்ட இறக்கைகளின் உதவியுடன் பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்று சுவிட்சர்லாந்து நாட்டின் விமானி யூவிஸ் ரோஸி (Yves Rossy) என்பவர் சாதனை படைத்துள்ளார்.

உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான கப்பல்கள் செல்லும் இந்த ஆங்கிலக் கால்வாயின் மேல் பறந்து சென்ற இந்த 49 வயதான விமானி, டோவர் துறை முகத்தில் வெள்ளைக் குன்றின் மேல் உள்ள கலங்கரை விளக்கின் அருகில் உள்ள விவசாய நிலத்தில் இறங்கினார்.

இவ்வாறு பறந்து வந்தது மிகவும் அருமையான அனுபவமாக இருந்தது. பறப்பதற்கு முன்பு இருந்ததை விட நான் இப்போது அதிக அமைதியை உணர்கிறேன். இவ்வாறு பறப்பதற் கான அனைத்து சூழ்நிலைகளும் அருமையாக அமைந்தன என்று, தரை இறங்கியதும் அவரைச் சூழ்ந்த பத்திரிகையாளர்களிடம் பெருஞ் சிரிப்புடன் அவர் கூறினார்.

முதுகில் கார்பன் இறக்கையைக் கட்டிக் கொண்டு 2,500 மீட்டர் உயரத்தில் ஒரு விமானத்திலிருந்து குதித்த அவர், இறக்கைகளின் உந்து ஆற்றல் மூலம் 200 கி.மீ. வேகத்தில் பறந்து சென்றார்.

35 கி.மீ. தூரம் கொண்ட இந்த தூரத்தை இவர் பத்து நிமிடங்களுக்குள் முடித்துக் கொண்டு தனது இன்ஜினை அணைத்துவிட்டு, ஒரு பச்சை மற்றும் நீல வண்ணப் பாராசூட்டின் மூலம் 1,500 கி.மீ. உயரத்தில் இருந்து இங்கிலாந்து கடற் கரையில் இறங்கினார். சுவிட்சர்லாந்து சர்வதேச விமான நிறுவனத்தில் பணியாற்றும், துணிவு மிக்க இந்த விமானியின் முதுகில் கட்டப்பட்டிருந்த இறக்கை அமைப்பைக் கழற்ற மற்றவர் உதவினர் எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி சொல்ல நான் விரும்புகிறேன். இந்த முறையில் ஆங்கிலக் கால்வாயைக் கடந்த ஒரே ஒருவன் நான்தான். ஆனால் அதனைச் செய்ய எனக்குப் பலர் உதவியுள்ளனர் என்று அவர் பத்திரிகை யாளர்களிடம் கூறினார். எந்தச் சிக்கலும் இன்றி இந்தப் பயணம் இனிதே முடிந்தது என்று அவருடன் இணைந்து பணியாற்றும் ஸ்டீபன் மெரிமர் என்பவர் கூறினார். காற்றின் அலை மோதலில் அவர் சிறிது தடுமாறினார். என்றாலும் இந்தப் பயணம் இனிதாகவே முடிந்தது. அவர் இவ்வாறு பறந்து இங்கிலாந்தை அடைந்துள்ளர் என்பதுதான் கணக்கில் கொள்ளப்படவேண்டியது; நாங்கள் பெருமகிழ்ச்சியடைகிறோம் என்று அவர் கூறினார்.

பத்து நிமிடங்களுக்கு மேல் ரோஸி இவ்வாறு இறக்கை மூலம் பறந்ததே இல்லை. தனது தளவாடங்களையும், எடையையும் மிகவும் சரியாக அவர் கையாள வேண்டியிருந்தது; ஒரு சில நூறு கிராமம் எடை கூடுதலாக இருந்தாலும், அது அவரது பறக்கும் ஆற்றலைப் பாதித்திருக்கும்.

அவர் அருகே பறந்து வந்த இரண்டு விமானங்கள் மற்றும் இரண்டு ஹெலிகாப்டர்கள் மூலம் இந்த நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப் பப்பட்டது.

படம் 1. இறக்கை விமானத்தில் இருந்து குதிக்கும் போதும், பாராசூட்டில் குதிக்கும் போதும் மூடித் திறந்து கொள்ளும்.

எடை எரிபொருள் புகையுடன் 55 கிலோ

இல்லாமல் 30 கிலோ

விபத்து கால ஏற்பாடு விபத்து ஏதேனும் நேர்ந்தால் காப்பாற்றிக் கொள்ள தானாகத் திறந்து கொள்ளும் பாராசூட்டும், தானாக அணைந்து போகும் இன்ஜின்களும்.

படம் 2. மண்ணெண்ணெயினால் எரியக்கூடிய இரண்டு ஜோடி ஜெட் டர்பைன்கள்

வேகத்தைக் கட்டுப் படுத்த மோட்டார் சைக்கிள் கைப்பிடி போன்ற பிடி

வேகம்

சராசரி 200 கி.மீ. மணிக்கு

உயரப் போகும் போது 180 கி.மீ. மணிக்கு

கீழே இறங்கும்போது 300 கி.மீ. மணிக்கு டர்பன்கள் 4 ஜெட் 200 வகை

உந்து ஆற்றல்: ஒவ்வொன்றும் 49 பவுண்டு

எரிபொருள்: 95ரூ மண்ணெண்ணெய்

5ரூ டர்பன் ஆயில்

படம் 3. பிளாட்டஸ் போர்ட்டர் விமானம் புறப்பட்டுச் செல்கிறது. 2,500 மீட்டர் உயரத்தில் தனது என்ஜின்களை செயல்படுத்தச் செய்து, தனது இறக்கைகளை மடித்துக் கொண்டு, விமானத்தில் இருந்து குதிக்கிறார்.

படம் 4. இறக்கைகளை விரித்துக் கொண்டு அவற்றை சமன் செய்து கொண்டு பறக்கிறார். இதற்கு 30 வினாடிகள் பிடித்தன.

படம் 5. எரிபொருள் லீவரைப் பயன்படுத்தி என்ஜினின் வேகத்தைக் கூட்டி ஒரே சீராக டோவருக்கு பறங்நது செல்கிறார். பார்வையின் மூலம் திசை மாறிச் செல்கிறார். வலது பக்கம் திரும்ப உடலை சிறிது வலது பக்க இறக்கையுடன் நகர்த்தி திரும்புகிறார்.

படம் 6. இறக்கைகளை மடித்துக் கொண்டு, பாராசூட்டை விரித்துக் கொண்டு 800 மீட்டர் உயரத்தில் இருந்து தனது முதுகுப் பக்கமாகத் தரை இறங்குகிறார். படம் 7

உடை ஃபார்முலா - 1 கார் பந்தய வீரர்கள் அணிவது போன்ற நைமக்ஸ் கவச உடை ஜெட் என்ஜின்களின் வெப்பத்திலிருந்து அவரைப் பாதுகாக்கும்.

தகவல் : இனியவன், துபாய்

நன்றி: ழுரடக நேறள தமிழில்: த.க.பா.

Archives

?பெரியார் பிஞ்சு

2008