உன்னையே நீ அறிவாய்...

ஹலோ... வணக்கம்! கல்லீரல் பேசுகிறேன்

- கவிஞர் செவ்வியன்

நம் உடலினுள் இருக்கும் சுரப்பிகளுள் மிகவும் பெரியவர் கல்லீரல் அண்ணாச்சிதான். அவரது தொழிலகம் நம் வயிற்றின் வலது பக்கத்தில் அடர் சிவப்பு நிறத் தோற்றத்தோடு இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர் தம் எடை என்ன தெரியுமா? 1.5 கிலோ மட்டுமே. அதற்குள்ளே நூற்றுக்கணக்கான பணிகள் ஓய்வொழிச்சல் இன்றி நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன என்பதை நீங்கள் அறிந்தால் அசந்து போவீர்கள்.

அண்ணாச்சியின் முக்கியமான பணி, இரப்பையால் அடித்து நொறுக்கிக் கூழாக்கப் பட்டு, சிறுகுடலுக்குள் தள்ளப்படும் இரைப் பைக் கூழிலிருந்து, உடலின் தேவைக்கேற்ப வேதியியல் மாற்றத்திற்கு உட்படுத்தி சத்துகளைப் பிரித்தெடுத்து இரத்தம் வழியாக உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கும் மிக முக்கியமான பணியை அண்ணாச்சி ஆரவாரமின்றி, விளம்பரமின்றி செய்து வருகிறார். இதற்குத் தேவையான பித்தநீரை, கல்லீரல் அண்ணாச்சிதான் உற்பத்தி செய்கிறார்.

ஒரு நிமிடத்திற்கு ஒன்றரை லிட்டர் இரத்தம் கல்லீரல் வழியாகச் செல்கிறது என்றால், கல்லீரல் அண்ணாச்சி எவ்வளவு சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்!

அண்ணாச்சியின் மற்றொரு பணி என்ன தெரியுமா? இரத்தப் பெருக்கைத் தடுத்து இரத்தத்தை உறைய வைக்கும் புரோத்ராம் பின் என்பதை உற்பத்தி செய்வதாகும்.

நம்மில் பெரும்பாலோருக்குக் காயங்கள் ஏற்படுகின்றன. இரத்தம் கசிகிறது. சில வேளைகளில் இரத்தம் பெருக்கெடுக்கவும் செய்கிறது. இரத்தம் உடம்பிலிருந்து வெளி யேறி விட்டால் உயிருக்கு ஆபத்து அல்லவா! எனவே, கல்லீரல் அண்ணாச்சி புரோத்ராம்பின் மூலம் இரத்தத்தை உறைய வைத்து நம்மைக் காப்பாற்றுகிறார்.

அண்ணாச்சி, புரதத்தைத் தமக்குள் சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார். புரதம் பயன்படுத்தப்படும் போது, அது டாக்சின் என்று பொருளாக மாற்றமடைகிறது. அஃதா வது அமோனியாவை யூரியாவாக மாற்றி சிறுநீரகம் வழியாக வெளியேற்றப்படுகிறது.

அண்ணாச்சியின் மற்றுமொரு பணி, இரத்தத்தில் உலவும் பல நுண்கிருமிகளைக் கொன்று உடல் நலத்தைப் பாதுகாக்கும் கூப்பர் எனப்படும் சிறப்புச் செல்களை உற் பத்தி செய்து, அவைகளை இரத்தத்தில் கலந்துவிடுகிறார்.

அண்ணாச்சியின் பணிகளில் சிலவற்றைக் கேளுங்களேன்!

1. உடலுக்குத் தேவையான சக்தியை உருவாக்குவது.

2. அல்புமின் என்னும் வெள்ளைப் புரதத் தையும் ஃபைப்ரினோசென் என்னும் கரையும் புரதத்தையும் உற்பத்தி செய்வது.

3. வைட்டமின்களில் சிலவற்றையும், தாதுக்கள், சர்க்கரை ஆகியவற்றையும் சேமித்து வைப்பது.

4. கொழுப்பு (கொலஸ்ட்ரால்), உற்பத்தி யைத் தடுத்து நிறுத்துவதும், தேவையான போது அதை வேறு ஒரு பொருளாக மாற்றுவதுமாகும்.

5. நம் உடலில் உற்பத்தியாகும் பொருள் களில் இருக்கும் நச்சுத் தன்மையை அழிப்பது.

6. வளர்சிதை மாற்றத்தில் பெரும் பங்காற்றுவது.

7. உடல் உறுப்புகள் ஒழுங்காக வேலை செய்வதைத் தூண்டும் சுரப்பி நீர்களை உற்பத்தி செய்வது.

8. திசுக்களின் மறுசீரமைப்புக்கு உதவிக் கரம் நீட்டுதல் அஃதாவது மறு சீரமைப்புக்கு உதவும் தாதுப் பொருள்களான இரும்பு, செம்பு ஆகியவற்றை உற்பத்தி செய்வது.

9. மருந்தின் தன்மை தெரியாமல், நாம் உட்கொள்ளும் மருந்து மாத்திரைகளின் வீரியத்தைக் கட்டுப்படுத்தி, நம்மை இறப் பிலிருந்து காப்பாற்றுவது.

தம்பி! தங்கைகளே! நச்சுத் தன்மையை அழிக்கும் ஆற்றல் அண்ணாச்சிக்கு உண்டு என்றாலும், தொடர்ந்து மதுக் குடிப்போர்க்கு ஏற்படும் நச்சுத்தன்மையை அழிக்க முடியாமல் அண்ணாச்சி கைவிட்டுவிடும் போதுதான் மரணம் ஏற்படுகிறது.

கல்லீரலைத் தாக்கும் நோய்கள்:

1. மஞ்சள் காமாலை, 2. புற்றுநோய். மேலும் வயிற்றுப்புண் (அல்சர்), வாந்தி, குமட்டல், மனக் குழப்பம், தூக்கமின்மை ஆகிய நோய் களுக்கான அறிகுறிகள் ஏற்படும்.

மேற்கண்ட நோய் களுக்கும் காரணம் என்ன தெரியுமா? புகைத் தலும் மதுக் குடித்தலுமே! இக்கொடிய பழக் கத்துக்கு ஆண்களில் 80 விழுக்காட்டினரும் பெண்களில் இருபது விழுக்காட்டினரும் அடிமையாகி விட்டனர். மாணவர்களாகிய நீங்கள் அறிவாளிகள். வருமுன் காக்கும் முயற்சியில் வெற்றி பெற்றால் எதிர்காலம் ஒளிமயமாக அமையும். உலகம் உங்கள் கையில்.

Archives

?பெரியார் பிஞ்சு

2008