பாராட்டுகிறார்கள்

தாங்கள் பெரியார் பிஞ்சு இதழில் புதியதாக வெளியிட்டு வரும் பழைய செய்தி, புதிய உண்மை என்னும் தலைப்பில் வரும் தகவல்கள் சிறப்பாக உள்ளன. இத்தகவல்களைத்தான், எனது பள்ளியில் காலையில் நடைபெறும் இறை வழிபாட்டின்போது பயன்படுத்துகிறேன். இவை மாணவர்களுக்கு மிகவும் பயனுடையதாக உள்ளது. அத்தோடு அறிவியல் பலகையிலும் இவைகளைத்தான் எழுதிப் போடுகிறோம். பழைய தவறான கருத்துகளைப் போக்கி உண்மையை மாணவர்களால் அறிந்து கொள்ள முடியும். எனவே இவற்றைத் தொடர்ந்து வெளியிடுவதோடு அதிகத் தகவல்களையும் வெளியிடவும்.

- அ.குருஷ்ராஜா, இனாம் ரொட்டிய பட்டி

பெரியார் பிஞ்சு நாளுக்கு நாள் சிறப்பாக வந்து கொண்டிருக்கின்றது. அதன் பலவகை செய்தித் தொகுப்புகளும் செய்திகளைத் தரும் முறையும் குழந்தைகளுக்கு, சிறுவர்களுக்கு ஏற்ற புதிர் தொகுப்புகளும் நன்முறையில் அமைந்து வருகின்றன. சிறுவர் பாடல் ஒவ்வொன்றும் சிறப்பாக உள்ளது.

- வெற்றிச் செல்வன், பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, குன்றத்தூர், சென்னை - 69

Archives

?பெரியார் பிஞ்சு

2008