உலக நாடுகள்
எரித்ரியா
- வை.கலை
புவியியலும் மக்கள் தொகையும்:
- கிழக்கு ஆப்பிரிக்காவில் செங்கடலை ஒட்டி அமைந்துள்ளது.
- எத்தியோப்பியா சூடான் போன்றவை இதன் அண்டை நாடுகள்
- பரப்பளவு 121,320 சதுர கிலோ மீட்டர்
- 2006 சூலை கணக்கெடுப்புபடி இந்நாட்டின் மக்கள் தொகை 4,786,994 பேர்
- மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 2.47 விழுக்காடு
- சராசரி வாழ்நாள் 59 ஆண்டுகள்
பொருளாதாரமும் அரசு முறையும்:
- இதன் தலைநகர் ஆஸ்மிரா
- சுதந்திர நாள்: 24.05.1993 (எத்தியோப்பியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது)
- 1957 ஆண்டின் எத்தியோப்பியா சட்ட முறைகள் பின்பற்றப்படுகின்றன.
- குடியரசு தலை நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் தலைவராகவும், தேசிய பேரவை தலைவராகவும், மாநிலங்களவை தலைவராகவும் உள்ளார்.
தற்போது இவையாஸ் அசெவர்கி.
பொருளாதாரம்:
- நாட்டில் தங்கம், பொட்டாஷ், துத்தநாகம், தாமிரம், உப்பு இயற்கை எரிவாயு போன்றவை முக்கிய கனிம வளங்களாகும்.
- நாட்டின் கல்வியறிவு பெற்றோர் 58.6 விழுக்காடு உள்ளனர்.
- நாட்டின் நாணயம் நக்பா
- துணிகள், உணவுப் பயிர்கள் மற்றும் சிறுதொழில் பொருட்கள் ஏற்றுமதியும், பெட்ரோலியப் பொருட்கள் எந்திரங்கள், போன்றவை இறக்குமதியும் செய்யப்படுகின்றன.
- நாட்டின் 50 விழுக்காடு பேருக்கு மேல் வறுமை கோட்டிற்கு கீழே உள்ளனர்.
- 306 கி.மீ. இருப்பு பாதைகளும் 4,010 கி.மீ. நெடுஞ்சாலைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
வரலாற்று சுவடுகள்:
- கி.பி. 300-600 கால கட்டங்களில் எரித்தியா எத்தியோப்பியாவின் கட்டுபாட்டில் இருந்தது.
- 1500இல் ஓட்டாமன் அரசின் கட்டுபாட்டில் இருந்தது.
- 1941 இங்கிலாந்து எரித்ரியாவை ஆக்ரமித்தது.
- 1949இல் அய்.நா. நேரடி ஆட்சி பகுதியானது.
- 1962இல் எத்தியோப்பியா எரித்தியாவை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
- 1993இல் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டு, பெரும்பான்மை மக்கள் தனி நாட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே 1993இல் தனி நாடானது.
- 1999இல் எத்தியோப்பியாவுடன் எல்லை தகராறு ஏற்பட்டு 2000இல் இரண்டு நாடுகளாகும் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டன. |