வாகை சூட வாரீர்

- சமா.இளவரசன்

'குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை கண் தெரியாத தாய் கூட வளர்த்துவிடுவார்' என்றொரு பழமொழி இருக்கிறது. காரணம் ஒரு வயது வரைக்கும் அக்குழந்தை பெரிதாய் சேட்டையெல்லாம் செய்துவிடாது. தொட்டி லில் இட்டால் உறங்கும்.. பால் கொடுத்தால் அருந்தும். தனக்கெதுவும் பிரச்சினை என்றால் பெருங்குரலெடுத்து அழும். சில குழந்தைகள் அதிகம் அழும். சில குழந்தைகள் பிரச்சினை யிலாமல் இருக்கும். இவை பொதுவான விசயங் கள் என்பதால் யாரும் வளர்த்துவிட முடியும் என்பதுதான் அந்த பழமொழியின் கருத்தாகும்.

அதுபோன்றுதான் பள்ளிப்படிப்பும் கூட. இன்றைய நாளில், பிறந்து மூன்று வயது முடிந்ததும் குழந்தையை ஒரு பள்ளியில் எல்.கே.ஜி-யில் சேர்த்துவிட வேண்டும் என்பது குக்கிராமத்துப் பெற்றோர்கள் வரை தெரிந்திருக் கிறது. பிறகென்ன யூ.கே.ஜி, 1-ஆம் வகுப்பு தொடங்கி 5-ஆம் வகுப்பு, அப்புறம் அந்தப் பள்ளியிலோ வேறொரு உயர்நிலைப் பள்ளியி லோ சேர்த்துவிட்டு 6-ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை படிக்கவைத்து விடலாம். எல்.கே.ஜி, யூ.கே.ஜி என்பதற்கெல்லாம் விளக்கம் தெரிய வேண்டும் என்பது கூட இல்லை. எல்.கே.ஜி, யூ.கே.ஜி படித்த பிள்ளை களில் பலருக்கே L.K.G. என்றால் டுடிறநச முனேநச ழுயசனந, Lower Kinder Garden, U.K.G. என்றால் Upper Kinder Garden என்று தெரிந்திருக்குமா என்பது சந்தேகமே!

சரி, இப்படி படிக்க வைப்பதில் தமிழ் வழியா? English Medium-ஆ? அரசுப்பள்ளியா? தனியார் பள்ளியா? மாநிலக் கல்வித் திட்டமா? Matriculation -ஆ? என்பன போன்ற கேள்விகள் எல்லாம் அவரவர் வசதியையும், இருப்பிடத்தை யும் தேர்வையும் பொறுத்தது. இவற்றில் எதில் படித்தாலும் பத்தாம் வகுப்பு என்ற ஒரே அடையாளம் தான். பத்தாம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்களை வைத்து, 11-ஆம் வகுப்புக்கு சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதில் நம் விருப்பம், அல்லது நாம் பிற்காலத்தில் தேர்ந் தெடுக்கப்படும் துறை போன்றவற்றிற்கான பொதுவான அடிப்படைகள் அமைந்துவிடும்.

ஆனால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பின்புதான் மிகப் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்து நிற்கும். அடுத்தது என்ன? எதிர்காலத்தில் நீ என்னவாகப்போகிறாய் என்று சின்னப்பிள்ளை யாக இருக்கும் போது யாராவது கேட்டிருப் பார்கள். நான் டாக்டராகப் போகிறேன் என்றோ, பெரிய்ய்ய இஞ்சினியரா வேன் என்றோ, போலீஸாவேன், கிரிக்கெட் பேட்ஸ்மேன் ஆவேன் என்றோ பெரும் பாலானவர்கள் சொல்லியிருப்போம். கொஞ்சம் விவரம் தெரிந்த வீட்டுப் பிள்ளை களாயிருந்தால் பைலட் ஆவேன் என்றோ, Space Scientist ஆவேன் என்றோ சொல்லி யிருப்பார்கள். சொன்னபடி எல்லாம் ஆகிறோமா என்பது வேறு கேள்வி. ஆகிறோமோ இல்லையோ... அதற்கு மேல் வேறெதுவும் நமக்குத் தெரியாது. டாக்டர், வக்கீல், இஞ்சினியர், போலீஸ் இவைதான் தெரிந்த துறைகளா யிருக்கும்.

இவை மட்டும்தானா மேற்படிப்புகள்? மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரி களுக்கு விண்ணப்பிப்போர் அது கிடைக் கவில்லையானால், அறிவியல், கலைக் கல்லூரிகளில் ஏதேனும் ஒரு இளநிலைப் படிப்பைப் படித்துவிடுவார் கள். இப்படி நோக்கமின்றி படிக்கும் இந்தப் படிப்பு அவர்களின் வாழ்க்கைக்கோ, முன்னேற்ரத் திற்கோ எவ்விதத்திலும் பயன்படப்போவ தில்லை. இதனால் எத்தனையோ திறமை யானவர்களை நாடு இழந்திருக்கிறது.

இன்றிருக்கும் கல்விச் சூழலில் எண் ணற்ற துறைகள் உருவாகியிருக் கின்றன. இதற்கெல்லாமா படிப்பு இருக்கும்? என்று ஆச்சிரியப்படத்தக்க அளவில் எல்லா துறைகள் குறித்தும் முறைப்படி கற்றுக் கொள்ள துறைகள் இருக்கின்றன. எல்லா வற்றிற்கும் முறை யான கல்வி நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் தனித்திறமை, படைப்புத்திறன் போன்றவற்றையும் வளர்த் துக் கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இன்றைய உலகம் எதிலும் மேம்போக்கான பார்வையை விரும்பு வதில்லை. ஒவ்வொரு துறையிலும் நிபுணத்துவத்தை விரும்புகிறது. எனவே அத்துறை தொடர்பாகக் கற்றோர் யாரெனக் கண்டறிந்து அவர்களுக்கு பணி வழங்கக் காத்திருக்கிறது. அறிவியலை பொதுவாக இயற்பியல், வேதியியல், உயிரியல் என்று பிரிப்பதோடு நிறுத்திவிட முடியாது. இன்று ஒவ்வொரு துறையிலும் புதிது புதிதாக கிளைகள் தோன்றி ஒவ்வொன்றும் தனித்தனியாக இயங்கத் தொடங்கிவிட்டன.

முன்பெல்லாம் மேலாண்ம என்பது வணி கவியல் துறையின் ஒரு பிரிவாக, பாடமாக இருக்கும். இன்று மேலாண்மையியல் என்பது ஒரு தனித் துவம் மிக்க பெரும் துறையாக உரு வெடுத் திருக்கிறது. அண்மையில் தொழி நுட்ப மேலாண்மை என் றொரு புதிய துறையை நெல்லை அண்ணா பல்கலைக்கழகம் தொடங்கியிருக்கிறது. இப்படி உருவாகி யிருக்கும் புதுத் துறைகள் மட்டுமின்றி, ஏற்கெனவே இருக்கும் கல்வி நிறு வனங்கள் குறித்தும் நமக்கு பல தகவல்கள் தெரிவதில்லை. எடுத்துக் காட்டாக, கடலியல் ஆய்வுக் கென தனித் துறை உள்ளது; அதில் எண்ணற்ற பிரிவுகள் உள்ளன. அதில் மேற்படிப்புகள், ஆய்வுப் படிப்பு, அதற்கான உதவித்தொகையுடன் கூடிய வாய்புகள் எல்லாம் இருக்கின்றன. ஆனால் இந்தத் துறை குறித்து கடற்கரையி லேயே பிறந்து, கடலைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கும் மீனவக் குடும்பத்தில் பிறந்த ஒரு சிறு வனுக்குத் தெரியுமா?

கடலியல் துறை கண்டுபிடிக்கும் உயிரி கள், புதிய செய்திகளையெல்லாம் நடை முறையிலே அவர்கள் வெகு இயல்பாக அறிந்திருப்பார்கள். அவர்கள் இத்துறையில் உள்ள மேற்படிப்பில் எத்தகைய புதிர்களை அவிழ்க்கும் ஆய்வு களையெல்லாம் மேற் கொள்ள முடியும்.. அந்த வாய்ப்புகள் பறிபோ கின்றன அல்லவா?

இந்தியாவில் அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற கல்வி நிறுவனங்கள் இருப்பது எவ்வளவு பேருக்குத் தெரியும்? ஆனால், இந்த வாய்ப்புகளை எல்லாம், ஏற்கனவே அக்கல்வி நிறுவனங்களில் பயின்றவர் களின் குடும்பத்தினர் மட்டுமே தெரிந்து வைத் திருப்பார்கள். அதனுள் நுழைவ தற்கான வாய்ப்புகள் என்னவென்பது பிற்படுத்தப் பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்குத் தெரியாது. நாம் படித்த படிப்புக்கென இருக்கும் வேலை வாய்ப்புகள் பற்றியும் தெரியாது. பலருக்கு இன்ன மேற்படிப்பு படிக்க வேண்டுமென்றால், அல்லது இந்தத் துறைக்கு செல்ல வேண்டுமென்றால் என்ன அடிப்படைக் கல்வி படித்திருக்க வேண்டும் என்பது தெரியாது. எடுத்துக் காட்டாக, திரைப்பட ஒளிப்பதிவாளர் ஆக வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படு கிறீர்கள் என்று வைத்துக் கொள் வோம். அதற்கான கல்வியை திரைப்படக் கல் லூரிகள் வழங்குகின்றன என்பது தெரியும். ஆனால், அதற்கு இயற்பியல், கணிதம், வேதியியல் பாடங்களை மேல்ந்லை வகுப்பில் (11,12) படித்திருக்க வேண்டு மென்பது தெரியாமல் வணிகவியல், கணக்குப்பதிவியல் படித்துவிட்டால், ஒளிப்பதிவு படிக்கும் வாய்ப்பு கிடைக் காமல் போய்விடும். மேலும் அதற்கு வயது வரம்புகள் உண்டு. காலம் கடந்து போய்ப் படிக்க எண்ணினாலும் வாய்ப்பு கிடைக்காது.

எனவே தான் நாம் என்னவாக விரும்பு கிறோமோ அதற்கான அடிப்படைக் கல்வி என்ன என்பதையும் தெரிந்து வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது. இப்படி எண்ணற்ற செய்திகளைக் கருத்தில் கொண்டுதான் நமது பெரியார் தாத்தாவால் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் தொடர்ந்து வெளிவந்திருக் கும் உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான 'விடுதலை'யும் பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகமும் இணைந்து "வாகை சூட வாரீர்" என்ற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்நிகழ்ச்சியில் மேல்நிலைக் கல்விக்குப் பிறகு என்ன படிக்கலாம், எங்கு படிக்கலாம், அதற்கு என்ன செலவாகும், அந்தப் படிப்புக்கு உங்களை எவ்வாறு தயார் செய்து கொள் ளலாம் போன்ற பயனுள்ள வழிகாட்டு தல்கள் வழங்கப்படவிருக்கின்றன. இந்தியாவிலேயே முதல் முறையாக நேரடி ஒளிபரப்பில் (Video Conferencing) கலந்துரை யாடல் மூலம் முக்கியமான சிந்தனையாளர் களும் உரையாற்ற இருக்கிறார்கள். இன்னும் ஏராளமான அறிவூட்டும் அரங்கங்கள் இடம் பெறு கின்றன.

இத்தகைய நிகழ்ச்சிகள் எல்லாம், பெரும் பாலும் சென்னை, திருச்சி, கோவை போன்ற மாநகரங்களில் மட்டும் தான் நடத்தப்படும். ஆனால் பெரியார் தாத்தா வின் சிந்தனை எப்போதும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள பற்றியதாகத் தானே இருக்கும். அதனால் தான் இதுவரை இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் எல்லாம் நடக்காத பகுதிகளாகத் தேர்ந்தெடுத்து ஒரே நாளில் (26.04.09) எட்டு நகரங்களில் "வாகை சூட வாரீர்" நிகழ்ச்சி நடத்தப்பட இருக்கிறது.

காஞ்சீபுரம், திருவண்ணாமலை, பாண்டிச் சேரி, திருவாரூர், பெரம்பலூர், தர்மபுரி, திண்டுக்கல், திருநெல்வேலி ஆகிய நகரங் களில் அந்தந்த பகுதியில் உள்ள மாணவர் களுக்காக இந்நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் பெற்றோரும் கலந்து கொள்ளலாம். தங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விழிப் புணர்வை அவர்களும் பெறலாம். முற்றிலும் இலவசமான இந்த வாய்ப்பை நமது பெரியார் பிஞ்சுகள் ஆகிய நீங்கள் மட்டுமல்லாமல், உங்கள் நண்பர்கள், பக்கத்து வீட்டு அக்கா, அண்ணா, உறவினர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வாருங்கள்..... வாழ்வில் வாகை சூடுங்கள்!

 

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008