புரட்சிக்கவிஞர் பிறந்தநாள் ஏப்ரல் 29 - நினைவு நாள் ஏப்ரல் 21

அறிவினால் சீர்தூக்கிப் பார்- புரட்சிக்கவிஞர்

பழைய நூற்கள் இப்படிப் பகர்ந்தன
என்பதால் எதையும் நம்பிவிடாதே
உண்மை என்றுநீ ஒப்பிவிடாதே!

பெருநா ளாகப் பின்பற்றப் படுவது
வழக்கமாக இருந்து வருவது
என்பதால் எதையும்நீ நம்பி விடாதே
உண்மை என்று நீஒப்பி விடாதே!

பெரும்பான் மையினர் பின்பற்று கின்றனர்
இருப்பவர் பலரும் ஏற்றுக் கொண்டனர்
என்பதால் எதையும்நீ நம்பி விடாதே!
பின்பற் றுவதால் நன்மை யில்லை!
ஆண்டில் முதிர்ந்தவர் அழகியர் கற்றவர்
இனிய பேச்சாளர் என்பதற் காக
எதையும் நம்பிடேல் எதையும் ஒப்பேல்!
ஒருவர் சொன்னதை உடன்ஆ ராய்ந்துபார்
அதனை அறினாற் சீர்தூக் கிப்பார்
அறிவினை உணர்வினால் ஆய்க! சரிஎனில்
அதனால் உனக்கும் அனைவ ருக்கும்
நன்மை உண்டெனில் நம்ப வேண்டும்
அதையே அயராது பின்பற்றி ஒழுகு!

இவ்வுண் மைகளை ஏற்றுநீ நடந்தால்
மூடப் பழக்க வழக்கம் ஒழியும்
சமையப் பொய்கள் அறிவினாற் சாகும்!

இவைகள் புத்தர் பெருமான்
உவந்து மாணவர்க்கு உரைத்தவை என்பவே!
(புத்தர் புகன்றார் எனும் தலைப்பில் எழுதிய பாடல்)

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008