கண்டுபிடிப்பு
பப்புவா நியூ கினியா நாட்டில் 50 புதிய உயிரினங்கள்
பெரிய கருநிறக் கண்களைக் கொண்ட அழகு மிளிரும் பச்சை நிற மரத் தவளை, துள்ளி குதிக்கும் சிலந்திகள், உடல்மீது வரிகள் கொண்ட பல்லிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட புதிய உயிரினங்கள் பப்புவா நியூ கினியா நாட்டின் அதிக நடமாட்டமில்லாத மலைப்பகுதியில் இருப்பதை அறிவியலாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வாஷிங்டன் நகரில் உள்ள கன்சர் வேஷன் இன்டர்நேஷனல் அமைப்பினால் இந்த கண்டுபிடிப்புகள் அறிவிக்கப்பட்டன. கண்டுபிடிக்கப் பட்ட
உயிரினங்களில் 50 வகையான சிலந்திகள், மூன்று வகைத் தவளைகள், வரிபல்லி ஒன்று ஆகியவை இதற்கு முன்பு அறிவியல் நூல்களில் எங்குமே விவரிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றவில்லை. இந்தப் புதிய தவளை வகைகளில், கூரிய வாய் கொண்ட ஒரு சிறிய பழுப்பு நிற பிராணியும், மூட்டைப் பூச்சி போன்ற கரும் பச்சை நிற மரத்தவளையும், பலமாக ரீங்காரத்துடன் ஒலியெழுப்பும் மற்றொரு தவளையும் அடங்கும். இக்கண்டுபிடிப்புகள், குறிப்பாக புதிய தவளை இனங்களின் கண்டுபிடிப்பு, மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தவளைகளைப் பற்றி ஆய்வு செய்து வரும் ஆஸ்திரேலிய நாட்டு குவின்ஸ் லாண்ட் பல்கலைக் கழக விலங்கியல் பேராசிரியர் கூறுகிறார். |