குழந்தைளைக் கொஞ்சுவோம்,கொண்டாடுவோம்
கி.வீரமணி
நம் குழந்தைகளிடம் நாம் மிகவும் அதிகமாக எதிர்பார்க்கிறோம்! நாம் அதே வயதில் எப்படி இருந்தோம் என்-பதையும் நினைவுபடுத்திக் கொண்டால் நமக்கும் அது நல்லது; நம் குழந்தைகளுக்கும் அது நல்லது!
“குழந்தைகளை வெற்றிப் பாதைக்கு, வளர்ச்சி, முன்னேற்றத்துக்கு ஊக்கப்படுத்துவதில் தவறு ஏதும் இல்லை! ஆனால், அதற்குமுன் அக்குழந்தைகளின் பலத்தையும், குறை-பாடுகளையும் நாம் சரியாகப் புரிந்துகொள்ளவேண்டும்’’ என்றார் சாம்கோல்டுஸ்டெயின் என்ற குழந்தைகள் நல மனோதத்துவ நிபுணர்.
நாம் நிர்ணயித்துக் கொண்ட இலக்கு ஒன்றினை எட்டவில்லை அந்தக் குழந்தை என்பதற்காக நமது ஆத்திரத்-தை, வெறுப்பை, சலிப்பை அதனிடம் காட்டுவது முறையற்ற செயல் அல்லவா? இதை எத்தனை பேர் சீர்தூக்கிப் பார்த்துள்-ளோம்? இல்லையே! அக்குழந்தைக்கு இதனால் நம்மீது பற்று பாசம் ஏற்படுவதற்குப் பதில் எரிச்சலுடன் எதிர்நிலை எடுக்கும் நிலையையே உருவாக்கும்!
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி நல்வழிப்படுத்த வேண்டும் என்பது-பற்றிய 10 முக்கிய தகவல்கள்:
நமது மூளையை இதில் கூர்மையாக்கிக் கொண்டு சிந்திப்பது நல்லது.
1.நம் குழந்தைகளைப்-பற்றி நாம் துல்லியமாக அறியவேண்டும். அதன் இயல்பான திறமையை வெளிக்கொணரத் தவறுகிறோம். தவறாக எடை போடல் எப்போதும் வளர்ச்சிக்குத் தடை!
2. நம் குழந்தைகளை நாம் புரிந்து-கொள்ளுமுன்பு, நாம் நம்மை நன்றாக அறிந்து கொள்ளவேண்டும்! நாம் சிறு வய-தில் எந்த பாதிப்புக்கு ஆளாகினோமோ, அதையே நம் குழந்தைகளுக்கு வாரிசு பாத்-தியதை போல் தருதல் கூடாது. நமக்கு நம் தாய், தந்தையர் கணிதத்தில் புலியாக இருக்கக் கட்டாயப்படுத்தியமைக்காக, நாம் அதேபோல் நம் குழந்தைகளை வற்-புறுத்து-வது கூடாது. அது தேவையற்ற ஒன்று!
3. நாம் பல செய்திகளைக் கற்றுக் கொள்ளத் தவறக் கூடாது; குழந்தைகள் மன வளத்தைப்பற்றிய அறிவு நூல்கள் இவைகள் மூலம் ஒவ்வொரு கட்டத்திலும் நம் குழந்தையின் வளர்ச்சிக் கட்டத்தை சரியாக அறிந்து கொள்ள கற்றுக் கொள்ளுங்கள்.
4. சில செயல்களை உங்கள் நிலையில் நின்று பார்க்காதீர்கள். உங்கள் குழந்தைகளின் கண்கள் மூலம் பார்ப்பதாகக் கருதி, பார்வையைச் செலுத்துங்கள். அப்போதுதான் அவர்கள் படுகின்ற வெட்கம், வேதனை, துக்கம் எத்தகையது என்பது நமக்குப் புரியும்! வெறும் தவறுகளை மட்டும் சுரீரெனச் சுட்டிக் காட்டிக் கொண்டே போகிறோம் நாம்; நமக்கு அப்படி ஒருவர் செய்தால், நாம் அதைப்-பற்றி என்ன எண்ணுவோம்? இப்படி எண்ணுங்கள் பிறகு நாமே திருந்திவிடுவோம்!
5. எதற்கெடுத்தாலும் குற்றம் சுமத்தி, உடனே தீர்ப்பு எழுதிவிடாதீர்கள்! இப்படிப்-பட்ட மனோபாவம் படைத்தவர்களால், குழந்தைகளை நல்ல வழிக்குக் கொண்டு வருதல் முடியாது. மறவாதீர்! ஆம் குழந்தை-களுடன் ஒத்துப் போகப் பழகிக் கொள்ளுங்-கள்- உங்கள் மனோபாவம், பிடிவாதம், ஆணை-யிடும் அதிகாரத் தோரணையை சற்றே மாற்றிக் கொள்ளுங்கள்!
6. நம் குழந்தைகளுடன் நாமும் கலந்து செயல்பட முனைவோம். இலக்குகளை நிர்ணயிப்பதோடு நம்முடைய வேலைகள் முடிவதில்லை; இலக்கை நோக்கி அவர்களை அழைத்துச் செல்லவும், பெற்றோர்களாகிய நமது பங்களிப்பும் இருக்கவேண்டும். அவர்களுடன் கலந்து செயல்படல் வேண்டும்!
7. நம் குழந்தைகள் எப்படி உணரு-கிறார்கள் என்பதை அவர்களின் நடவடிக்-கையை உன்னிப்பாகக் கவனித்து, அவர்-களது உணர்ச்சிகளை-_கோபம், பிடிவாதம் ஆகிய செயல்களை ஒத்திப் போடுதல் முதலியவற்றை ஒட்டிய உணர்ச்சிகள் பற்றி சரியான அளவீடுகள் நமக்குத் தேவை.
8. சூழ்நிலை, சுற்றுச்சார்பு இவைகளை ஒட்டி, நம் குழந்தைகளை விளையாட்டு, கலைத்-துறை, இயற்கையை அறிதல், அறிவியல் முதலிய பலவகைத் திறன்களுக்கு உள்ளாக்குதலை நாம் ஊக்கப்படுத்தினால் அது பெரிதும் பயன்படும்.
9. எப்போதும் குழந்தைகளுடைய இயல்பு, கேள்விகளைக் கேட்டுத் தகவல் அறியும் ஆவல், எதையும் அவர்களே சாதிக்க முனை-தல், தன்னம்பிக்கை முதலியவற்றைத் தடுத்து மட்டம் தட்டி விடக் கூடாது நாம்; நம் குழந்தைகளை இலக்கு நோக்கிய பறவை-களாக ஆக்கவேண்டுமே தவிர, விளக்கு நோக்கிய விட்டில்களாக்கி வேடிக்கை பார்க்கக் கூடாது.
10. நம் வீட்டில் உள்ள மற்ற குழந்தைகள், அண்ணன், அக்கா, தம்பி இப்படி மற்றவர்-களுடன் ஒப்பிட்டுக்காட்டி ஒருபோதும் தாழ்த்தி-விடாதீர்கள். பிஞ்சு உள்ளத்தில் பாய்ச்சப்படும் நஞ்சு அது! ஒவ்வொரு-வரிடமும் தனித்தனி ஆற்றல் புதைந்துள்ளது; அதை வெளியே கொணருவதில் முன்பின் இருக்கலாம்; அதைவிட்டுவிட்டு தேவையற்ற ஒப்பீடுகள் நம் குழந்தைகளை மனந் தளர வைக்கும் வளரவிடாது; மறவாதீர்!
(2002 ஜூலை மாதத்தில் ‘ரீடர்ஸ் டைஜஸ்ட்’ ஏட்டில் வந்த ஒரு கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு இது எழுதப்படுகிறது)
நூல் : ‘வாழ்வியல் சிந்தனைகள்’
|