உலக நாடுகள் கென்யா

வை.கலை 

அமைவிடம் - பரப்பளவு

_ ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலை-யொட்டி தான்சானியா மற்றும் சோமாலியா நாடுகளுக்கிடையே கென்யா அமைந்துள்ளது.

_ இந்நாட்டின் மொத்த பரப்பளவு 5 இலட்சத்து 82 ஆயிரத்து 650 சதுர கிலோ-மீட்டர் (5,82,650)

_ மனித இனம் தோன்றிய நாடுகளில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது.

_ கென்யா நாட்டின் தலைநகர் நைரோபி

மக்கள் - மொழி

_ 2008 ஜூலை கணக்கெடுப்பின்படி நாட்டின் மொத்த மக்கள் தொகை 3 கோடியே 79 இலட்சத்து 53 ஆயிரத்து 838 பேர் (3,79,53,838 பேர்) _ மக்கள் தொகை வளர்ச்சி வீதம் 2.75%

_ இங்கு ரோமன் கத்தோலிக், புராட்டஸ்டென்ட், மற்றும் முஸ்லீம்களும். தொன்மை மதத்தைச் சார்ந்தவர்களும் உள்ளனர்.

_ அலுவலக மொழிகளாக இங்கிலீஷ் மற்றும் கிஸ்வாகிலி மொழிகள் உள்ளன.

_ மொத்த மக்கள் தொகையில் 85.1 விழுக்காட்டினர் படிப்பறிவு பெற்றுள்ளனர்.

பொருளாதாரத் தகவல்கள்:

_ நாட்டின் நாணயம் ஷில்லிங் (ரிமீஸீவீரீணீஸீ ஷிலீவீறீறீவீஸீரீ)

_ முக்கிய வேளாண் விளை பொருட்கள் தேயிலை, காப்பி, சோளம், மாட்டிறைச்சி, மற்றும் வாழைப்பழம்.

_ முக்கிய வளங்கள் தங்கம், லைம்ஸ்டோன், உப்பு, கார்னெட்ஸ், காட்டு விலங்குகள் மற்றும் நீர்மின்சக்தி.

_ முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் தேயிலை, பூக்கள், காப்பி, பெட்ரோலியப் பொருட்கள் சிமெண்ட்.

_ மொத்த மக்கள் தொகையில் 50% மக்கள் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளனர்.

_ மனிதவள மேம்பாட்டுத் தர அட்ட-வணையில் 148 ஆம் இடத்தில் உள்ளது.

_ மொத்த இருப்புப் பாதையின் நீளம் 2,778 கிலோமீட்டர். மொத்த சாலைகள் 63,265 கி.மீ.

வரலாற்றுச் சுவடுகளும் - அரசு முறையும்

_ உலகின் மனித இனங்கள் தோன்றிய இடங்களில் ஒன்று கென்யா நாடாகும்.

_ 1890_களில் கென்யா பிரிட்டிஷ் கிழக்கு ஆப்பிரிக்காவின் ஒரு பகுதியாக்கப்பட்டது.

_ 1920 இல் கென்யா நேரடி பிரிட்டிஷ் காலனி நாடானது.

_ 1944 இல் கென்யா ஆப்பிரிக்கர் யூனியன் (ரிகிஹி) அமைக்கப்பட்டது. இந்த அமைப்பே முதல் கென்ய விடுதலை கோரிய முதல் அமைப்பு.

_ 1947 இல் ஜோமோ கென்யாட்டா ரிகிஹி வின் தலைவரானார்.

_ 1952 இல் இரகசிய கொரில்லா அமைப்பான மாவ் மாவ் வை தொடங்கி வழி-காட்டினர். வெள்ளையர்களால் கென்யா ஆப்-பிரிக்கர் யூனியன் தடை செய்யப்பட்டு கென்-யாட்டா சிறையில் அடைக்கப்பட்டார்.

_ 1960 இல் கென்யா ஆப்பிரிக்கன் நேஷ்னல் யூனியன் (ரிகிழிஹி) உருவாக்கப்பட்டது.

_ 1961 இல் கென்யாட்டா தலைமை பொறுப்-பேற்றார்.

_ 1964 இல் கென்யா விடுதலை பெற்றது.

_ 1964 இல் முதல் குடியரசுத் தலைவராக கென்யாட்டா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

_ 1978 இல் கென்யாட்டா மறைந்தார். ஆனாலும். 1992 வரை ஒரே கட்சி ஆட்சியி-லிருந்தது. ஜனநாயகம் கோரி நடைபெற்ற போரா-ட்-டத்-தைத் தொடர்ந்து பொதுத் தேர்தல் நடத்தப்-பட்டது.

_ தற்போதைய குடியரசுத் தலைவர் எம்வாய் கிபாகி.               

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008