நான் கற்றவை
எங்களை ஏன் டீச்சர் பெயிலாக்கினீர்கள்? (4)
அன்புள்ள மிஸ்! நீங்கள் உங்களின் கிரேக்க ரோமானிய வரலாறுகளைத் தூக்கிக் கொண்டு போய் அவனை வரலாற்றுப் பாடங்-களை வெறுக்க வைத்தீர்கள். நாங்கள் இரண்-டாம் உலகப்-போரின் நிகழ்வுகளை பாதிப்பு-களை மணிக்-கணக்காக அவனைக் கேட்க வைத்-துள்ளோம்.
நீங்கள், இத்தாலியின் புவியியலை இன்-னு-மொரு ஆண்டு படிக்குமாறு நிர்ப்பந்தித்-தீர்கள். அது நீடித்திருந்தால், உலகின் பிற பகுதிகள் பற்றி அறியாமலேயே அவன் பள்ளிப்-படிப்பை நிறுத்தியிருக்கக்கூடும்.
எங்கள் பார்பியானாவிற்கு வந்த குறுகிய காலத்திலேயே சான்ட்ரோ எல்லாவற்றிலும் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டான். எட்டாம் வகுப்புப் பாடத்தை படிக்கும்போதே ஆறு மற்றும் ஏழாம் வகுப்பில் தனக்கு புரி-யாததை தனியே இரவுகளில் கற்றுக் கொண்டான். உங்-களால் ‘மக்கு’ என்று தீர்-மானிக்கப்பட்ட அவன் ஜுன் மாதம் தேர்வுகள் எழுதி உங்-களாலேயே தேர்ச்சி அளிக்கப்பட்டான்.
கியானியின் நிலை சற்றுச் சிரமமாக இருந்தது. எல்லாப் பாடங்களிலும் இல்லை-யென்றாலும் சில பாடங்களை மிகுந்த ஈடு-பாட்டுடன் நேசித்-தான். மிஸ்! இனி நீங்கள் செய்ய வேண்டிய-தெல்லாம் அவனை எட்டாம் வகுப்பில் சேர்த்துக் கொண்டு பெரும் பாராட்டைத் தர வேண்டியது-தான். மீதிப் பாடங்-களை அவன் தானே நேசிக்க நாங்கள் தூண்டுவோம்!
ஆனால் வாய்மொழித் தேர்வின் போது ஒரு- ஆசிரியர், “நீ ஏன் பார்பியானாவின் தனிப்-பள்ளியில் போய்ப் படித்தாய்? உன்னால் சரி-யாகக்-கூட பேசமுடிய-வில்லையே!’’ என்று கேட்டிருக்கிறார்.
மிஸ்! உண்மையில் கியானியால் சரியாக பேச முடியாது தான். மொழி என்பது சாமானிய மக்களால் உருவாக்கப்பட்டு, அவர்-களாலேயே மெருகூட்டப்படுகின்ற ஒன்று. ஆனால் வசதி-யான-வர்கள் அதில் சில முறை-களைக் கற்-பித்துக் கொண்டு, அம்முறைப்படி பேச இயலா-தவர்களைப் பிரித்துப் பார்க்-கின்றனர். அவ்வாறு பயன்படுத்த முடியா-தவர்-களை தேர்வுகளில் பெயிலாக்கி விடுகின்றனர்.
நகரத்தின் செல்லக் குழந்தைகள் நன்றாக எழுத முடியும். உங்களைப் போல் பேச முடி-யும். அவர்கள் வசதி படைத்த தங்கள் பெற்-றோர்களின் மொழியில் பேசுகின்றனர். கியானி அவனது தந்தையின் மொழியில் பேசு-கின்றான். சிறு பையனாயிருக்கும்போது அவன் ‘ரேடியோ’ என்பதை ‘ரேரோ’ என்று அழைத்-தான். அவனது தந்தையோ ‘அரேடியோ’ என்று உச்-சரிக்க பழக்-கினார். அதுதான் அவர் அறிந்-திருந்த வட்டார மொழியாகும். தற்போது அவன் ‘ரேடியோ’ என்று உங்கள் மொழியில் உச்சரிக்கப் பழகி விட்டான், நாளடைவில் உங்கள் மொழியே அவனுக்கும் சவுகரியமாகி விடும். ஆனால் அதற்-குள் அவனை பள்ளியை விட்டு வெளியே வீசி விடாதீர்கள், மிஸ்.
கியானி போன்றோரையும் மனதில் வைத்துக் கொண்டே ‘மொழி வேற்றுமையின்றி அனை-வரும் சமம் என்று அரசமைப்புச் சட்டம் கூறு-கிறது. ஆனால் நீங்கள் அரசமைப்புச் சட்டத்-தைவிட இலக்கணத்தையே அதிகம் மதிக்-கிறீர்கள். அதனால் கியானி மீண்டும் பள்ளிக்குச் செல்லவில்லை, எங்களிடம் கூட வரவில்லை.
ஆனாலும் அவன் எங்கள் மனதிலேயே இருக்கிறான். தொலைவிலிருந்தாலும் அவனை நாங்கள் கவனித்துக் கொண்டே இருக்கிறோம். அவன் இப்போதெல்லாம் தேவாலயத்திற்கோ அல்லது அரசியல் கூட்டத்திற்கோ செல்வ-தில்லை எனக் கேள்விப்பட்டோம்.
அவன் ஒரு தொழிற்சாலையில் துப்புரவுப் பணியாளராகச் சேர்ந்துள்ளான். அங்கு ஓய்வு நேரங்களில் சனிக்கிழமை நடனத்தையும் ஞாயிற்றுக்-கிழமை விளையாட்டு மைதானத்தை-யும் ஒரு பொம்மையைப் போல் கவனித்துவரு-கி-றான் என அறிகிறோம்.
ஆனால் அவனது ஆசிரியையாகிய தாங்-களோ அவனது இருப்பைக் கூட நினைவில் வைத்துக் கொள்ளவில்லைதானே...
இப்படி நாங்கள் மாணவர்களோடு மாணவர்-களாக, மாணவர்களே ஆசிரியர்களாக ஒரு பள்ளியை நடத்துவது எவ்வளவு கடினம் என்று எங்களுக்கும் தோன்றியதுண்டு. சில நேரங்-களில் இதையெல்லாம் விட்டுவிடும் எண்ணம் மேலோங்கும். ஆனால் நாங்கள் விட்டு--விட்டால் இது ஒரு பள்ளியாக இராது.
நோயாளிகளை வெளித்தள்ளிவிட்டு, ஆரோக்கியமானவர்களைச் சேர்த்துக்-கொள்ளும் ஒரு வினோத மருத்துவமனையாக இதுமாறிவிடும். அத்தகைய மருத்துவமனை-யாக பள்ளி செயல்படுவது சரியாகுமா-?
இதை நீங்கள் ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் நீங்கள் வெளியேற்றிய அனைவரையும் பள்ளி-யில் மீண்டும் சேர்த்துக் கொள்ளுங்கள். மீண்டும் முதலிலிருந்து ஆரம்பியுங்கள். அதன் பொருட்டு உங்களை கிறுக்குப் பிடித்-தவர் என யாரும் அழைத்தால் அதையும் பொருட்--படுத்தாமல் மீண்டும் தொடங்குங்கள்.
இனவாதி என அழைக்கப்படுவதை விடவும், கிறுக்கு என அழைக்கப்படுவது நல்லதுதான்.
எழுதுவதின் இலக்கணம்:
மூன்றாண்டுகள் பார்பியானாவில் படித்த-பின்பு எனது நடுநிலைப்பள்ளித் தேர்வில், தனிப்--பயிற்சிப் பள்ளி மாணவனாக கலந்து கொண்டேன்.
‘ரயில் பெட்டி பேசினால்’ என்பதே எனக்கு வழங்கப் பட்ட கட்டுரைத் தலைப்பு.
ஏதாவது முக்கியமானதாகவும், யாருக்கேனும் பயன்படக் கூடியதாகவும் எழுதுவதே சிறந்த எழுத்தின் இலக்கணமாக நான் பார்பியானா பள்ளியில் அறிந்திருக்கிறேன்.
மேலும், தேவையற்ற ஒவ்வொரு வார்த்தை-யையும் நீக்கிவிடு.
பேச்சுவழக்கில் பயன்படுத்தப்படாத வார்த்-தைகளை நீக்கிவிடு. எழுதுவதற்கான கால அவ-காசம் ஏதும் வைத்துக் கொள்ளாதே.
இவையே நான் அங்கே கற்றவையாகும்.
|