ராஜா வீட்டுக் கல்யாணத்தில்

ராஜா வீட்டுக் கல்யாணம் என்றால் லேசா. பால் பாயசம் மட்டுமே நூறு அண்டாக்கள் வைக்க வேண்டியதிருக்கும். அப்புறம் வேறு-வகைப் பாயசங்களும் உண்டு; அதுக்கும் பால் வேணும். சாப்பாட்டில் தயிர் இல்லை-யென்றால் எப்படி. பிறகு தயிர் பச்சடி வேற. வருகிற விருந்--த-ளிகளான ராஜாக்கள், சிற்றரசர்கள், இள-வரசர்கள், அவர்களோடு வருகிற அதிகாரிகள், அவர்களின் குடும்பத்தார்கள் முதலியோர்-களுக்கு வேண்டியபோதெல்லாம் குடிப்பதற்குப் பால், மோர் கொடுக்க வேண்டும். ஆக ராஜா வீட்டுக் கல்யாணத்தில் பால் தண்ணீர்ப்பட்ட-பாடுதான்.

இவ்வளவு பாலுக்கும் எங்கே போக! ராஜாவும், மந்திரியும் யோசித்தார்கள். வீட்டுக்கு ஒருபடி பால் வசூலித்துவிடுவது என்று கடைசி-யாகத் தீர்மானித்து அதே பிரகாரம் முரசு அடித்து எல்லோருக்கும் தெரிவித்து விட்டார்-கள். அரண்-மனை முற்றத்தில் ஆள் கையெடுக்கும் உயர-முள்ள பாத்திரங்கள் கொண்டுவந்து வரி-சை-யாக வைக்கப்-பட்டிருந்-தன. ஜனங்கள் வீடு தவறாமல் சாயந்திரத்-திலிருந்து ராத்திரி பூராவும் கொண்டுவந்து அந்தப் பாத்தி-ரங்களில் ஊற்றிய வண்ண-மிருந்-தார்-கள். ராஜா-வும் அதி-காரிகளும் கல்-யாண ஏற்-பாடுகளில் கவனமாக இருந்தார்-கள்.

ராத்திரி விருந்தினர் மாளிகைகளில் தங்கியிருந்த அனைவருக்கும் சாப்பாட்டுக்கு-மேல் பால் காய்ச்சிக் கொடுக்கும்படி ராஜா சொல்லி--யிருந்தார்.

பால் எங்கே இருக்கிறது என்று தவசுப்-பிள்ளைகள் தேடு தேடு என்று தேடினார்கள்.

அரண்மனை முற்றத்தில் போய்ப் பாருங்கள் என்று யாரோ சொன்னார்கள். போய்ப் பார்த்-ததில் அண்டாக்கள் பூராவும் நிறைந்துதான் இருந்-தது. ஆனால் அப்படி நிறைந்திருந்தது அவ்-வளவும் பால் அல்ல; சுத்தமான தண்ணீர்!

வந்து பார்த்த அதிகாரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை. இதில் எதிரிகளின் சூழ்ச்சி ஏதா-வது இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்-தார்கள்.

விஷயம் ராஜாவிடம் போனது. மந்திரியும் வந்தார். யோசித்துப் பார்த்தபிறகுதான் அவர்-களுக்கு விஷயம் விளங்கியது. கொண்டுவந்து ஊற்றுகிறவர்கள் பால்தானே ஊற்றுவார்கள்; அதில் நாம் ஒருபடி தண்ணீர் _ பாலுக்குப் பதிலாகக் கொண்டுபோய் ஊற்றிவிட்டால் தெரியவா போகிறது என்று ஒவ்வொருவருமே செய்திருக்கிறார்கள்!

அவர்களுடைய குயுக்தியை நினைத்ததும் சிரிப்பு வந்துவிட்டது ராஜாவுக்கும் மந்-திரிக்-குமே.

ஜனங்கள் எப்பவும் புத்திசாலிகள்-தான் என்று நினைத்தார் மந்திரி.

கதை சொன்னவர்:-
தொ.மு.பாஸ்கரத் தொண்டமான்.
(கி. ராஜநாராயணன் எழுதிய
நூலிலிருந்து)


Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008