பழைய செய்திகள் புதிய உன்மைகள்

நம்பிக்கை: ஜோன் ஆப் ஆர்க் (Joan of Arc) பிரஞ்சு நாட்டைச் சேர்ந்தவர்.

உண்மை: புகழ் பெற்ற இந்த வீராங்கனை பிரஞ்சு நாட்டைச் சேர்ந்தவர் அல்ல. பார் (Bar) என்று அழைக்கப்பட்ட ஒரு சுதந்திர நாட்டின் ஒரு பகுதியாக இருந்த டோம்ரெமி (Domremy) என்ற இடத்தில் பிறந்தவர் அவர். 1776 ஆம் ஆண்டு வரை பார் நாடு பிரஞ்சு நாட்டின் ஆதிக்கத்துக்கு வரவில்லை. ஜோன் ஆப் ஆர்க் ஒரு சூன்யக்காரி என்று குற்றம் சாட்டப்பட்டு 1431 இல் உயிருடன் எரிக்கப் பட்டார். 20 ஆம் நூற்றாண்டில்தான் அவரைக் கிறித்துவ மதப் புனிதராக (செயிண்ட்) அறிவித்தனர்.


நம்பிக்கை: அமெரிக்காவில் முதன் முதலாகக் குடியேறியவர்கள் மரங்களால் கட்டப்பட்ட வீடுகளில் (log cabins) வாழ்ந்தனர்.

உண்மை: வெளியே சென்றுவிட்டுத் பில்கிரிம் தந்தையர்கள் மர வீடுகளுக்குத் திரும்புவது போன்ற ஓவியங்கள் பல இருந்த போதிலும், பில்கிரிம், ப்யூரிடான் மற்றும் வர்ஜினியாவில் முதன் முதலாகக் குடியேறியவர்கள் மர வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழவில்லை. ப்ளைமவுத் மற்றும் ஜேம்ஸ்டவுனில் குடியேறியவர்கள் இந்தியர்களின் குடிசைகளைப் போன்ற வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழ்ந்தனர். மூங்கில்களை ரு வடிவத்தில் மடித்து பின்னர் அதில் மரப்பட்டைகள், புல் அல்லது களிமண் கொண்டு அடைத்து, வீடுகளை அமைத்து வாழ்ந்தார்கள். நதிக் கரைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில் மூங்கில் மற்றும் புல்லினால் கூரை அமைத்து அவற்றில் வாழ்ந்தனர். டெலாவரில் 1638 இல் முதன் முதலாகக் குடியேறிய சுவீடன் மக்கள்தான் முதன் முதலாக மர வீடுகளைக் கட்டிக் கொண்டனர். நார்வே மற்றும் சுவீடன் நாடுகளில் இத்தகைய மரவீடுகள் கி.பி. 800 ஆம் ஆண்டு முதல் புழக்கத்தில் இருந்தன என்பதே இதன் காரணம்.


நம்பிக்கை: அமெரிக்காவில் குடியேறிய வெள்ளையர் அமெரிக்க இந்தியர்களை (American Indians) படுகொலை செய்வது வழக்கம்.

உண்மை: அமெரிக்காவில் முதன் முதலில் குடியேறிய வெள்ளைக்காரர்கள் அங்கிருந்த பழங்குடி அமெரிக்க இந்தியர்களைப் படுகொலை செய்ததற்கான வரலாற்று ஆதாரங்கள் அதிக மாகவே உள்ளன. கன்னாடிக்கட் என்னும் ஊரில் தொடங்கிய இப் படுகொலைகள் குறைந்தது ஆயிரத்துக்கும் மேல் நடத்தப்பட்டிருப்பதை வரலாறு பதிவு செய்துள்ளது. 1637 இல் வெள்ளையர்கள் ஒரு இந்திய கிராமத்திற்கு தீயிட்டுக் கொளுத்தினர்; தப்பி ஓடிய இந்தியர் களை சுட்டுக் கொன்றனர். தீயில் கருகியும், துப் பாக்கிக்கு இரையாகியும் 500 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இறந்தார்கள்.

இந்தியர்கள் வெள்ளையர்கள் மீது தாக்குதல் நடத்தினர் என்பது உண்மைதான். ஆனால் அவர்கள் இவ்வாறு படுகொலை எதையும் செய்ய வில்லை. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடிக்கும்போது அங்கு ஏறக் குறைய 10 இலட்சம் இந்தியர்கள் இருந்தனர். ஆனால், 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் அவர்கள் 2. 5 லட்சமாகக் குறைந்து போயினர்.


நம்பிக்கை: 19 ஆம் நூற்றாண்டில் இங்கிலாந் தில் ரயில் போக்குவரத்து தொடங்கியதை மக்கள் வரவேற்றனர்.

உண்மை: வெகுசிலரே அதனை வரவேற்றனர். பசுக்கள் பால் கொடுக்காமல் நிறுத்திவிடும் என்றும், ரயிலில் இருந்து பறந்து விழும் தீப்பொறி யால் தங்கள் பயிர்கள் எரிந்துவிடும் என்றும் விவசாயிகள் அஞ்சினர். வேட்டையாடும் பழக்கம் கொண்ட பணக்கார நிலச்சுவான்தார்கள் நரிகள் பற்றியும், விவசாயிகள் பற்றியும் கவலைப்பட்டனர். கிராமப் புறத்தின் அழகே அழிந்துவிடும் என்றே அனைவரும் கருதினர். கிரேட் வெஸ்டர்ன் ரயில்வே அமைக்கப்பட்டபோது, புகழ்பெற்ற ஏடன் பள்ளி யில் இருந்து 4.8 கி.மீ. சுற்றளவுக்குள் பாதை அமைக்க அனுமதிக்கப்படவில்லை. இருப்புப் பாதை இதற்கும் குறைவான தூரத்தில் இருந்தால், அது பள்ளியின் ஒழுக்கத்தைக் கெடுத்துவிடும் என்று பள்ளி முதல்வர் கூறினார். ரயில்வே சர்வேயர் களிடமிருந்து தங்களின் நிலங்களைப் பாதுகாக்க நிலச்சுவான் தார்கள் சிலர் துப்பாக்கியுடன் காவல் இருந்தனர். சில நேரங்களில் துப்பாக்கிச்சூடும் நடந்தது.

20 ஆம் நூற்றாண்டில் வந்த கார் மூலமான சாலைப் போக்கு வரத்துக்கும் இது போன்றே பொது மக்களிடமிருந்து பெருத்த ஆதரவு இருக்க வில்லை.


நம்பிக்கை: பேக்பைப் (bagpipe) என்னும் காற்று நிறைந்த பையுடன் கூடிய இசைக் கருவி ஸ்காட்லாந்து நாட்டு இசைக் கருவியாகும்.

உண்மை: நீரோவின் காலத்தில் புழக்கத்தில் இருந்த நாணயங்களில் இந்த பேக்பைப்பின் உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. இந்த இசைக் கருவி வட ஆப்ரிக்கா, அராபியா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ரஷ்யா, ஸ்காண்டிநேவியா ஆகிய நாடுகளில் வாசிக்கப்பட்டு வந்துள்ளது. இங்கிலாந்து நாட்டு மன்னர் எட்டாம் ஹென்றி யிடம் இது போன்ற பேக்பைப் இசைக் கருவிகள் பல இருந்தன. இந்த இசைக்கருவிகள் ஸ்காட் லாந்து நாட்டில் இருந்தது போலவே, அயர்லாந்தி லும் பிரபலமாக விளங்கியது.


நம்பிக்கை: குடன்பர்க் பைபிள் (Gutenberg Bible) தான் முதன் முதலாக அச்சடிக்கப்பட்ட நூல்.

உண்மை: ஓரளவுக்கு இது உண்மைதான். பதினைந்தாம் நூற்றாண்டு வரை அய்ரோப்பியர்களுக்குக் கிடைத்த நூல்கள் அனைத்தும் கையால் எழுதப்பட்ட நூல்கள்தான். அவர்களுக்குக் கிடைத்த முதல் அச்சடிக்கப் பட்ட நூல் குடன்பர்க் பைபிள் தான். என்றாலும், ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அச்சுக் கலையை சீனர்கள் கண்டுபிடித்திருந்தனர். பதினொன்றாம் நூற்றாண்டில் அச்சடிக்கும்போது நகரும் வகையிலான அச்சினை அவர்கள் பயன் படுத்தினர். சீனாவின் கண்டுபிடிப்பைப் பற்றி அறியாமலேயே, தாங்களாகவே அச்சடிக்கும் முறையை அய்ரோப்பியர்கள் கண்டு பிடித்தனர்.


நம்பிக்கை: ரோம் நகரம் தீப்பிடித்துக் கொண்டு எரிந்த போது மன்னன் நீரோ (nero)) பிடில் (fiddle) வாசித்துக் கொண்டிருந்தார்.

உண்மை: ரோமப் பேரரசர் நீரோ முதலாம் நூற்றாண் டில் வாழ்ந்தவர். 16 ஆம் நூற்றாண்டில் தான் பிடில் என்னும் இசைக்கருவி கண்டுபிடிக்கப்பட்டது. ஒன்பது நாள் எறிந்த தீ ரோம் நகரின் பாதியை அழித்தபோது, உண்மையில் நீரோ அந்த நகரத்தி லேயே இருக்கவில்லை. அந்தத் தீ விபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது எவருக்குமே தெரியவில்லை. இதற்குக் கிறித்துவர்கள்தான் காரணம் என்று பழி சுமத்திய நீரோ, அவர்களைக் கொடுமைப்படுத்த இதனை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டார்.


நம்பிக்கை: அமெரிக்க நாட்டின் தேசியக் கொடியில் பதின்மூன்று கோடுகள்தான் எப்போதும் இருந்தன.

உண்மை: வெர்மாண்ட் மற்றும் கெண்டகி மாகாணங்கள் அமெரிக்க அய்க்கிய நாடுகள் கூட்டமைப்பில் 1790 இல் சேர்ந்த போது, 15 நட்சத்திரங்கள் கொண்ட ஒரு தேசியக் கொடியை காங்கிரஸ் வடிவமைத்தது. கொடியில் இருந்த கோடுகளை 13 ஆக மாற்ற 1818 இல் காங்கிரஸ் வாக்களித்தது.


நம்பிக்கை: வில்லியம் டெல் (william tell) தனது மகனின் தலை மீது வைக்கப்பட்ட ஒரு ஆப்பிளைத் துளைத்துச் செல்லும் வகையில் அம்பு எய்தினான்.

உண்மை: உண்மையைக் கூறுவதானால், வில்லியம் டெல் என்று எவருமே இருந்திருக்கவில்லை. இது போல் குழந்தைகளின் தலைகள் மீது ஆப்பிள்களை வைத்து அம்பு வீசும் வீரக் கதைகள் சுவிட்சர்லாந்து, இங்கிலாந்து, நார்வே ஆகிய நாடுகளின் நாடோடிப் பாடல்களில் காணப் படுகின்றன. இவை எல்லாமே, மக்களின் வீரத்தைப் பற்றி பெருமையடித்துக் கொள்ளப் புனையப்பட்ட வெறும் கற்பனைக் கதைகள்தான்.


நம்பிக்கை: ஸ்வஸ்திக் (swastik) நாஜிகளின் சின்னமாகும்.

உண்மை: ஹிட்லர் இந்த சின்னத்தை ஏற்றுக் கொள்வதற்கு 5000 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்வஸ்திகா இந்தியாவில் அதிருஷ்டம் தரும் ஒரு அடையாளமாக கருதப்பட்டு வந்தது. சமஸ்கிருத மொழியில் சு(நல்ல) அஸ்தி(ஆக இருப்பது) என்பதிலிருந்து பிறந்தது இச் சொல். மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் காணப்படும் பண்டைய கால நாணயங்களில் இந்த சின்னம் காணப்படுகிறது. தொடக்க கால கிறித்துவக் கலையிலும், அமெரிக்க இந்தியர்களின் சுடுகாடுகளிலும் இந்தச் சின்னம் காணப்பட்டது.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008