மனித இன வரலாறு                                                                                                 
புரட்சி யுகம் அமெரிக்கப் புரட்சி

மு.நீ.சினிவாசன்

18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இரண்டு பெரிய புரட்சிகள் ஏற்பட்டன. முதல் புரட்சி வட அமெரிக்காவில் 1775_83 இல் நிகழ்ந்தது. அதன் விளைவு அமெரிக்க அய்க்கிய நாடுகள் (USA) என்ற புதிய நாடு பிறந்தது. இரண்டாம் புரட்சி பிரான்ஸில் ஏற்பட்டது. கி.பி. 1789இல் பாரிசில் பாஸ்ட்டில் சிறைக்கூடம் (Bastille prison) தாக்கப்பட்டதே பிரெஞ்சுப் புரட்சியின் தொடக்கம் எனலாம். அமெரிக்கப் புரட்சி

கி.பி 16ஆம் நூற்றாண்டிலிருந்து அய்ரோப்-பாவின் பல் வேறு நாட்டவர் வட அமெரிக்காவில் குடியேறினர். ஏழாண்டுப் போரின் போது அங்குக் காலனி நாட்டில் வாழச் சென்ற பிரிட்டிஷாருக்கும், பிரஞ்சுக் காரர்களுக்கும் இடையே வட அமெரிக்-காவில் ஆதிக்கம் பற்றி போர் மூண்டது. இதில் பிரிட்டன் வெற்றி பெற்றது. வட-அமெரிக்காவில் கனடாவைத் தவிர்த்து பதின்மூன்று பிரிட்டிஷ் காலனிகள் இருந்தன. இவை அனைத்தும் பிரிட்டிஷாரின் ஆளு-கைக்கு உட்பட்டிருந்-தாலும் ஆளும் முறை-சரிவர நடைபெறவில்லை. எனவே போருக்குப் பின் பிரிட்டிஷ் அரசு காலனியார்கள் மீது பல்-வேறு வரிகளை விதித்தனர். இது மக்-களி-டையே எதிர்ப்பை உண்டாக்கியது. கி.பி. 1775 ஆம் ஆண்டு ஏப்ரல் 19இல் லெக்சிங்டன் என்ற இடத்தில் முதன்முதலாகப் போர் மூண்-டது. ஜூலை 1776 இல் காலனி ஆட்சி நாட்டில் வாழ்வோர் சுதந்திர பிரகடனத்தை (Declaration of Independance) வெளியிட்டனர். அமெரிக்க அய்க்கிய நாடுகள் என்ற நாடு பிறந்தது. கி.பி 1783இல் பிரிட்டிஷ் படைகள் வெர்ஜினியாவில் உள்ள யார்க் நகரத்தில் சரணடைந்தன.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008