டிசம்பர் 6 அம்பேத்கர் நினைவுநாள்
அண்ணல் அம்பேத்கர் அமித மொழிகள்
ஜனநாயகம், எங்கு வேண்டுமாயினும் வளரும் செடியன்று. சமுதாயத்தில் இருக்கின்ற ஏற்றத் தாழ்வுகளே ஜனநாயத்தை அழிக்கின்ற கரையான்கள் ஆகும். ஆதலால், மக்களின் நல்வாழ்விற்கான திட்டங்கள், செயல்முறைகள் ஆகியவற்றைக் கொண்டதே உண்மையான ஜன-நாயகம் ஆகும்.
இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஜாதிகளும், மூடத்தனங்களும் இருந்து கொண்டிருக்-கும் நாள்வரைக்கும், நாம் ஏனைய நாடுகளின் முன்பாக, தலைநிமிர்ந்து வாழ இய-லாது, வெட்கித் தலைகுனிந்துதான் வாழ வேண்டும்.
தீண்டாமை, மதத்தை மட்டும் அடிப்படை-யாகக் கொண்டதல்ல; பொருளாதாரத்தையும் அடிப்படையாகக் கொண்டது. இது அடிமைத்-தனத்தைக் காட்டிலும் மிகவும் மோசமானது.
துளி இரத்தமும் சிந்தாமல், மக்களின் சமூக, பொருளாதார வாழ்வில், புரட்சிகரமான மாறுதல்களை ஏற்படுத்தும் அரசுமுறையே, நவீன ஜனநாயகம் ஆகும்.
அரசு, பெரும்பான்மையினரால் அமைக்கப் பட்டு சிறுபான்மையினரின் ஒத்துழைப்பையும், சம்மதத்தையும் பெற்று, நடைபெறுவதே சுதந்-திரத்-தின் அர்த்தம் ஆகும். அத்தகைய ஜன-நாயகத்தை நான் வரவேற்பேன்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூக அமைப்பே, எனது இலட்சியம்.
எல்லாச் சமூகங்களும் சில பயனற்ற விஷமத்தனமான பழக்க மூட்டைகளைச் சுமந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனால், அறிவு விளக்கம் பெற்ற சமூகங்கள் தமது பழக்க வழக்கங்களை ஆராய்ந்து, நல்லவை-களை ஒப்புக் கொண்டு, தீயவைகளை நிரா-கரித்து, முன்னேற முயல்கின்றன.
உத்தமமான ஒரு சமூகம், மாற்றங்களை ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்க வேண்டும். சமூகத்தின் ஒரு பகுதியில் ஏற்படும் மாற்றம், மற்ற பகுதிகளிலும் பரவக்கூடியதாய் இருக்க வேண்டும். ஓர் உத்தமமான சமூக அமைப்பில், எல்லோர்க்கும் பொதுவான பல பாத்தியதைகள் இருக்க வேண்டும். மற்றவர்களுடன் சம்பந்தம் ஏற்படப் பல திறப்பட்ட மார்க்கங்களும், சந்தர்ப்பங்களும் இருக்க வேண்டும்.
நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். நாம் சுயமாக வாழ்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். தன்மானம் உடையவர்களாய் வாழ வேண்டும். நாமாக முயற்சி செய்து நமது அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். இவற்றைச் செய்தால், நாம் உயர்வது உறுதி.
ஆயிரமாயிரம் ஆண்டு அடிமைகளாக, தன் மானத்தை இழந்து இருப்பதைக் காட்டிலும், அரை நிமிடம் வாழ்வாங்கு வாழ்ந்து அமரனாதல் சாலச் சிறந்ததாகும்.
அறிவானது மனிதனுடைய வாழ்வின் அடித்தளம் ஆகும். ஆதலால், மாணவர்கள் தங்களது முயற்சிகள் அனைத்தையும் பகுத்-தறிவின் ஆற்றலைக் கொண்டு நிர்வகிக்கக் கூடியவைகளாக அமைத்துக்கொள்ள வேண்டும்.
இந்தியாவில், சமூக சீர்திருத்தத்திற்கு நண்பர்கள் சிலரே; எதிரிகளோ அதிகம்! எதிரிகள் இருவகை; ஒரு கூட்டத்தார் அரசியல் சீர்-திருத்-தக்-காரர்; மற்றவர்கள் அபேதவாதிகள்.
|