நூல் அறிமுகம்
அய் பாட்டி காலத்தை உணர்ந்த படைப்பு

குழந்தைகளுக்கான கதைகள், பாடல்கள், தகவல்கள் அடங்கிய நூல்கள் தமிழில் இன்னும் போதுமான அளவுக்கு வரவில்லை என்றுதான் சொல்லவேண்டும். இதுவரை வெளி-வந்துள்ள புத்தகங்கள் பெரும்பாலும் புராணக்கதைகள், மாயாஜாலக் கதைகள், கற்பனைப் புனைவுகளாகத்தான் இருக்கின்றன, குறைந்த எண்ணிக்கையிலான அறிவியல் நூல்கள் தவிர்த்து குழந்தைகளுக்குக் கிடைப்பதெல்லாம் மூடநம்பிக்கைகளைப் பரப்பும் புத்தகங்கள்தான். வளர்ந்த நாடு-களில் இருந்து இங்கு வரும் நூல்களில் அந்நாட்டுப் பின்-புலத்தில் அமைந்த தகவல்களும், அவர்களின் கதைகளும்-தான் இருக்கும். மேலும் அவையனைத்தும் இங்கிலீஷ் நூல்கள்.

நம் குழந்தைகளுக்கு நல்ல தமிழில் எளிய வடிவில் நூல்கள் தேவையான இக்கால கட்டத்தில் இங்கிலீஷ் நூல்-களுக்கு இணையான தரத்துடனும் அழகிய வடிவமைப்-புடனும் எளிய தமிழில் பாடல் வடிவில் ஒரு நூலைக் கொண்டு வந்துள்ளார் மதன் கார்க்கி. தனது துணைவி நந்தினி-யுடன் இணைந்து நூல் வடிவிலும் இதில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு ரிஸ்வானின் இசையமைப்புடன் ஒலிக்குறுந்தகடாகவும் அய் பாட்டி எனும் பெயரில் தயாரித்துத் தந்துள்ள கார்க்கி, கவிப்பேரரசு வைரமுத்துவின் மைந்தர்.


நூலிலிருந்து ஒரு பாடல்

பொறி பொறி கணிப்பொறி
சொன்னதைச் செய்யும் கணிப்பொறி
கணக்குப் போடும் கணிப்பொறி
பாட்டுப் பாடும் கணிப்பொறி

எல்லாம் பண்ணும் கணிப்பொறி
செய்திப் படமும் அறிவியல் படமும்
காட்டும் காட்டும் கணிப்பொறி
கார்ட்டூன் படமும் சினிமாப் படமும்

ஓட்டும் ஓட்டும் கணிப்பொறி
ஈமெயில் படிக்க வேணுமின்னா
படிக்கும் படிக்கும் கணிப்பொறி
அரட்டை அடிக்க வேணுமின்னா

அடிக்கும் அடிக்கும் கணிப்பொறி
ஆட்டம் ஒண்ணு ஆடச்சொன்னா
ஆடும் ஆடும் கணிப்பொறி
இண்டர்நெட்டில் தேடச்சொன்னா

தேடும் தேடும் கணிப்பொறி
யார் யாருக்கு என்னவேணுமோ
அள்ளிக் கொடுக்கும் கணிப்பொறி
எல்லாருக்கும் எதுகேட்டாலும்
சொல்லிக் கொடுக்கும் கணிப்பொறி


தமிழ்மொழி, அறிவியல், வரலாறு, பொழுதுபோக்கு, விளையாட்டு, குடும்பம், தொழில் நுட்பம், புவியியல், காலம், கணிப்பொறி, என பலபொருள் குறித்த 35 பாடல்கள் இந்நூலிலும் குறுந்தகடிலும் இடம் பெற்றுள்ளன. பாடல்களில் குழந்தைகளின் குரல்களை இணைத்திருப்பது இனிமை. கணினி வரைகலையில் உருவான படங்கள் இங்கிலீஷ் நூல்களை நினைவுபடுத்துகின்றன. நூலின் பின் இணைப்பாக பட அகராதியை இணைத்திருப்பது வெகுசிறப்பு. அய் பாட்டி நூலை குழந்தைகளுக்கு பிறந்தநாள் பரிசாக வழங்கலாம். தன்னம்-பிக்-கையை ஊக்குவிக்கும் விதமாகவும் நிகழ்கால தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியையும் குழந்தைகளின் சிந்-தனைக்குக் கொண்டு சேர்க்கும் அரிய நூலாக அமைந்-துள்ள அய் பாட்டி யைப் பாராட்டுவோம்.

வெளியீடு: மெல்லினம், 22, நாலாவது குறுக்குத்தெரு, டிரஸ்டுபுரம், கோடம்பாக்கம், சென்னை - 24 , ஷ்ஷ்ஷ்.னீமீறீறீவீஸீணீனீ.நீஷீனீ.
பாடல் குறுந்தகடுடன் நூலின் விலை ரூ. 499/-

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008