சுடோகு போடுவோமா?

நாம் எல்லோரும் கையின் பெருவிரலையும், நடுவிரலையும் பயன்படுத்தி சொடுக்கு போடுவோம். சுடோகு போடுலாமா? இதைத் தெரிந்து கொண்டால் எளிதில் போடலாமே? லத்தின் சதுரம் என்ற விளையாட்டின் அடிப்படையிலானது தான் சுடோகு என்கிறார்கள் சிலர்.

இந்தக் கணித விளையாட்டை நவீன காலத்தில் மீள்வடிவமைப்பு செய்தது அமெரிக்காவின் ஹேவர்ட் கார்ன்ஸ் என்பவர். இது நடந்தது 1979-இல்.

1986-ஆம் ஆண்டில் ஜப்பானிய புதிர் நிறுவனமான நிகோலிதான் சுடோகு என்ற பெயரில் இதை விளம்பரப்படுத்தியது. பின்னர் 2004-ஆம் ஆண்டு இங்கிலாந்தின் தி டைம்ஸ் நாளிதழ் வெளியிடத் தொடங்கியிருக்கிறது. உலகெங்கும் குறுக்கெழுத்துப் புதிர்களை விஞ்சி சுடோகு சூடு பிடித்துக் கொண்டது.

சரி, இதை விளையாடுவது எப்படி ரொம்பவும் எளிமை. 9 நெடுக்கு, 9 குறுக்குக் கட்டங்கள் கொண்டதுதான் சுடோகு. இது 3 ஓ 3 என்ற அளவில் பிரிக்கப்பட்ட 9 பிரிவுகள் இருக்கும். மொத்தம் உள்ள 81 கட்டங்களில் சிலவற்றில் எண்கள் நிரப்பப்பட்டிருக்கும். மீதம் உள்ள கட்டங்களில் 1 முதல் 9 வரையிலான எண்களை நாம் நிரப்ப வேண்டும். அவ்வளவுதான்!

ஹை! சும்மா நிரப்பிவிட முடியுமா? சின்னதா சில விதிமுறைகள் இருக்கு!

குறுக்கு வரிசையிலோ, நெடுக்கு வரிசையிலோ 1 முதல் 9 வரை உள்ள எண்கள், எப்படியாகிலும் வரலாம். ஆனால், ஒருமுறை வந்த எண் திரும்ப அதே வரிசையில் வரக்கூடாது.

(எ.கா.) 5, 3, 4, 6, 7, 8, 9, 1, 2 இந்த வரிசையில் எண்கள் முன்பின் இருக்கும். ஆனால், மீண்டும் வருதல் இருக்காது.

 

இதே விதிமுறைதான் 3 X 3 கட்டங்கள் அடங்கிய பகுதிக்கும் பொருந்தும்.

5 3 4

6 7 2

1 9 8

இந்தக் கட்டத்தில் எண்கள் எங்கும் இருக்கலாம். ஆனால், திரும்ப வரக்கூடாது.

அவ்வளவுதான், இனி கட்டத்தை நிரப்புங்க கட்டதுரைகளா!

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008