மைக்கேல் ஃபாரடே

- கு.வெ.கி. ஆசான்

உலகம் முழுவதும் மின்சாரம் பரவியிருக்கிறது; அனைவரும் அதை ஏதேனும் ஒரு வகையில் பயன்படுத்து கிறார்கள். மின்சாரம் இல்லாத தற்கால வாழ்வைக் கற்பனை செய்வதே கடினமாகும். மனித வாழ்வில் இவ்வளவு முக்கிய இடம் பெறும் மின்சாரம் பற்றிய அடிப்படைக் கொள்கைகளையும், அதை உற் பத்தி செய்யும் அடிப்படை முறையையும் கண்டுபிடித்தவர் மைகேல் ஃபாரடே.

வறுமையில் வளர்ந்தார் இங்கிலாந்து நாட்டில், சர் ரே எனும் பகுதியில் உள்ள நெவிங்டன் நகரில், 1791 செப்டம்பர் 22இல் பிறந்தவர், மைகேல் ஃபாரடே. அவருடைய தந்தையின் பெயர் ஜேம்ஸ் ஃபாரடே. அவர் ஒரு கருமான் அல்லது இரும்புக் கொல்லர், அதாவது இரும்பு வேலைக்காரர். குடும்பத்தை வசதியாக வைத்துக் கொள்ளும் அளவுக்கு அவருக்குப் போதிய வேலையும், வருவாயும் இல்லை. ஆகையால் மைகேல் சிறுவனாக இருந்தபொழுது ஏழ்மை, பசி, பட்டினி ஆகியவற்றுடன் வளர்ந்தார். வறுமையின் காரணமாக, ஃபாரடே குடும்பம் மான்செஸ்டர் சதுக்கம் எனும் இடத்தில் இருந்த ஒரு சிறிய கட்டடத்தில் குடியேற வேண்டிய தாயிற்று. அதன் அருகிலிருந்த எளிமையான பொதுப்பள்ளிக் கூடம் ஒன்றில் மைகேல் படித்தார். குடும்ப நிலையின் காரணமாக, அவர் தன்னுடைய படிப்பைப் 13ஆவது வயதில் நிறுத்த வேண்டியரானார்.

படிக்க வாய்ப்புக் கொடுத்த வேலை

பள்ளியில் இருந்து நின்றவுடன் வேலைக்குச் சென்றார், மைகேல். புத்தகங்கள், இதழ்கள், எழுதுபொருள்கள் ஆகிய வற்றை விற்கும் ஒரு கடையில் பணியாளராகச் சேர்ந்தார். ஓராண்டுக் காலம் லண்டன் தெருக்களில் செய்தித்தாள்கள், இதழ்கள் ஆகியவற்றை விற்றார். பின்பு புத்தகக் கட்டுமான வேலையைக் கற்றுக்கொள்பவராகப் பதவி உயர்வு பெற்றார். இந்தப் பணியில் இவருக்குப் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது; நிறையப் படித்தார். வேதியியல் உரையாடல்கள் எனும் நூல், மற்றும் பிரிட்டானியா கலைக்களஞ்சியத்தில் மின்சாரம் பற்றிய பகுதிகள் அவருடைய கவனத்தை மிகுதியாக ஈர்த்தன. அவற்றைப் படித்த பின்புதான் ஒரு அறிவியலராக வரவேண்டும் என மைகேல் ஆசைப்பட்டார்.

ஹம்ப்ரி டேவி

அவருக்கு அகவை 19இல், அவருடைய தந்தை மறைந்தார். ஆகையால், தாயையும், தங்கையையும் தாங்கவேண்டிய முழுப் பொறுப்பை இளைஞனாகிய மைகேல் ஏற்றார். இரண்டு ஆண்டுகள் கழித்து, அவருடைய 21ஆம் வயதில் ஒரு முக்கிய நிகழ்வு நடந்தது. பாதுகாப்பு விளக்கைக் கண்டுபிடித்த சர். ஹம்ப்ரி டேவி எனும் மிகச் சிறந்த இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானியின் சொற்பொழிவுகளைக் கேட்கும் நல்ல வாய்ப்பை அவர் பெற்றார். அவற்றைப் பற்றிய குறிப்புகள் எடுத்து, அவற்றை விரிவுபடுத்தி, அவற்றிற்கான படங் களை வரைந்து, தாள்களை நன்றாகக் கட்டுச் செய்து, அதை சர் டேவிக்கு அனுப்பினார். அதைக் கண்ணுற்ற அறிவியல் அறிஞர் டேவி, தன்னுடைய உதவியாளராக மைகேல் ஃபாரடேயை அமர்த்திக்கொண்டார்; வாரம் ஒன்றிற்கு 25 ஷில்லிங் சம்பளம் அளித்தார். (20 ஷில்லிங் ஒரு பவுன் என்ற நாணய மாற்று அளவு 1971 வரை நீடித்தது.)

பயணம்

இங்கிலாந்தும், பிரான்சும் 1813இல் கடுமை யான சண்டையில் ஈடுபட்டிருந்தன. இருப் பினும், சர் ஹம்ப்ரி டேவியைத் தடை யின்றி, பிரான்சில் பயணம் செய்ய நெப்போலி யன் அனுமதித்தார். டேவியுடன், மைகேலும் உதவிக்குச் சென்றார். இருவரும் இரண்டு ஆண்டுகள் அய்ரோப்பாவில் பயணித்தனர். பிரான்சு, சுவிட்சர்லாந்து, இதாலி, ஆஸ்திரி யாவை ஒட்டிய ஆல்பைன் பகுதியான டைரோல் ஆகிய இடங்களுக்குச் சென்றனர். பாரிஸ் மாநகரில் ஏம்பியர், இதாலியில் வோல்டா ஆகிய மின்னியல் அறிஞர்களைக் கண்டனர். இந்தப் பயணம் மைகேலுக்குப் பயன்மிக்க அனுபவத்தை அளித்தது; அத்துடன் அவருடைய சம்பளமும் 30 ஷில்லிங் என்ற அளவிற்கு உயர்ந்தது.

கண்டுபிடிப்புகள்

வேதியியல் ஆய்வுகளின் ஆர்வத்துடன் ஈடுபட்ட மைகேல், நிலைவெள்ளி (எவல் சில்வர்) எனப்படும் கறைபடியாத எஃகுவை (ஸ்டெய்ன்லெஸ் ஸ்டீல்) கண்டுபிடித்தார். குளோரின் வாயுவை திரவமாக மாற்றிக் காட்டினார்; மற்ற வாயுக்களையும் அவ்வாறே மாற்றினார். கரியுடன் குளோரின் சேர்ந்த இரு புதிய சேர்மங்களைக் கண்டுபிடித்தார். பல புதிய பார்வைக் கண்ணாடிகளை உண்டாக்கினார்.

மின்சார மோட்டார்

ஊர்ஸ்டட் என்பவர் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த பேராசிரியர். 1819இல் அவர் ஒரு நிகழ்வை உற்றுநோக்கி வெளிப்படுத்தினார். ஒரு கம்பியில் மின்னோட்டம் இருக்கும் பொழுது, அருகில் இருக்கும் ஒரு காந்தத் திசைகாட்டியின் முள் ஒரு பக்கமாகத் திரும்பியது. இந்த நிகழ்வு மைகேலின் சிந்தனையைத் தூண்டியது. காந்தத்தை நிலையாகப் பொருத்திவிட்டால் கம்பி இயங்கக் கூடும் என ஊகித்தார். அதன்படி ஒரு சாதனம் செய்தார். நிலையாகக் காந்தத்தைப் பொருத் தினார்; அருகில் ஒரு கம்பியில் மின்சாரம் செலுத்தினார். அது செலுத்தப்படும் வரையில் கம்பி சுழன்றுகொண்டேயிருந்தது. இந்தச் சாதனந்தான் முதலாவது மின்சார மோட்டார்! ஒரு பருப்பொருளை இயக்குவதற்கு மின் னோட்டத்தைப் பயன்படுத்திய முதல் சாதனம் இதுவே. இது 1821இல் நிகழ்ந்தது. அக்காலத் தில் வேதியியல் மின்கலங்கள் வாயிலாகவே மின்சார உற்பத்தி செய்யப்பட்டது. ஆகையால், மைகேல் ஃபாரடே கண்டுபிடித்த மின்சார மோட் டாருக்கு நடைமுறைப் பயன் ஏற்படவில்லை.

டைனமோ

காந்தத்தைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்ய முடியும் என மைகேல் கருதினார். நிலையாக இருக்கும் காந்தம், அருகில் இருக்கும் கம்பியில் மின்னோட்டத்தைத் தூண் டாது. ஆனால், ஒரு கம்பி வளையத்தினுள், ஒரு காந்தத்தைச் செலுத்தினால், அக்காந்தம் இயங்கும் வரை கம்பியில் மின்னோட்டம் இருக்கும். இதை மின்காந்தத் தூண்டல் என அழைத்தார். இந்தத் தன்மையைப் பயன் படுத்தி, முதல் மின்னாக்கப் பொறியினை (டைனமோ) உருவாக்கி, மின்சார உற்பத்திக் குப் புதிய ஒரு வழியைக் காட்டினார்; உலகுக்குப் புதிய ஒளியைக் காட்டினார்.

சாரா என்பரை 1821இல் மணந்தார்; குழந்தை இல்லை, ஆனாலும் குடும்ப வாழ்வு மகிழ்ச்சியாக அமைத்து. 1867 ஆகஸ்ட் 25இல் மறையும் வரை எளிமையாக வாழ்ந்தார். பெரும்பட்டங்களையும், பதவிகளையும் அவர் ஏற்க மறுத்து விட்டார். வறுமையில் பிறந்த அவருடைய வாழ்வு இன்னும் உலகத்திற்கு வளம் சேர்த்துக் கொண்டிருக்கிறது.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008