உலக நாடுகள் - ஓமன்

- வை.கலை

அமைவிடம்

* அரபிக் கடலையொட்டி சவுதி அரேபியா அருகில் அமைந்துள்ளது.

* பாரசீக வளைகுடா, ஓமன் வளைகுடா போன்ற கடற்பகுதிகளையும், சவுதி அரேபியாவையும், யேமன் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

* மொத்தப் பரப்பளவு 2,12,460 சதுர கிலோ மீட்டர்

* நாட்டின் நடுப்பகுதி பாலைவன மாகவும், தெற்கு மற்றும் வடக்கு பகுதிகள் மலைப்பகுதிகளாகவும் அமைந்துள்ளன.

2006 - கணக்கெடுப்பின்படி

* மொத்த மக்கள் தொகை 31,02,229 பேர். (இதில் 5,77,293 பேர் அயல்நாட்டினர்)

* மக்கள் தொகை வளர்ச்சி 3.28ரூ

* மதம் - முஸ்லிம்.

* அரேபிய மொழி அலுவலக மொழியாக உள்ளது. ஆங்கிலம், பலுச்சி, உருது போன்ற மொழிகளும் பேசப்படுகின்றன.

* 2006 கணக்கெடுப்பின்படி 75.8ரூ பொருளாதாரம்

* இந்நாட்டின் நாணயம் ஓமன் ரியால்.

* முக்கிய வளங்கள் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, தாமிரம், குரோமியம், போன்றவைகளாகும்.

* முக்கிய ஏற்றுமதிகள் எண்ணெய், எரிவாயு, பேரீச்சை போன்றவை.

அரசுமுறை

* தலைநகர் மஸ்கட் (ஏனைய முக்கிய நகரங்கள் மாட்ராக், ரூவி)

* மன்னராட்சி முறை அமலில் உள்ளது. மன்னர் சுல்தானாகக் கருதப்படுகிறார்.

* சுல்தான் நாட்டின் தலைவராகவும், ஆட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

* 1970 முதல் க்வாபோஸ் பின் சையது அலி சய்யது இருந்து வருகிறார்.

வரலாற்றுப் பார்வை

* மிகநீண்ட காலமாக போர்ச்சுகீசியர் மற்றும் துருக்கியரின் ஆட்சியிலிருந்தது.

* 1550இல் போர்ச்சுகீசியரிடமிருந்து விடுதலைப் பெற்றது.

* பின்னர் அகமது பின் சயீத் தலைமை யில் துருக்கியர் விரட்டப்பட்டனர்.

* அண்டை நாடான யேமனுடனான போர் 1992இல் முடிவுக்கு வந்தது.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008