ஆஸ்கர் புன்னகை

'ஜெய் ஹோ' என்ற பாடலுக்கும், அப்பாடல் இடம் பெற்றுள்ள ஸ்லம் டாக் மில்லியனர் படத்தின் பின்னணி இசைக்குமாக இரண்டு ஆஸ்கர் விருதுகளை அள்ளி வந்திருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான். அவரோடு சேர்ந்து மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றிருக்கிறது ஸ்லம் டாக் மில்லியனர் படம்.

சேரியில் பிறந்து மதவெறியர்களால் தாயை இழந்து, பல்வேறு துயரங்களைச் சந்தித்து வரும் ஓர் இளைஞன் தனது கேள்வி அறிவைக் கொண்டு கோடீஸ்வரன் (Crorepathi) நிகழ்ச்சியில் வெற்றி பெறுவதை அப்படம் மிகச் சிறப்பாக வெளிப்படுத்தி யிருக்கிறது. இந்த எட்டு விருதுகள் மட்டுமல்ல இன்னொரு விருதையும் இந்தியா பெற்றிருக்கிறது. அது ஒரு புன்னகைக் கான விருது. அதுவும் ஒரு பிஞ்சுக் குழந்தையின் புன்னகைக்கான விருது. உங்கள் ஊகம் சரிதான்.

'ஸ்மைல் பிங்கி' (Smile Pinki) சிறந்த ஆவணப் படத்திற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றிருக்கும் படம். அமெரிக்காவைச் சேர்ந்த ஆவணப்பட (Documentary) இயக்குநர் மேகன் மைலன் என்ற பெண் இப்படத்தை இயக்கி யிருக்கிறார். 39 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த ஆவணப்படம் எதைப் பற்றியது தெரியுமா?

பிங்கி என்ற 6 வயது பிஞ்சுக் குழந் தையைப் பற்றியதுதான் இந்த ஆவணப்படம். இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வாரணாசியில் இருந்து தெற்கே 50 கி.மீ. தொலைவில் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமமான ராம்பூர் தாபாஹியில் பிறந்த குழந்தைதான் பிங்கி. மிகவும் ஒடுக்கப் பட்ட சமூகத்தில் பிறந்த பிங்கிக்கு இருந்த பெரும் பிரச்சினை, அவளை மற்ற குழந்தை கள் ஒதுக்கும்படி செய்தது. அது அவரது முகத்தை விகாரப்படுத்திய உதட்டுப்பிளவு (Cleft Lip). இது குறித்த விழிப்புணர்வோ, இதைச் சரிசெய்ய முடியும் என்ற தெளிவோ இல்லாத வர்களாக இருந்தனர் அவளது பெற்றோர்.

இந்த உதட்டுப்பிளவு (Cleft Lip) மற்றும் மேலண்ணப் பிளவு (Palate) என்னும் குறைபாடு இந்தியா மற்றும் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியாவில் ஓராண்டில் பிறக்கும் குழந்தை களில் 35,000 குழந்தைகள் இந்த உதட்டுப் பிளவு குறைபாட்டுடன் பிறக்கின்றன. இந்தக் குறைபாடுடைய குழந்தைகளுக்கு மேல் உதடு பிளந்து காணப்படும். இது பார்ப்பதற்கு விகாரத்தையும், அழகின்மையையும் உண்டாக்கு வதுடன் பேச்சுக் குறைபாட்டையும் உண்டாக்குகிறது.

உங்களுக்குத் தெரியுமே? நாக்கு மட்டுமா உச்சரிப்பை உண்டாக்குகிறது. நாக்கு, பல், அண்ணம், உதடு என்று வாய்ப்பகுதியின் அனைத்து உறுப்புகளும் சேர்ந்தால்தானே ஒரு சொல்லின் முழுமையான சரியான உச்சரிப்பு கிடைக்கும். அவ்வகையில் மேலண்ணப்பிளவு மற்றும் உதட்டுப்பிளவு உள்ள குழந்தை களுக்கு பேச்சுக்குறைபாடு ஏற்படுகிறது.

இரத்த உறவுகளுக்குள் நிகழும் திருமணத் தில் பிறக்கும் குழந்தைகளுக்கும், ஏற்கனவே இக்குறைபாடுள்ள பெற்றோருக்குப் பிறக்கும் குழந்தைகளுக்கும் இக்குறைபாடு வரவாய்ப்பு உள்ளது.

இதைத் தொடக்கக் கட்டத்திலேயே சரிசெய்து கொள்ள முடியும். அதாவது குழந்தை பிறந்த இரண்டாவது மாதத்திலேயே இதற்கான அறுவை சிகிச்சையைச் செய்து கொள்ள முடியும். ஞடயளவஉ ளுரசபநசல என்றழைக்கப்படும் முக அறுவை சிகிச்சையை, சீரான கால இடைவெளி யில் தொடர்ந்து 5 அல்லது 6 முறை செய்து கொள்வதன் மூலம் இக்குறைபாட்டைப் போக்கிக் கொள்ளலாம். இதற்கான விழிப் புணர்வை அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும். இந்தக் குறைபாட்டிற்கான அறுவை சிகிச்சை தமிழகத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதற்கான வழிகாட்டுதலைப் பெறலாம்.

வட மாநிலங்களில் இந்த இலவச அறுவை சிகிச்சை வாய்ப்பை சில தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. அத்தகைய தொண்டு நிறுவனங்களுள் ஒன்றான ளுஅடைந வசய அமைப்பின் தன்னார்வப் பணியாளர் பங்கஜ். இவர் தொடர்ந்து பல்வேறு கிராமங் களுக்கும் பயணித்து இக்குறைபாடுடையோ ரைக் கண்டுபிடித்து அவர்களுக்கு இதற்கான சிகிச்சை வாய்ப்புகளைப் பற்றி விளக்குகிறார். இந்நிறுவனம் ஓராண்டுக்கு சுமார் ஆயிரம் குழந்தைகளுக்கு உதட்டுப் பிளவு குறை பாட்டுக்கான சிகிச்சையை வழங்குகிறது. பிங்கியின் தந்தை ராஜேந்திர சோன்கார் மற்றும் தாயை சந்திக்கும் பங்கஜ் இதைப்பற்றி எடுத்துக்கூறி அவர்களை மருத்துவர் சுபோத்குமார் சிங் அவர்களிடம் அழைத்து வருகிறார்.

முகச்சீரமைப்பு மருத்துவரான சுபோத்குமார் சிங் பிங்கியின் உதட்டுப்பிளவு குறைபாட்டுக் கான அறுவைச் சிகிச்சையை மேற்கொண்டு சீர்படுத்துகிறார். இதை ஆவணப்படமாக உருவாக்கியிருக்கும் மேகன் மைலன், இப்படத்தை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு சென்றுள்ளார். ஏற்கெனவே தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டிருந்த மைலன் தொடர்ந்து ஆவணப் படங்களுக்கான பயிற்சியை மேற்கொண்டு இப்போது வெற்றிகரமான ஸ்மைல் பிங்கி மூலம் உலகறிந்த இயக்குநராகியிருக்கிறார்.

உதட்டுப்பிளவு காரணமாக மற்ற குழந்தை களுடன் சேராமல், தனிமையில் தவித்த பிங்கி இன்று மற்ற பிஞ்சுகளோடு கொஞ்சிக் குலாவுகிறார். ஆஸ்கர் விருதை வென்று வந்து தங்கள் கிராமத்துக் குழந்தைக்கு வரவேற்பு தந்து ஆடிப்பாடி மகிழ்ந்துள்ளனர் அக்கிராமத்து மக்கள். ஆஸ்கர் பெற்றது பிங்கி என்பதால் மட்மல்ல, இன்னும் இது போன்ற குழந்தை களுக்கு விழிப்புணர்வும், சிகிச்சையும் கிடைக்க விருக்கிறது என்பதால் நமது மகிழ்ச்சி இன்னும் பன்மடங்காகிறது.

- சமா.இளவரசன்

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008