சாதனைப் பிஞ்சுகள்

நான் விரும்பும் தலைவர்

காரைக்குடி காஸ்மாஸ் அரிமா சங்கத்தின் சார்பில் நடைபெற்ற குழந்தைகள் தின விழாவில் 6 முதல் 8-ஆம் வகுப்புகளுக்கான பேச்சுப் போட்டியில் பங்கேற்று தந்தை பெரியாரே நான் விரும்பும் தலைவர் என்ற தலைப்பில் பேசி இரண்டாவது பரிசு பெற்றுள்ளார் நெ. அருண்.

காரைக்குடி தி லீடர்ஸ் மெட்ரிக் பள்ளியில் ஆறாம் வகுப்புப் பயிலும் இவரது பெற்றோர் வ.நெல்லியான் - மா. விஜயலட்சுமி ஆவர்.

நெ. அருண் தனது உரையில், மற்ற உயிரினங்களில் இருந்து மனிதனை வேறுபடுத்துவது எது? அறிவு தான். அந்த அறிவை மனிதன் முழுமையாகப் பெற்றிருக்கின்றானா? சந்திரனையும், சூரியனையும் இராகு, கேது என்னும் பாம்புகள் விழுங்குகின்றனவாம் அதுதான் கிரகணம் என்று கூறும் முட்டாள்தனத்தை ஏற்கலாமா? சந்திரனையும், சூரியனையும் விட பெரிதாக இருந்தால் தானே பாம்புகள் விழுங்க முடியும்? சந்திரனும் சூரியனும் கண்ணுக்குத் தெரிகின்ற போது பாம்புகள் மட்டும் ஏன் கண்ணுக்குத் தெரிவதில்லை என்று வினா எழுப்பி மூடத்தனத்தை முறியடித்தவர்; எத்தர்களின் ஏமாற்று வேலையைக் ஜாதி எதிர்ப்பு, ஆரிய ஆதிக்கம், கொத்திக் குதறியவர்! எனக் குறிப்பிட்டதோடு பெண்ணுரிமை பற்றிய பெரியாரின் சிந்தனைகளையும் விவரித்தார்.


வழிகாட்டும் சிறுவன்

பிஞ்சு வாசகர்களே,

நினைவிருக்கிறதா? கடந்த டிசம்பர் 2008 பெரியார் பிஞ்சு இதழில் பாடம் சொல்லும் வாழ்க்கை வரலாறுகள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை படித்திருப்பீர்கள். அது நம்முடைய ஆசிரியர் தாத்தா அவர்களின் தன் வரலாற்று நூலான அய்யாவின் அடிச்சுவட்டில் நூலைப் பற்றி எழுதப்பட்டது. அந்த நூலை இராசி.பிரபாகரன் என்னும் பெரியார் பிஞ்சு ஒரே நாளில் 73 பிரதிகள் விற்று வழிகாட்டியுள்ளார்.

இராசி.பிரபாகரன், அவரின் தந்தையார் ச.சிற்றரசு (கோவை புறநகர் மாவட்ட தி.க. அமைப்பாளர்) அவர்களின் வழிகாட்டுதலுடன் கடந்த மார்ச் 1ம் தேதி காலை 7 மணிக்குத் துவங்கி இரவு 10.00 மணிக்குள் 73 அய்யாவின் அடிச்சுவட்டில் புத்தகங்களை விற்று அதற்கான தொகை ரூபாய் 8030/-அய் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் ம.சந்திரசேகர் அவர்களிடம் கொடுத்து பொறுப்பாளர்கள் அனைவரின் வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார். உறவுகளிடமும், நட்புக்களிடமும் தோழமைக் கட்சிகளுக்கும் பெரியார் பிஞ்சின் இயக்கப்பணி செய்த விதத்தை அனைவரும் புத்தகம் பெற்றுக்கொண்டு உடன் பணத்தையும் கொடுத்து ஊக்குவித்தனர். பொதுவாழ்வில் பக்குவமடைய இது போன்ற வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வோம். தனது இலக்கான 100 புத்தகத்தைக் கடந்து, சாதனை படைப்பேன் என்று உறுதி கூறுகிறார் இந்தப் பிஞ்சு.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008