வேதனையை விளக்கிய சாதனை ஓவியம்
அரசு கவின் கலைக்கல்லூரியில் படிக்கும் ந.மஞ்சுநாதன், சிவகங்கையைச் சேர்ந்தவர். இவர் ஈழத் தமிழர்களின் நிலைகளை சித்தரிக்கும் வகையில் தூரிகை இல்லாமல், எந்த வண்ணமும் இல்லாமல், விரல் களையே தூரிகையாகப் பயன்படுத்தி மூன்று குண்டு பல்புகளை முக்கோண வடிவில் நிமிர்த்தி வைத்து அதன்மேல் நின்று கொண்டு, பல்புகள் உடையாமல் மண் ஓவியம் வரைந்து சாதனை புரிந்துள்ளார். சிறு வயதிலிருந்தே அறிவியலிலும், ஓவியத்திலும் அளவற்ற ஆர்வம் கொண்ட இவர் 9-ம் வகுப்பு படிக்கும் போதே மிக்ஸி, கிரைண்டருக்கு சுநஅடிவந பயன்படுத்தி இயக்கும் முறையை கண்டறிந்தார். 11-ம் வகுப்பு படிக்கும் போது ளுயீநநன க்ஷசயமந -இல் இருந்து மின்சாரம் தயாரிப்பு முறையை கண்டுபிடித்து அஹமதாபாத்தில் உள்ள "ஹனீபீ" மற்றும் NIF-இல் இளம் விஞ்ஞானி விருதுகளைப் பெற்றுள்ளார். ஹனீப் மூலமாக ஒரிசாவில் நடைபெற்ற ஜோதியாத்ரா (ஒரு Camp) 70 அறிவியல் விஞ்ஞானிகள் கலந்துகொண்ட கருத்தரங்கில் தமிழகத்தில் இருந்து இவர் மட்டும் கலந்து கொண்டார்.
Speed Brake மின்சார கண்டுபிடிப்பின் மூலம் அப்துல்கலாமிடம் பாராட்டு பெற்றுள்ளார். இவ்வளவு சாதனைகள் படைத்த இவர். அறிவியலையும், ஓவியத்தையும் இணைத்து பல புதிய சாதனைகளை படைக்க விரும்புவதாக தெரிவித்தார்.
-கர்ணா |