பெரியார் தாத்தா 56

எங்களால் செய்ய முடியாததை செய்துகாட்டிய பெருந்தலைவர் பெரியார் ஈ.வெ.ரா. ஆவார்கள். ஜாதி அழிக்கப்படாவிட்டால் சமுதாயம் முன்னேறவே வழியில்லை

15.8.1972 அன்று சென்னை கடற்கரையில் சுதந்திர வெள்ளி விழாவையொட்டி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் பாபு ஜெகஜீவன்ராம் பேசினார். தந்தை பெரியாரின் 94ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி (17.9.1972) பத்து காசு விலையில் உயர் எண்ணங்கள் என்ற அய்யாவின் கருத்துக்களடங்கிய சிறிய அழகிய நூல் கழகச் சார்பில் அச்சிடப்பட்டு வீட்டுக்கு வீடு சென்று விற்கப்பட்டது. கருத்துப் பிரச்சாரத்துக்கு ஒரு புதிய அணுகுமுறையாக இது அமைந்திருந்தது.

தந்தை பெரியாரின் 94ஆவது ஆண்டு பிறந்தநாளையொட்டி (17.9.1972) பத்து காசு விலையில் உயர் எண்ணங்கள் என்ற அய்யாவின் கருத்துக்களடங்கிய சிறிய அழகிய நூல் கழகச் சார்பில் அச்சிடப்பட்டு வீட்டுக்கு வீடு சென்று விற்கப்பட்டது. கருத்துப் பிரச்சாரத்துக்கு ஒரு புதிய அணுகுமுறையாக இது அமைந்திருந்தது.

சி. இராஜகோபாலாச்சாரியார் ஆட்சிக் காலத்தில் சட்டமன்ற செயலாளராக இருந்த ஆர்.கே. பாலசுப்பிரமணியம், சென்னையில் பாராளுமன்ற பணிக்கான ஆய்வகம் ஒன்றை நடத்தி வந்தார். தமிழ்நாட்டில் பெரியாரின் ஓய்வற்ற பணிகளால் பல்வேறு துறைகளில் மக்களிடையே குறிப்பிடத்தக்க மனமாற்றம் நிகழ்ந்துள்ளது. அவரது தொண்டுகளை அங்கீகரித்து, அவரை நட்புடன் அவரணைத்துச் செல்லுவது ஆட்சிக்கு நல்லது! என்று பிரதமர் இந்திரா காந்திக்கு 30.9.1972 அன்று கடிதம் எழுதினார். பிரதமரின் அந்தரங்க செயலாளர் என்.கே. சேஷன் மேற்கண்ட கடிதம் கிடைத்தது. மிக்க நன்றி. பிரதமர், கடிதத்தில் உள்ள விஷயங்களைப் பார்த்துக் கொண்டார் என்று பதில் எழுதினார் (3.10.1972)

சென்னையில் நடைபெற்ற வள்ளலார் விழாவில் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார் (4.10.72). அடிகளார் போன்றவர்கள் எவ்வளவுதான் பேசினாலும், நமது தமிழ் மக்களை எழச் செய்ய முடியாது. அவர்களது கும்பகர்ணத் தூக்கத்திலிருந்து எழுப்பப் பெரியார் என்னும் யானைதான் மிதிக்க வேண்டும்

தந்தை பெரியார் அவர்களுக்கு மத்திய அரசு சார்பில் தாமிரப்பட்டாயம் வழங்கப்பட்டது. தமிழக முதல்வர் மாண்புமிகு டாக்டர் கலைஞர் அவர்கள் சென்னை பெரியார் திடலில் இருந்த தந்தை பெரியார் அவர்களிடம் நேரில் வழங்கினார்கள் (13.10.1972 முற்பகல் 11.15 மணி).
இந்திய விடுதலையின் 25 ஆண்டு நிறைவையொட்டி விடுதலைப் போராட்டத்தில் ஆற்றிய பங்கு பணியின் நினைவாக பிரதம மந்திரி ஸ்ரீமதி இந்திரா காந்தி, நாட்டின் சார்பில் இந்த தாமிர பத்திரத்தை வழங்குகிறார் என்று அதில் பொறிக்கப்பட்டு இருந்தது.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008