வை.கலை - காங்கோ குடியரசு

நம்பிக்கை: குகைமனிதர்கள் (Cave Man) டினோசர்களைப் பார்த்திருக்கின்றார்.
உண்மை: உண்மையான குகை மனிதர்கள் இந்த மாபெரும் ஊர்ந்து செல்லும் விலங்குகளைக் கண்டதில்லை. மனிதர்கள், விலங்கினத்தின் ராஜ்யத்தில் ஒரு பகுதியாக வருவதற்கு 5 கோடி ஆண்டுகளுக்கு முன்புதான் டினோசர்கள் பூமியில் உலவி வந்துள்ளன.


நம்பிக்கை: பாம்புகள் வழவழப்பாக இருப்பது போலத் தோன்றும்.

உண்மை: பாம்புகளின் தோல் வழக்கமாக வறண்டதாகவே தோன்றும். சூரிய ஒளி பாம்பின் மீது படும்போது, அதன் செதில்கள் பெரும்பாலும் ஈரமாக இருப்பது போல பளபளவெனத் தோன்றும்.

நம்பிக்கை: எல்லாப் பாம்புகளும் ஆபத்தானவை.
உண்மை: மக்களில் பலர் பாம்புகள் ஆபத்து விளைவிக்கும் கெட்ட உயிரினம் என்று நினைத்தாலும், அவற்றில் 2,000

க்கும் மேற்பட்ட வகை பாம்புகள் ஆபத்தற்றவை, பயந்த சுபாவம் கொண்டவை, மனிதரை தவிர்ப்பவை. இத்தகைய பாம்புகள் வயல்களில் உள்ள எலிகளை உண்பதால், கணக்கின்றி பெருகி வரும் எலிகளின் இனப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்துவதால், பல நாடுகளில் விவசாயிகள் இப்பாம்புகளை வரவேற்கின்றனர்.

நம்பிக்கை: தாக்குவதற்கு முன்பு பாம்புகள் தங்கள் உடல்களைச் சுருட்டிக் கொள்கின்றன.
உண்மை: தாக்குவதற்கு முன் எதிரிகளுக்கு பாம்புகள் வழக்கமாக எச்சரிக்கை விடுக்கும். சில பாம்புகள் தங்கள் வால்களை ஆட்டும்; மற்றவை சீறும் அல்லது உடலைச் சுருட்டிக் கொள்ளும். என்றாலும், எந்தவித எச்சரிக்கையும் அளிக்காமல் தாக்கும் பாம்பினங்களும் உள்ளன.

நம்பிக்கை: தங்கள் குட்டிகளைப் பாதுகாக்க பாம்புகள் தங்கள் குட்டிகளை விழுங்கிவிடுகின்றன.
உண்மை: சில பெரிய பாம்புகள் சிறிய பாம்புகளை விழுங்குகின்றன என்பது உண்மைதான். ஆனால் அது அவற்றைப்

பாதுகாப்பதற்காக அல்ல. தங்களின் உணவாகவே அவற்றை விழுங்குகின்றன. சில பாம்புகள் தங்களின் சொந்தக் குட்டிகளையே கூட சாப்பிட்டுவிடுகின்றன.

நம்பிக்கை: சில பாம்புகள் இசைக்கு ஆடுகின்றன.
உண்மை: ஆசியா, ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் உள்ள பாம்பாட்டிகள் மகுடி வாசித்துக் காட்டியும், அந்த இசைக்கேற்றபடி நச்சுப் பாம்புகளும் ஆடுவதைக் காட்டியும் பிழைத்து வருகின்றனர். ஆனால் இசையைக் கேட்பதற்கு பாம்புகளுக்குக் காது இல்லை. பாம்பாட்டியின் உடல் அசைவுக்கு ஏற்றாற்போலத்தான் பாம்புகளும் ஆடுகின்றன அசைகின்றனவே தவிர, அவனது இசையைக் கேட்டல்ல. பாம்பாட்டி சாயும் போது, அதைக் காணும் பாம்பும் சாய்கிறது. பாம்பாட்டி இசைக்கும் இசையும் அவன் இடும் கட்டளைகளும் வேடிக்கை பார்க்கும் கூட்டத்தைப் பரவசப்படுத்தவே.

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008