சாதனைப் பிஞ்சு

தன்னந்தனியே கடல் பயணம்

இங்கிலாந்தின் இளம் வயதுக்காரர் ஒருவரின் சாதனை இது. 17 வயது நிரம்பிய இளைஞர் மைக் பெர்காம் 9 மாதங்கள் தன்னந்தனியாக ஒரு படகில் கடல்பயணம் மேற்கொண்டு உலகைச்சுற்றி வந்து சாதனை படைத்துள்ளார். இதுவரை உலகைச் சுற்றி வந்த 250 பேர்களில் மைக் பெர்காம்தான் மிக இளம்-வயதுக்காரர்.

இவர் 7வயதிலிருந்து படகில் பயணம் செய்வதை வழக்கமாக்கிக் கொண்டவர்.

தனி ஒருவராகவே படகை கடலில் செலுத்தி 38 ஆயிரத்து 700 கி.மீ. தொலைவைக் கடந்து அக்டோபர் 2009இல் இந்த உலகப் பயணத்தை நிறைவுசெய்தார்.


ஏழுவயதில்

இளம் வயதிலேயே சுறுசுறுப்பும், படிப்பில் புத்திசாலித்தனமும் கொண்ட பிஞ்சுகளைப் பார்த்திருப்பீர்கள். இப்படி ஓரு ,சிறுவன் இங்கிலாந்தில் சாதனை படைத்துள்ளான். வயது 7தான். அவனது பெயர் ஜூட்அள்ளி அந்நாட்டில் 14வயதுக்கு அதிகமானவர்கள்தான் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (10ஆம் வகுப்பு) எழுதுவது வாடிக்கை. ஆனால் 7 வயதான ஜூட் அள்ளி, பள்ளி இறுதிவகுப்பின் கணக்குத்தேர்வை எழுத முடிவு செய்தான். எழுதி வெற்றியும் பெற்றுவிட்டானாம். 7 மாதக் குழந்தையாக இருந்தபோதே நடக்கத் தொடங்கினான், ஒரு வயதிலேயே பேசத்-தொடங்கி விட்டான் என்கிறார் ஜூட்அள்ளியின் தாய்.

 

Archives

பெரியார் பிஞ்சு

2009

?பெரியார் பிஞ்சு

2008