சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்?
அண்ணா
தம்பிமார்களே! எங்கள் சுயமரியாதை இயக்கம் ஏன் தோன்றியது என்பதைப் பற்றிச் சொல்லுகிறேன். கேளுங்கள்!
உலகத்திலேயே நம் நாட்டில்தான் ஒரு அதிசயமான அக்-கிரமம் உண்டு. அதுதான் பிறவியிலேயே ஒருவன் உயர்ந்-தவன், அதாவது உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். மற்-றொரு-வன் தாழ்ந்தவன். அதாவது தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்-தவன் என்று ஏற்படுத்தப்பட்டிருப்பதாகும். உங்களுக்கு இன்னும் நன்றாக விளங்கும்படி சொல்லுகிறேன். கவனமாகக் கேளுங்கள்!
இதோ! உங்களுடன் இருக்கும் ராமசுப்பு பிறவியில் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன். அதாவது பார்ப்பனன், முதல் ஜாதியைச் சேர்ந்தவன். அதற்கடுத்தாற்போல் நிற்கும் சிவன் பிறவியில் சூத்திரன். நாலாம் ஜாதியைச் சேர்ந்தவன். அதோ அந்தக் கடைசியில் நிற்கும் கருப்பன் பிறவியிலேயே தீண்டப்-படாதவன். அய்ந்தாவது ஜாதியைச் சேர்ந்தவன், பள்ளிக்-கூடத்தில் நாங்கள் எல்லாம் ஒன்றாகத்தானே இருக்கி-றோம்; ஒன்றாகத்தானே விளையாடுகி-றோம். எங்களுக்குள் எவ்-வித வித்தியாசமும் கிடையாதே, என்று நீங்கள் சொல்லு-வீர்கள்.
வாஸ்தவம்தான். பள்ளிக்கூடத்தில் வித்தியாசம் பாராட்டக் கூடாது என்பது சர்க்கார் சட்டம். அந்த சட்டம் வருவதற்கு முன்னால் எந்த நிலைமை இருந்தது தெரியுமா? கருப்பனைச் சேர்ந்தவர்கள் பள்ளிக்கூடத்தில் சேர்த்துக் கொள்ளப்-படுவதே கிடையாது. சுயமரியாதை இயக்கம் வேலை செய்த பிறகு, சர்க்-கார் சட்டஞ் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்-பட்டது. அந்தச் சட்டம் வந்த பிறகு, பள்ளிக்கூடத்தில் ஜாதி வித்தியாசத்தை வெளிக்குக் காட்டிக்கொள்ள முடியாமல் போய்விட்டது.
அது ஒரு புறமிருக்க, நம் நாட்டில் இந்த ஜாதி வித்தி-யாசம் எப்பொழுதுமே இருந்து வந்ததா? அல்லது எப்-பொழுது முதல் இருந்து வருகிறது-? என்பதை நீங்கள் அறிய விரும்புகிறீர்கள் அல்லவா? ஆம். விவரமாகச் சொல்லுகிறேன். கேளுங்கள்!
சரித்திர காலத்திற்கு முன்பு இருந்தே இந்த நாட்டிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து வரு-கிறவர்கள் திராவிடர்கள், அதனால் தான் நமது நாட்டுக்கும் திராவிடம் என்று வழங்கப்பட்டு வந்தன. திராவிடமக்கள் ஆதியில் பேசிவந்த மொழி தமிழ் ஒன்றேதான். ஆனால் நாளாவட்டத்-தில் தமிழிலிருந்து தெலுங்கு, கன்னடம், மலை-யாளம் என மூன்று மொழிகள் குறிப்பிடக்கூடிய-தாய்த் தோன்றின. இன்று இந்த நான்கு மொழி-களும் பேசப்படும் பிரதேசம்தான் நமது திராவிட நாடு. இப்போது இதைத்தான் சென்னை மாகாணம் என்று சொல்லுகிறார்கள்.
நமது திராவிடத்தில் அன்று வாழ்ந்து வந்த நமது முன்னோர்களிடத்தில் ஜாதி என்பதே கிடை யாது. எல்லோரும் ஒரு குலம் என வாழ்ந்து வந்தனர். இன்னொரு முக்கிய விஷயமும் சொல்லு-கிறேன். தமிழ் மொழியிலேயே ஜாதி என்ற வார்-த்-தையைக் குறிக்கும் சொல்லே கிடை-யாது. இதிலிருந்தே நம்மிடையே ஆதியில் ஜாதி கிடை-யாது என்பது நன்கு விளங்குகிறதல்லவா? ஜாதி வித்தியாசமில்லாமல் நம் நாட்டில் மக்கள் அனைவரும் ஒன்று பட்டு வாழ்ந்து வந்த காலம் ஒன்றிருந்தது. அக்காலத்தில்தான் மத்திய ஆசியா-விலிருந்து பிழைக்க வந்தார்கள் ஆரியர்கள். இவர்கள் முதலாவதாக வடக்கே சிந்து, கங்கை சமவெளிப் பிரதேசத்தில் தங்கினார்கள். நாள-டைவில் அங்கேயே நிலையாக இருந்து கொண்டு நாடாளவும் தொடங்கி விட்டார்கள். அவர்கள் ஆண்டு வந்த இடத்திற்கு “ஆரிய வர்த்தம்’’ என்று சொல்லப்படுகிறது. ஆரியர்களிடையே பிர்ம, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் என நான்கு வருணங்கள் உண்டு. பிறவியிலேயே உயர்வு, தாழ்வு உண்டு என்பதை அவர்களது வேத, சாஸ்-திரங்கள் கூறுகின்றன.
ஆரிய மன்னர்கள் ஆரிய வர்த்தத்தை ஆண்டு வரும் நாளில் ஆரியப்பார்ப்பனர்கள் தெற்கு நோக்கி யாத்திரை வந்திருக்கிறார்கள். தெற்கே நம் நாட்டிற்கு வந்த சமயத்தில் நமது முன்னோர்கள் அவர்களை எதிர்த்தார்கள். அவர்---களு--டைய செய்கையான யாகம் செய்தல், மது அருந்து-தல், மாமிச உணவு உட்கொள்ளு-தல் முதலான காரியங்கள் நம் நாட்டு மக்களு-க்குப் பிடிக்க-வில்லை. அதனால் அவர்களை வெறுத்தார்கள்.
எனவே, முதலில் நம் நாட்டு மன்னர்களிடம் செல்வாக்குப் பெறப் பலவகையிலும் முயற்சித்து வெற்றியும் பெற்றனர். மன்னர்களையெல்லாம் “நீங்கள் மஹா விஷ்ணுவின் அவதாரம்’’ என்றெல்லாம் கூறி எப்படியெப்படியோ தங்கள் கைவசப்படுத்திக் கொண்டனர். அவர்களது கொள்கையை ஒப்புக்கொள்ளாது ஒரேயடியாகவே எதிர்த்து வந்த மன்னர்களைக் சதிசெய்து ஒழித்ததாகவும் தெரிகிறது. உதாரணத்துக்காக “இரணியன்’’ கதையைக் கூறலாம். அதைத் தனியாக ஒரு நாளைக்குக் கூறுகிறேன்.
மேற் சொன்னபடி நமது மன்னர்களைத் தங்கள் கைவசப்படுத்திக் கொண்டவுடன், முதலாவதாக ஆரியப் பார்ப்பனர்கள் செய்த வேலை ஜாதிப் பாகுபாடுதான்.
இன்றைக்கும் நம் நாட்டில் நாம் 97 பேராகவும், ஆரியர்கள் 100_க்கு 3 பேராகவுமே இருந்து வருகிறோம். இவ்வாறு மிக மிகக் குறைந்த அளவு எண்ணிக்கையுள்ள சமூகமாய் இன்றைக்கும் இருக்-கின்றார்கள். அப்படியானால் முன்பு எவ்வளவு குறைவாய் இருந்திருப்பார்கள். இதனாலேயே, என்றைக்கு இருந்தாலும் திராவிடர்கள் நம்மை ஒரு நாளைக்குத் துரத்தியே தீருவார்கள் என்று கருதினார்கள். அதனால் நமக்குள் பற்பல ஜாதி-களை ஏற்படுத்திவிட்டார்கள். நம்மிலேயே ஒரு-வரையொருவர் கேவலமாகவும், இழிவாகவும் பேசிக்-கொள்ளச் செய்தனர். என்றும் ஒன்று சேராமல் இருப்பதற்காக வேண்டிய காரியங்களை யெல்லாம் செய்து முடித்தார்கள். இதற்காகத்தான் ஜாதிகளை நம்மிடைய ஏற்படுத்திவிட்டார்கள். இதற்கு அந்தக் காலத்திய மன்னர்கள், ஆரியப் பார்ப்பனர்களுக்கு ஆதரவாக இருந்து விட்டனர். நமது மன்னர்களின் ஆதரவைக்கொண்டு, நமக்குள் ஜாதிகளை வகுத்து, எல்லா ஜாதிகளுக்கும் உயர்ந்த ஜாதியினராகத் தங்களை வைத்துக் கொண்டனர்.
நமது மன்னர்களுக்குக் குருவாகவும் விளங்-கினார்கள். இந்த ஆரியர்களைக் குருவாகக் கொண்டதன் விளைவாகத்தான், நமது மன்னர்-கள் அடியோடு நாசமாய்ப் போனார்கள். எக்-காலத்தும், யாருக்கும் அடிமையாகாத நம்நாடு, பிறகு வெள்ளையனுக்கு அடிமைப்பட்டது இவை-களைப் பற்றி யெல்லாம் விரிவாகப் பிறகு சொல்லுகிறேன்.
இதுவரை நான் சொன்னதிலிருந்து நமக்குள் ஜாதி வித்தியாசங்கள் யாரால்? எப்பொழுது? எதற்-காக? ஏற்பட்டது என்பதைப் புரிந்து கொண்டிருப்-பீர்கள் என்று நம்புகிறேன். இந்த ஜாதி வேற்று-மையை அடியோடு ஒழிக்க வேண்டும். திராவிடர்-கள் ஒன்று பட்டு வாழவேண்டும். இதற்காகத்தான் சுயமரியாதை இயக்கம் தோன்றி-யது என்பதை உணருங்கள். |