புதிய சூரியன் புதிய பூமிகள்

அறிவை விரிவு செய்;விசாலமாக்கு என்றார் பாவேந்தர் பாரதிதாசன். அறிவியலையும் விரிவுசெய்து பல புதிய கண்டுபிடிப்பு-களைச் செய்கின்றனர் விஞ்ஞானிகள்.அண்டவெளியை ஆராய்வதில் நாளுக்கு நாள் முன்னேற்றம் கண்டுவருகின்றனர்.பல புதிய கோள்களையும் கண்டறிந்த அவர்கள் அண்மையில் புதிய சூரியன் ஒன்றையும் கண்டுபிடித்துவிட்டனர்.கடந்த ஜூலை மாதம் இந்த தகவல்தான் உலகை வியக்க வைத்த அறிவியல் செய்தி. இங்கிலாந்து நாட்டின் லண்டனில் உள்ளது ஷெபீல்ட் பல்கலைக்கழகம். இதன் விண்ணியல் துறையின் விஞ்ஞானி பால் கிரவுதர் (paul crowther) என்பவர் தலைமையில் அமைந்த ஒரு குழுவினர், விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அப்போது தொலைநோக்கி வழியாக தரந்துலா நெபுலா என்ற நட்சத்திர கூட்டத்தை ஆராய்ந்தனர். அப்போது சூரியனுக்கு நெருக்கமான நட்சத்திர கூட்டத்தில் இரண்டு குழுக்கள் இருப்பதை அறிய முடிந்தது. அவற்றில் ஒரு நட்சத்திர கூட்டத்தில் பெரும் வெளிச்சத்துடன் மிகப் பெரிய நட்சத்திரம் ஒன்றைக் கண்டுள்ளனர். அதன் அளவை கணக்கிட்டபோது அது நாம் காணும் சூரியனை விட 320 மடங்கு பெரியதகவும், 1 கோடி மடங்கு வெளிச்சம் உடையதா கவும் இருப்பது தெரியவந்தது. இதுவரை இல்லாத மெகா அளவில் புதிய நட்சத்திரத்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆர்எம்சி 136ஏ என்ற அந்த நட்சத்திரத்திற்கு மான்ஸ்டர் ஸ்டார் (மாபெரும் நட்சத்திரம்) என்று பெயரிட்டுள்ள விஞ்ஞானிகள்,அது தோன்றியபோது இப்போதுள்ள அளவைவிட பெரிதாக இருந்திருக்கும் என்று கூறுகின்றனர்.
மேலும் அதைச் சுற்றி பல நட்சத்திரங்கள் 40,000 டிகிரிக்கு வெப்பமாக இருப்பதும் ஆராய்ச்சியில் தெரிய வந்தது. இந்த புதிய கண்டுபிடிப்பு பற்றி பால் கிரவுதர் கூறும்போது, எடையில் சூரியனைவிட இது 265 மடங்கு அதிகம். அதிக வெப்பம் காரணமாக இதுபோன்ற நட்சத்திரங்கள் தன்னைத் தானே எரித்து அழியக்கூடியவை. அதனால், பூமியைவிட பல மடங்கு அதிக வெப்பம் கொண்டவை. இதுபோன்ற வெப்ப நட்சத்திரங்கள் 30 லட்சம் ஆண்டுகள் வரைகூட இருக்கும். நட்சத்திரக் கூட்டங்-களுக்கு இடையே இவை இருப்ப-தால் தூரம் காரணமாக இவற்றை அடையாளம் காண்பது சிரமம் என்றார். சூரியனை விட 150 மடங்கு பெரிய நட்சத்திரம் மட்டுமே இதற்கு முன் கண்டு-பிடிக்கப்பட்டுள்ளது. அதைவிட 2 மடங்கு பெரிய மான்ஸ்டர் ஸ்டார் இருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பால், இதைவிட பெரிய நட்சத்திரங்கள் அதிகளவில் ஏற்கனவே இருந்-திருக்கக்-கூடும் என்றும் விஞ்ஞானி பால் கிரவுதர் தெரிவித்தார்
 |
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாஸா அனுப்பியுள்ள கெப்லர் விண்கலம் 5 புதிய சூரிய குடும்பங்களையும் (Solar systems) 706 புதிய புதிய கிரகங்களையும் (Planets) கண்டுபிடித்துள்ளது. இதில் 140 கிரகங்கள் பூமியைப் போன்றே உள்ளதும் தெரியவந்துள்ளது.
இந்த புதிய சூரிய குடும்பங் களும், கிரகங்களும் நமது பூமி அமைந்துள்ள பால்வெளி மண்டலத்திலேயே (Milky Way Galaxy) அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விண்வெளிக் கலம் செயல்பட ஆரம்பித்து 6 வாரம் தான் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக் குறுகிய காலத்தில் இத்தனை கண்டுபிடிப்புகளை நடத்தி சாதனை படைத்துள்ளது.
நமது சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள சூரிய மண்டலங்களில் இருக்கும் 140 கிரகங்கள் நிலம், நீருடன் பூமியைப் போன்றே உள்ளன. உயிர்கள் உருவாகத் தேவையான நீர் உள்ளதால் இங்கு அடிப்படை உயிரினங்கள் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
நமது பால்வெளி மண்டலத்தில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 100 மில்லியன் நட்சத்திரங்கள் உயிரினங்கள் வாழ சாத்தியமான கிரகங்களாக இருக்கலாம் என்று கெப்லர் விண்வெளிக் கலத்தை அனுப்பிய ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் விண்வெளி ஆய்வுப் பிரிவின் தலைவரான பேராசிரியர் டிமிடார் சசலேவ் தெரிவித்துள்ளார்.
இந்த கெப்லர் விண்கலம் ஓராண்டுக்கு முன் ஏவப்பட்டது. ஆனால், கடந்த மாத மத்தியில் தான் பால்வெளிமண்டலத்தின் பகுதியை எட்டிப் பிடித்து தனது ஆய்வைத் தொடங்கியது.
பால்வெளி மண்டலத்தில் உளள சிக்னஸ், லைரா, டிராகோ நட்சத்திர மண்டலங்களில் உள்ள அதிவேகத்தில் பயணிக்கும் சுமார் 1 லட்சம் நடத்திரங்களை தொடர்ந்து கண்காணித்து வரும் இந்த விண்கலம், அதன் ஒளி அளவில் ஏற்படும் மாற்றங்களை தனது 95 மெகா பிக்சல் கேமராக்கள் உதவியோடு பதிவு செய்து, பல்வேறு அலைவரிசைகளில் பிரித்து ஆய்வு செய்து, நாஸாவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.
இந்த விண்கலம் கண்டுபிடித்துள்ள பூமியைப் போன்ற கிரகங்களில் CoRoT - 7b மற்றும் Wasp-17b ஆகியவை முக்கியமானவை. இவை பூமியோடு மிகவும் ஒத்துள்ளன. இதில் CoRoT - 7b பூமியை விட 5 மடங்கு பெரியது. Wasp-17bயின் விட்டம் 2 லட்சம் கி.மீ. ஆகும் (பூமியின் விட்டம் 12,000 கி.மீ தான்).
ஜெர்மனியை சேர்ந்த ஜோகானஸ் கெப்லரின் மூன்றாவது விதியின் அடிப்படையில் தான் இந்த விண்கலம் தனது ஆராய்ச்சியை மேற்-கொண்டுள்ளது. இதனால் தான் இதற்கு கெப்லர் விண்கலம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
|