கணிதப் புதிர்


விளையாட்டுப் புதிர்
பிஞ்சுகளே.. இது புதிய பகுதி.விளையாட்டு தொடர்பான உங்கள் அறிவை சோதிக்கும் கேள்விகள் இதில் கேட்கப்படும்.அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடை எழுது வோருக்கு பரிசுகள் உண்டு.பரிசும் விளையாட்டு தொடர்பாகவே இருக்கும். பங்கு பெறுங்கள். பரிசுகளைத் தட்டிச்செல்லுங்கள்.
கேள்விகள்
1.அண்மையில் உலகக் கோப்பைக் கால்பந்துப் போட்டி எந்த நாட்டில் நடந்தது?
2.அதில் எந்த நாட்டு அணி வெற்றி பெற்றது?
3.இறுதிப்போட்டியில் சிறந்த வீரருக்கான பரிசு பெற்றவர் யார்?எந்த நாட்டவர்?
4.பன்னாட்டுக் கால்பந்துப் போட்டிகளில் ஒரு அணியில் எத்தனை பேர் இருப்பார்கள்?
5. திஷீஷீதீணீறீறீ என அழைக்கப்படும் கால்பந்து விளையாட்டின் இன்னொரு பெயர் (இங்கிலீஷில்) என்ன?
விடைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 15.8.2010
விடுகதைகள்
1. நீருக்குள் இருக்கும்; மீனும் அல்ல. வெளியில் வந்தால் எரியும்; நெருப்பும் அல்ல அது என்ன?
2. ஊர்ந்து தவழ்ந்து அலையும், ஊழியந்தனில் உயரும், கூர்ந்து நகர்ந்து எங்கும் கூடி இரையைச் சேர்க்கும், கண்ணில்லாச் சிறிய உயிர். அது என்ன?
3. பனி ஊரில் பிறந்த பழம், பார்க்கச் சிவப்புப் பழம், தினம் ஒன்று சாப்பிட்டால் மருத்துவரை விரட்டும் பழம். அது என்ன?
4. முட்டையிடும் குஞ்சு பொரிக்காது, கூட்டில் குடியிருக்கும், கூடு கட்டத் தெரியாது. குரலில் இனிமையுண்டு, சங்கீதம் தெரியாது. அது என்ன?
5. எட்டெழுத்து ஊர் அதுவாம், யார்க்கும் தெரிந்த ஊர் அதுவாம், முதலும் இரண்டும் அழகாகும். மூன்றும் நான்கும் பதிலாகும். அய்ந்தும் ஆறும் மருந்தாகும். ஏழும் எட்டும் அடிமரமாம். அந்த ஊர் எந்த ஊர்?
6. ஆடை ஊடுத்தியிருக்கும் பெண்ணல்ல; அதனுள்ளே முத்து இருக்கும்; சிப்பியல்ல, தாடியுண்டு கிழவனல்ல மக்களுக்கு உணவாகும். அது என்ன?
7. உச்சியில் பூவிருக்கும் ஊருணிக் கரையிலிருக்கும் வெள்ளம் புரண்டு வந்தாலும் அவரை வீழ்த்த முடியாது. அது என்ன?
8. பக்கமெல்லாம் முள்ளிருக்கும் பலாக்காயல்ல. உள்ளே வெளுத்திருக்கும் தேங்காயல்ல. உருக்கினால் நெய்வடியும் வெண்ணெய் அல்ல அது. என்ன?
விடைகள்:
1. பாஸ்பரஸ், 2. எறும்பு, 3. ஆப்பிள், 4. குயில், 5. திருவிடைமருதூர், 6. மக்காச்சோளம், 7. நாணல், 8. ஆமணக்குக்காய்
|