மனித இன வரலாறு - இடங்களைத் தேடி..
மு.நீ.சிவராசன்

கி.பி. 1768 இல் எண்டவர் (Endeavour) என்ற கப்பல் இங்கிலாந்திலிருந்து பயணித்தது. அதன் கேப்டனாக இருந்தவர் ஜேம்ஸ் குக் (1728 _ 79). அக்கப்பல் அறிவியல் பயணமாகப் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தகித்தித் தீவுக்குச் சென்றது. அக்காலத்தில் தெற்குப் பசிபிக் பெருங்கடலைப்பற்றிச் சிறிதளவே அய்ரோப்பியர்கள் அறிந்திருந்தனர். அதுவும் டச்சுக் கடல் பயணிகளிடமிருந்து தெரிந்து கொண்டனர்.
ஜேம்ஸ் குக் மேலும் இட ஆய்வைச் செய்ய விரும்பினார். அவர் மூன்று பெரிய கடல் பயணங்களைச் செய்தார். அவற்றினால் அவர் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பசிபிக் பெருங்கடலில் இருந்த தீவுகளின் கடல்கரைகளை வரைபடமாக எழுதினார். மேலும், அதுவரை யாருமே பயணம் செய்யாத தெற்குப் பகுதிகளில் பயணம் மேற்கொண்டார்.
ஜேம்ஸ் குக் பயணம் செய்த எண்டவர் என்ற கப்பலின் படத்தை உற்று நோக்குங்கள். அதில் மூன்று பாய்மரங்கள் இருந்தன. அது மூன்று அடுக்குகள் கொண்ட கப்பலாகும். அது சுமார் 30 மீட்டர் நீளமானது.
அடித்தளத்தில் நீண்ட பயணத்திற்கு வேண்டிய பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. வைட்டமின் சி குறைவால் ஏற்படும் ஸ்கர்வி என்ற நோயிலிருந்து தம் மாலுமிகளைக் காப்பாற்றக் கோசுக் கீரையையும், ஆரஞ்சுப் பாகுவையும் அவர்களுக்கு அளித்தார். இரண்டாம் தளத்தில் பயணிகள் தங்கும் அறைகள் உண்டு. மேல் தளத்தில் மாலையில் மாலுமிகளும், பயணிகளும் ஓய்வாகப் பொழுதைக் கழிப்பர். மேலும், மேல் தளத்தில் தூரத்துப் பொருள்களைத் தெளிவாகப் பார்க்க டெலஸ்கோப்புகள் பொருத்தப்பட்டுள்ளதைப் பார்க்க.
பள்ளியில் ஒருநாள்:
எத்தியோப்பியா போதிக்கும் பாடம்
என் பெயர் காமினி பொன்சுந்தரி.நான் சென்னை கோடம் பாக்கம்,பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிறேன்.எங்கள் பள்ளியில் பாடநேரம் தவிர பிற நேரங்களில் விளையாட்டு போன்ற தனித்திறமைகளைக் கற்றுக்கொள்வோம்.மேலும் பொது அறிவு தொடர்பான நிகழ்ச்சிகளும் எங்கள் பள்ளியில் நடத்துவார்கள். கடந்த மாதம் ஒரு நாள் உயிரினங்களின் பல்வகைத்தன்மை (bio diversity) குறித்து ஒரு நிபுணர் சொற்பொழிவு ஆற்றினார்.அவர் பெயர் அருள் தந்தை ராயப்பன்.அவர் பேசும்போது சில படக்காட்சிகளையும் காண் பித்தார்.
அப்போது அவர் தான் ஆய்வுக்காக ஆப்பிரிக்கா சென்றதாகவும்,அங்கு ஆறு மாதங்கள் தங்கி இருந்ததாகவும் சொன்னார்.அங்கே உள்ள எத்தியோபியா நாடு தனக்குப் பிடிக்கும் என்றார்.ஏனென்றால்,அங்கு ஒவ்வொருவரும் தங்கள் பிறந்த நாளுக்கு ஒரு மரக்கன்றை நடுவார்களாம்.தங்கள் குழந்தையின் முதலாம் பிறந்த நாளிலிருந்தே மரக்கன்று நடும் வழக்கத்தைக் கடைப்பிடிக் கிறார்களாம்.எழுபது வயது முதியவர் ஒருவர் அவரை ஒரு தோப்புக்கு அழைத்துச் சென்றாராம். அங்கு உள்ள மரங்களை எல்லாம் காட்டி,இந்த மரங்களை எல்லாம் நட்டது நான்தான்.ஒன்றாவது பிறந்த நாளில் இருந்து நட்டுவருகிறேன்என்று கூறினாராம்.இந்தச் செய்தி என்னை மிகவும் கவர்ந்தது.நாமும் இதுபோல பிறந்த நாளுக்கு மரக்கன்று நட்டால் என்ன என்று எங்கள் வகுப்பு மாணவிகள் பேசிக்கொண்டோம். அதன்படியே செய்ய முயலுவோம் என்றும் முடிவுசெய்து கொண்டோம்.
|